விகடனிலிருந்து...
தடுப்பூசி போடுவதை அதிகரிக்கும் தந்திரமாக கொரோனா எண்ணிக்கையை அதிகரிக்கின்றனர் என்கிறார்கள் வேறு சிலர். இப்படி இன்னும் நிறைய விஷயங்கள் அடுக்கப்படுகின்றன.
ஆனால், அவை வெறும் யூகங்கள்தான் என்று கடந்துபோகும் அளவுக்கு அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை.
தடுப்பூசி போடுங்கன்னு சொல்றீங்க. கட்டாயம் இல்லைன்னாலும் மறைமுகமா எல்லாரையும் கட்டாயப்படுத்துறீங்க. தடுப்பூசி போடுறது தப்புன்னு நான் சொல்ல வரலை. ஆனா, அதுகுறித்து முழுமையா அறிவியல்பூர்வமா ஆய்வு செஞ்சுட்டீங்களா?
இரண்டு டோசேஜ் தடுப்பூசியும் போட்ட பிறகு, கொரோனா வராதுன்னு உங்களால சொல்ல முடியுமா? முடியாது,
ஏன்னா இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட பிறகும் நிறைய பேர் கொரோனாவால பாதிக்கப்பட்டிருக்காங்க. கேட்டா 81 சதவிகிதம் தான் செயல்திறன் இருக்கும்னு சொல்லிருக்கோம்னு சொல்லுவாங்க. சரி ஓகே. அதை விட்ரலாம். இதனால் எந்தவிதமான பக்க விளைவுகளும் வராதுனு உங்களால சொல்ல முடியுமா? முடியாது.
ஏன்னா இதுவரைக்கும் இந்தியால 65 பேர் தடுப்பூசியால் பின் விளைவுகள் ஏற்பட்டு இறந்திருக்காங்க. ஆனா, அரசு இதுவரை 2 பேர்தான் இறந்துள்ளதா சொல்லுது.
பின் விளைவுகளை மறைக்காம பொதுவெளியில் சொல்லுங்கனு பல வைராலஜிஸ்ட் சொல்லிட்டிருக்காங்க. தடுப்பூசியால் ஏற்படும் பின் விளைவுகள் மறைக்கப்படுது.
மும்பையில் இரண்டாவது தடுப்பூசி போட்டு கண்காணிப்பில் இருந்த ஒருத்தர் இறந்திருக்கார். இறப்பிற்கான காரணம் தெரியலைனு சொல்லியிருக்காங்க. தடுப்பூசி போடப்பட்ட பிறகு நடக்கும் மரணங்களை இவங்க அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யுறதில்லை. தடுப்பூசி போட்ட பிறகு, ஒருத்தர் ஹார்ட் அட்டாக்கில் இறக்கிறார்னா ஒருநாளைக்கு நூற்றுக்கணக்கான பேர் ஹார்ட் அட்டாக்ல சாவுறாங்கப்பான்னு அசால்ட்டா கடந்துபோறாங்க...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.