ஒரு தடவை ஒரு சைனாகாரர் கோவா க்கு டூர் வந்தாரு...
ஏர்போர்ட்ல இறங்கி வாடகைக்கு ஒரு டாக்ஸி பிடிச்சார்...
வழியில ஒரு பஸ்ஸ பார்த்தார். உடனே சொன்னார்.. இங்க உள்ள பஸ் எல்லாம் ரொம்ப மெதுவாகவும், சத்தமாவும் இருக்கு.. சைனா ல பஸ்கள் எல்லாமே செம ஸ்பீடா ஓடும்...
கொஞ்ச தூரம் போன உடனே ஒரு ரயில்வே பிரிட்ஜ் வந்தது. அதுல ஒரு ட்ரெயின பார்த்தாரு.. உடனே சொன்னார்.. இங்க உள்ள ட்ரெயின் கூட மெதுவா தான் போகுது.. சைனா ல ட்ரெயின்கள் எல்லாமே செம ஸ்பீடா ஓடும்...
வழி நெடுக இப்படி சொல்லிட்டே வந்தார். டிரைவர் எதுவுமே சொல்லல...
இறங்க வேண்டிய இடம் வந்ததும், சைனா காரர் மீட்டர் ல எவ்ளோ காட்டுது, எவ்ளோ வாடகை ன்னு கேட்டார்...
டிரைவர் 5000ரூபா ன்னார்...
அதிர்ச்சியான சைனாகாரர், \'என்ன விளையாடுறியா.. உங்க ஊர்ல பஸ் மெதுவா போகுது, ட்ரெயின் மெதுவா போகுது.. எல்லாமே மெதுவா தான் போகும்ன்னா, எப்படி மீட்டர் மட்டும் இப்படி வேகமா சுத்தும்\'ன்னு கேட்டார்...
அதுக்கு டிரைவர் அமைதியா சொன்னார்.. ஏன்னா, மீட்டர் மட்டும் \'மேட் இன் சைனா\' ( சைனா ல செஞ்சது) ன்னு...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.