பெண்களை நிர்வாணமா பார்த்து பார்த்து பழகிட்டா வரும் காலங்களில் பெண் உடல் காமப் பொருளாக இருக்காதாம் 😐
"அதனால இப்பவே நிர்வாணமா பார்த்து பழகலாம் வாங்க புரட்சி தோழினு" அடுத்த வீட்டு பெண்களை அம்மணமா பாக்க திராவிட காடையர்கள் அலைகிறார்கள்..
"அதெல்லாம் தப்பு பா".. அப்படினு தமிழ் தேசியவாதிகள் யாராவது பேசிட்டா..
இது Sex education, Normalising Nude, ஆதிகாலத்தில் அந்தி சாயும் நேரத்தில் என எதை எதையோ சொல்றானுங்க..
அதில் ஒரு விஞ்ஞான திராவிட குட்டி இது "சைன்ஸ்" மேன். உங்களுக்கு எல்லாம் அறிவியல் தெரியலை...
நாங்க நிலாவுல நாலாவது மாடியில குடியிருக்கோம்னு சொல்றானுங்க..
வேறு வழி இல்லை நடுமண்டைல நச்சுனு ரெண்டு போடு போட்டு..
நீ இன்னும் ஆயிரம் வருஷத்துக்கு அம்மணக்கு*டியா சுத்தினாலும் பெண் உடலின் மேல் ஆணுக்கு இருக்கும் காம பார்வை போகாதடா பைத்தியக்கார பயலே.. காரணம்..
அது பரிணாமவியல் சார்ந்தது! மரபியல் சார்ந்தது! பாலின ஈர்ப்பு சார்ந்தது..
பொதுவாக ஒரு பெண் வயதுக்கு வரும் காலத்தில் அதாவது Puberty , விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் உடலுறவுக்குத் உடல்ரீதியாக தயாராகும் காலத்தில், அந்தப் பெண்ணின் உடலில் மார்பகங்கள் பெரிதாகும், அந்தப்பெண்ணின் புட்டம் பெரிதாகும்.
இது எதற்கு பெரிதாகிறது என்று தெரியுமா டா முட்டாப் பயலே?
இது பெரிதாவதை பார்க்கும் பொழுதுதான் ஒரு ஆணுக்கு அந்தப் பெண் பருவத்தை அடைந்த பெண் என்பது தெரியவரும்.(sexual maturity indicators)..
காட்டில் காட்டுமிராண்டியாக வாழ்ந்த மனிதன் இவ்வாறு பருவமடைந்த பெண்களோடு உடலுறவு கொண்டு இனப்பெருக்கத்தில் ஈடுபடுவான்.
ஆகவே பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்கள் குழந்தைகள் பிறக்கும் பொழுது அதிக பால் சுரக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால், பால் சுரக்கும் பெண்களிடம் குழந்தை இறப்பு விகிதம் குறைவு என்பதால், இயற்கையாகவே பெரிய மார்பகம் கொண்ட பெண்களை அவன் விரும்பும் விதமாக பரிணாமவியல் மனிதர்களை வழிநடத்துகிறது.
இது முழுக்க முழுக்க இயற்கையான ஒரு செயல்.
இதற்கும் பிற்காலங்களில் உருவான கலாச்சார கட்டுப்பாடுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
அதுபோலவே பெரிய புட்டங்கள் கொண்ட ஒரு பெண் கருவுற்ற காலத்தில் சிரமங்கள் இன்றி கருவை தாங்கி சுமக்கும் ஆற்றல் கொஞ்சம் அதிகம் பெற்றிருக்கிறார் . இந்த இரு காரணங்களால் தான் பெரிய புட்டங்கள் பெரிய மார்பகங்களை நோக்கி ஆண்கள் தங்கள் இணையை தேட தொடங்குவார்கள்.
(இவையெல்லாம் மனிதன் மனிதனாக மாறுவதற்கு முன்பாகவே குரங்குகளாக இருந்த காலகட்டத்திலேயே படிப்படியாக வந்த பரிணாமவியல் ஆகும்)..
இது போலவே பெண்களுக்கும் நல்ல திடகாத்திரமான உடல் தோற்றம் கொண்ட ஆண்கள் மீது பாலின ஈர்ப்பு இருக்கும். உடலில் அதிக பலம் கொண்ட ஆண் பெண்ணுக்கு ஏற்படும் ஆபத்திலிருந்து அந்தப் பெண்ணை காப்பாற்ற முடியும், குழந்தைகளுக்கு தேவையானதையும் வேட்டையாடிக் கொண்டு வந்து கொடுக்க முடியும்.
இவை அனைத்துமே பரிணாமம் தானே ஒழிய கலாச்சாரம் புகுத்தியது இல்லை.
பெண்கள் குழந்தை பெறக்கூடிய காலமும், அந்த குழந்தையை வளர்க்க கூடிய காலமும் மனித இனத்திற்கு மிக அதிகம் என்பதால், இடைப்பட்ட காலகட்டத்தில் பெண்கள் மற்ற ஆண்கள் மீது ஈர்ப்பு பெற்று சென்று விடக்கூடாது என்பதால் ,(அவ்வாறு சென்றால் இருக்கும் குழந்தைக்கு பாதுகாப்பு இன்மை ஏற்படும்) இதே பரிணாமவியல் பெண்கள் ஆண்கள் மீது கொண்ட ஈர்ப்பின் தன்மையை மாற்றி அமைக்கிறது. அவர்கள் ஆண்கள் மீது அதீத அன்பும் உறுதியான காதலும் மாறா பற்றும் கொள்வதோடு மட்டுமல்லாமல் டிபெண்டன்ட் கேரக்டராக வும் அதாவது அதிக சார்ந்து வாழும் தன்மை கொண்டு இருப்பார்கள். இதன் மூலம் அந்தப் பெண் தன் குழந்தையை அந்த ஆணின் தயவோடு சுலபமாக, பாதுகாப்பாக வளர்க்க முடியும்.
இந்த முறையில் தான் அடுத்த தலைமுறை மனிதர்கள் பல லட்சம் ஆண்டுகளாக பரிணமித்து வருகிறார்கள்..
ஆகவே எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பரிணாமவியலை உங்களால் மாற்ற முடியாது, ஒரு ஆண் ஒரு பெண்ணின் உடலின் மீது ஈர்க்கப்பட்டு கொண்டே தான் இருப்பான்...
அதுதான் அவனது இயல்பு! அதுதாண்டா சயின்ஸு..
வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைக்கச் சொல்லும் கையவனே என கிளம்ப வேண்டாம்..
பெண்கள் ஏன் தங்களின் இனப்பெருக்க உறுப்புகளை மறைக்க தொடங்கினார்கள் ஆண்களும் ஏன் அதை மறைக்க தொடங்கினார்கள் என்ற காரணத்தை பார்ப்போம்.
மனிதன் ஆரம்பத்தில் சிறு சிறு குழுக்களாக தான் வாழ்ந்து கொண்டிருந்தான், ஆனால் இந்த வாழ்க்கை முறையில் அவனால் பெரிய சாதனைகள் எதுவும் செய்ய முடியவில்லை, குழு குழுவாக வாழ்வதில் சில நன்மைகள் இருந்தாலும் (நோய்த் தொற்றில் இருந்து தப்புதல் போன்ற வை) அந்த குழுவாக வாழ்வதால் அவனுக்கு பாதுகாப்பு இன்மை அதிகமாக இருந்தது.
காட்டு விலங்குகளோடு சண்டை போடுவதாக இருக்கட்டும் அல்லது வேட்டையாடுவதாக இருக்கட்டும்.. எல்லாமும் கடினமானவை யாகத்தான் அவனுக்கு இருந்தது.
ஆகவே அந்த கூட்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதுபடுத்த தொடங்கினார்கள், இதன் மூலம் பல குழுக்கள் ஒன்றாக இணைந்து பெரும் கூட்டங்களாக மனிதர்கள் வாழத் தொடங்கினார்கள்.
இப்பொழுதுதான் மற்றொரு சிக்கல் இவர்களுக்கு வரத் தொடங்கியது..
உடல் ரீதியாக பல பலமான ஆண்களும் உடல்ரீதியாக இனப்பெருக்கத்திற்கு தயாராக இருக்கும் பல பெண்களும் அதிக எண்ணிக்கையில் வாழும் சூழல்களில், கட்டுக்கடங்காத உணர்ச்சிகளும் அதனால் ஏற்படும் உடலுறவுகள், ஆண்களுக்கு உள்ளான சண்டை என்பவற்றை எல்லாம் கட்டுபடுத்தமுடியாமல் செல்கிறது..
காம உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால்தான் இவ்வாறான சண்டைகளை தவிர்க்க முடியும்,
அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வதால் குழந்தைகளுடைய உயிர் பிழைக்கும் எண்ணிக்கையும் குறைகிறது, பெண்களின் உடல் நலமும் குறைகிறது , இறப்பு விகிதம் அதிகரிக்கிறது.. அதை எல்லாம் உணர்ந்து..
காமத்தை அடக்க வேண்டும் என்ற கோட்பாடு மனித சமூகத்திற்கு முதன்முதலாக தோன்றுகிறது..
இந்தக் கோட்பாட்டின் தொடக்கம்தான் ஆடை என்ற சுய கட்டுப்பாடு ஒன்றை மனிதன் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்கிறான்.(No Alian invasion happen )
பெண்கள் மற்றும் ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகளை மறைப்பது மூலமாக அந்த காம உணர்ச்சி சற்று குறைவதை உணர்ந்த மனிதர்கள் அவற்றை மறைக்க தொடங்குகிறார்கள்.
சில சில சமூகக் கட்டுப்பாடுகளை மரபியல் காரணங்களுக்காகவும் சமூகவியல் காரணங்களுக்காகவும் அவர்கள் உருவாக்க தொடங்குகிறார்கள்.. குழந்தை பெற்றுக் கொள்வதில் கூட சில முறைமைகளை கொண்டு வர தொடங்கினார்கள்.
இப்படித் தொடங்கியதுதான் கலாச்சாரம்.
பண்பாடு என எல்லாமும்.
காம வெறியாட்டத்தில் மானுடம் அழிந்து விடக் கூடாது என்பதற்காக காமத்தை அடக்கி அறிவு சார்ந்த சமூகத்தை நோக்கி நமது முன்னோர்கள் பாடுபட்டு உணர்ந்த அறிவியலால் ஏற்படுத்திய கட்டமைப்புகளை கிறுக்குத்தனம் கொண்டு உடைப்பது மானுடத்திற்கு எதிரான செயல்.
தீயவர் ஆளும் உலகம் தீயதை நோக்கி நகர்கிறது...
ஆகவே விவரம் தெரியாத அப்பாவி பெண்களை உசுப்பேத்தி விட்டு இதுதான் பகுத்தறிவு இதுதான் முற்போக்கு இதுதான் சமூகத்தை நாம் தூக்கி நிறுத்துவது.. என்றெல்லாம் குழப்பி விட்டு கடைசியில் நிர்வாண புகைப்படத்தை பொதுவில் பார்த்து ரசித்து விட்டு. வாழ்த்து மலைகள் பொழிவது அல்ல மனிதம்..
( வாங்க வந்து பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் கதற தொடங்கவும், எப்படியாவது எனக்கு பிற்போக்குவாதி முத்திரை குத்தி அடுத்த வீட்டுப் பெண்களை நிர்வாணமாக பார்த்துவிட வேண்டும் என்று வரும் திராவிடர்களே. எந்த ஒரு புரட்சியும் உங்களிடத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்பதற்கிணங்க உங்க வீட்டு பெண்களிடம் முதலில் இதைப் பற்றி பேசுங்கள், அவர்கள் நீங்கள் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொண்டு புரட்சிகளில் ஈடுபட்டு சமூகத்தை தூக்கி நிறுத்தட்டும்)
ஆனால் ஈர்ப்பு மட்டும் போகாது ராஜா...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.