10/04/2021

கால்டுவெல் முதல் திமுக கருணாநிதி வரை...

 


தமிழ்-திராவிடக் குழப்பங்களுக்குக் காரணம்.

1. இந்தியாவிற்கு வந்த மேற்கத்திய மொழியியல் அறிஞர்களில் சிலர், குறிப்பாக கால்டுவெல் போன்றோர் மொழிக் குடும்பங்களை வகைப்படுத்தும் போது ஒருசில வட இந்திய இலக்கியங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு முடிவெடுத்ததால் வந்த குழப்பமே இன்று வரை தொடர்கிறது.

2. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் குமரிளபட்டர் ‘ஆந்திர - திராவிட பாஷா’ என்று குறிப்பிடுகிறார் என்றும்,  தெலுங்கில் அடங்கும் கன்னட மொழி,  தமிழில் அடங்கும் மலையாளம் மேலும் சிறிய பேச்சு மொழிகளையும் உள்ளடக்கி, இவை உள்ளடங்கிய  தென்னிந்திய மொழிகளுக்கு ‘திராவிட மொழிக் குடும்பம் என்று பெயரிடலாமென கால்டுவெல் குறிப்பிடுகிறார்.

(Robert Caldwell, A Comparative Grammar of Dravidian Languages (1856), 1875, Kavithasaran Pathipagam, Chennai, 2008, p.6)

3. கால்டுவெல் தென்னிந்திய மக்களைக் குறிக்க, மனுஸ்மிருதி, ஐத்திரேய பிராமணம், மகாபாரதம், பாகவத புராணம் ஆகியவற்றில் சொற்களைத் தேடுகிறார். ஆனால் மகாபாரதமோ தமிழர்களைத் தனியொரு பிரிவாகக் காட்டுகிறது.

மகாபாரதத்தில் யுதிஸ்திரன் (தர்மர்) இராஜசூய யாகம் நடத்தும் முன்பு அனைத்து மன்னர்களையும் வெல்ல விரும்பி தம்பி சகாதேவனைப் படையுடன் அனுப்புகிறான். சகாதேவன் தெற்கே ‘திக்விஜயம்’ மேற்கொண்டு

திராவிடர், சோழர், கேரளர் மற்றும் பாண்டியரை வென்றான் என்று மகாபாரதம் கூறுகிறது.

(Maha bharata, ii, 34, 1988).

இங்கே நாம் கவனிக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான்:

தமிழரைக் குறிக்க கால்டுவெல் 'திராவிடர்’ என்ற சொல்லைத்  தவறாகத் தேர்வு செய்தார் என்பதே ஆகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.