03/05/2021

ரத்த அழுத்தம் குறைக்கும் கொடம் புளி...

 


மலபார் புளி என்ற பெயரும் கொடம் புளிக்கு உண்டு. கொடம் புளியைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

கொடம் புளி, கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைக்கும். தென் தமிழகத்தில், மீன் குழம்பு செய்யும்போது, அதில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்க, கொடம் புளியைத்தான் பயன்படுத்துவார்கள்.

கொடம் புளி சுவை மிகுந்தது. ஆனால், சமையலில் அளவாகவே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், உடலில் அமிலத்தன்மையை அதிகரித்துவிடும்.

கொடம் புளியைச் சீராகச் சமையலில் சேர்த்து வந்தால், அழற்சிப் பிரச்னைகள் நீங்கும், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

கொடம்புளியை  ஒரு கப் தண்ணீர்  சேர்த்து,  மூன்று மணி நேரம் ஊறவைத்த பின்னர், விழுதாக  அரைத்துக் கொள்ளவும். இதனுடன், வெல்லப்பாகு, ஏலக்காய்த் தூள், சீரகத் தூள், கறுப்பு உப்பு சேர்த்து, சர்பத் போல அருந்தலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.