10/06/2021

ஜெர்மனியின் சாதனை...

 


தன்னுடைய மின்சார தேவையில் வெறும் 15 சதவீதம் மட்டுமே அனல் மற்றும் அணு மின் நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்துவிட்டு மீதமிருக்கும் அனைத்து தேவையையும் புதிப்பிக்கக்கூடிய ஆற்றலலிருந்து உற்பத்தி செய்து உலக சாதனை படைத்துள்ளது ஜெர்மனி நாடு.

2011 ஆம் புகுஷிமா விபத்து ஏற்பட்டவுடன் 2022 ஆம் ஆண்டுக்குள் அனைத்து அணு மின் நிலையங்களையும் மூடிவிடுவோம் என்று தைரியமாக அறிவித்து, உடனடியாக சூரிய சக்தி, காற்றாலை மின்சார உற்பத்தியில் தனி கவனம் செலுத்தியதன் விளைவு இன்று இந்த நிலையை எட்டியுள்ளது.

தேவையை விட அதிகமாக மின்னுற்பத்தி நடந்து மின் கட்டணங்கள் நெகடிவிற்க்கு (மின்சாரத்தை பயன்படுத்த நிறுவனங்கள் பணம் கொடுக்கும் நிலை) சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனர்ஜிவெய்ண்டே என்ற திட்டத்தை ஜெர்மனி அறிவித்து, 2050 ஆம் ஆண்டுக்குள் அனல் மின் நிலையங்கள் இல்லாத புதுப்பிக்க கூடிய ஆற்றல் மட்டுமே கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்து அன்றைக்கு தேவைப்படும் அளவைவிட அதிக உற்பத்தி செய்யும் திட்டத்தில் உள்ளது.

நாள் ஒன்றுக்கு சில மணி நேரங்கள் மட்டுமே சூரிய ஒளி இருக்கும் ஜெர்மனியில் இதை சாதிக்க முடிகிறதென்றால் அதிக நேரம் சூரிய ஒளி இருக்கும் நம் நாட்டில் நிச்சயம் இதை செய்ய முடியும்.

அணுசக்தி நிறுவனங்களின் லாபத்தை நோக்கத்தில் அரசுகள் செயல்படாமல், மக்களின் தேவைகளை மனதில் வைத்து செயல்படும் அரசுகள் மட்டுமே இதை சாத்தியமாக்க முடியும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.