கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது மருதாணி..
பெண்களின் கைகளுக்கு அழகு சேர்ப்பது மருதாணி தான்..
மருதாணியில் பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளன..
உடலை குளிர்ச்சியாக வைப்பதுடன், நகசுத்தி வராமல் தடுக்கும்..
இதன் வேர்ப்பட்டையை அரைத்து புண்களில் தடவினால் கால் ஆணி, புண் சரியாகும்..
தூக்கமின்மைக்கு தூக்க மாத்திரை சாப்பிடுவதற்கு பதிலாக, மருதாணி பூவினை ஒரு துணியில் சுற்றி, தலையணைக்கு அடியில் வைத்து படுத்தால் தூக்கம் வரும்..
ஒரு சிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்..
இரும்பு வாணலியில் தேங்காய் எண்ணெய் 500 மி.லி விட்டு, இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும்..
இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும், நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் அரைத்து போட்டு காய்ச்சலாம்..
இந்த எண்ணெயை நாளும் தலைக்கு தேய்க்க முடி வளரும், நரைமாறும்..
சிலருக்கு கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல் காணப்படும். இதற்கு குளியல் சோப்புடன் சிறிது மருதாணியையும் அரைத்து பூசி வர கருந்தேமல் சரியாகும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.