உந்தன்
ஓராயிரம் விருப்பங்களில்..
நான் மட்டும்
ஒதுக்கப்பட்ட ஓரமாய்..
ஒய்யாரக்கவிதைகளில்
நீ நனைந்திட..
அழியாக்க(றை)ரைகளாய்
தனிமையில்..
அரங்கேறாத ஆற்றலில்
எந்தன் முத்தங்கள்
அவமதிப்பு சின்னங்களாய்..
அழிவுறா வாழ்வினை வாழ ஆசை..
வழியின்றி...
அடங்கியமர்கிறது ஆன்மா..
ஏற்றுக்கொள்ளா
உந்தன் மனம்தனில்..
மழைநேர தூறலிலும்..
நனைவதாயில்லை மனம்..
கண்ணீர் துளிகள் மேலோங்கிட..
அச்சப்படும் அடிமை நிறம்
பயந்து வாழ்கிறது..
மிரட்டும் விளக்குகளின் கீழே..
திறக்கப்படாத கதவுகளில்
தீண்டாமை விளக்காய்..
தனிமை ஒளிர்வில்
உந்தன் வழிப்பாதைகளில்..
அவளின்றி நானறியா வீதிகளில்..
சடலம் இல்லை... நான்மட்டும்
நடைபிணமாய்.. நடைபிணமாய்...
😒😒😒
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.