07/06/2021

குஜராத் மாடல்.... குஜராத் மாடல்ன்னு ஊர ஏமாத்துன ஊடக அயோக்கியனுங்களா...

 


1. குஜராத்தில் மொத்தம் உள்ள 33 மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா டெஸ்ட் எடுக்க லேப் வசதி கிடையாது. அம் மாநில உயர்நீதிமன்றம் தலையிட்ட பிறகே அந்த மாவட்டங்களில் லேப் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

2. குஜராத்தில் 15 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் சிடி ஸ்கேன் எடுக்கும் வசதி கிடையாது. நீதிமன்றம் கேள்வி கேட்ட போதுதான் இதுவும் தெரியவந்துள்ளது.

3. மார்ச் மாதம் 15 தேதி முதல் தற்போது வரை 6000 பேர் இறந்துள்ளதாக அரசு தரப்பு சொல்கிறது. ஆனால் மருத்துவமனைகளில் கொரோனாவால் இறந்தவர்கள் மற்றும் அடக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை பார்த்தால் அரசு சொல்வதை விட 15 மடங்கு மக்கள் இறந்து போயிருக்கிறார்களாம்.

4. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குஜராத் வரலாற்றிலேயே இல்லாத அளவு மிகவும் மோசமான மாதமாக கருதப்படுகிறது, காரணம் மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை, போதிய மருந்துகள் இல்லை, ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்திகள் பற்றாக்குறை... என்று பட்டியலிடுகிறார் மூத்த அதிகாரி.

5. பொது சுகாதார விசயத்தில் தமிழ்நாடு அல்லது கேரளாவை குஜராத் பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறார் அம்மாநில மூத்த ஐஏஎஸ் அதிகாரி.

விரிவாக வாசிக்க இன்றைய TheHindu MahesLanga...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.