நான் எழுதுகிற கவிதைகள் யாவும்
காதலை பற்றியே இருக்கிறதென
உள்ளுக்குள்ளே குற்ற உணர்வு.
எதை எதையோ எழுதிட
எனக்கும் கூட ஆசைதான்.
இருந்தும் தெரியவில்லை
எதைப்பற்றி எழுதுவதென்று.
நூலகம் சென்றேன்
கவிதைகள் கற்க.
பிரபலாமான கவிஞர்கள்
பிரபலம் பெரும் கவிஞர்கள்
வித விதமான கவிதை புத்தகங்கள்.
வரிசையாக வைக்கப்பட்டு இருந்தது..
தேடினேன்..
தேடினேன்..
நீண்ட நேர தேடலின் பயனாய்
கிடைத்து விட்டது
வைரமுத்துவின் கவிதை..
அவர் கவிதைகளில் நான் பயணிக்க ஆரமித்தேன்..
முடிவேயில்லாமல் சென்றது அவர் கற்பனைகள்..
வரம் வாங்கித்தான் வந்திருக்கிறார் மனிதர்
வைர வரிகளை படைத்திட..
காதலை பற்றி எழுதிய கவிஞர்
என் காதல் நரம்பினை தூன்டியே விட்டார்.
விதவை பெண்ணின் கண்ணீர ஈரம்
என்னில் காயாமல் இருந்தது சில நேரம்..
ஏழைகளின் துயரங்கள்
எனக்குள்ளேயும் எட்டிப்பார்த்தது.
கிராமத்து வாழ்க்கையை
நானும் வாழ்ந்தேன் சில கனம்..
சில நேரம் அரசியல்வாதியானேன்.
சில நேரம் ஆசிரியரானேன்.
பல நேரம் குழந்தையானேன்.
எதை படித்தேனோ
அதை போலவே மாறினேன்..
பயணம் முடிந்தது இனிதாய்.
கவிதை எழுதும் திறனிலே
பக்குவப்படதாய் உணர்ந்தேன்.
காதலை தவிர மாற்றத்தையும்
கவிதையாக்கும் முறையை அறிந்தேன்..
வீட்டிற்கு சென்றேன்.
மேஜை மேல் காகிதம் வைத்தேன்.
காகிதம் மேல் பேனா வைத்தேன்.
பேனா மேல் என் சிந்தையை வைத்தேன்.
யோசித்தேன்…
யோசித்தேன்…
ஆழ்ந்து யோசித்தேன்….
இருந்தும்
காதலை தவிர
ஒரு கருமமும் வரவில்லை...
12/06/2021
எனக்குள் ஓர் குற்ற உணர்வு...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.