30/07/2021

விமரிசனம்...

 


விமரிசனங்கள் பல வகையானவை. அவற்றை எப்படி எதிர்கொள்வது?

காகித அம்பு: சில விமரிசனங்கள் எந்த ஆழமும் அர்த்தமும் இன்றி, மேம்போக்காக திட்டம் எதுவும் இன்றி சொல்லப்படும்.இத்தகைய விமரிசனங்களை அதிக முக்கியத்துவம் தராமல் புறம் தள்ளுங்கள்.

கால்பந்து: சில விமரிசனங்கள், விளையாட்டாக, உங்களின் முக்கியத்துவம் தெரியாமல் நேரம் கழிப்பதற்காக அல்லது நகைச்சுவைக்காக சொல்லப்படும். விளையாட்டு கால்பந்தாக அதைத் திருப்பி அனுப்புங்கள்.

கண்ணாடி: சில விமரிசனங்கள் உங்களுடைய தற்போதைய நிலையை உங்களுக்கு எடுத்துக் காட்டும் கண்ணாடி போல அமையும்.உங்களைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பாக அதைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

கத்தி: சில விமரிசனங்கள் உள்நோக்கோடு உங்களைக் காயப்படுத்துவதற்காகவே திட்டமிட்டு செய்யப்படும். நீங்கள் காயப்பட்டு விடாமல் லாவகமாக கத்தியின் கைப்பிடியைப் பிடிப்பது போல அவர்கள் நோக்கத்தைக் கண்டறியுங்கள். விலகி விடுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.