13/07/2021

நானும் வெயிட்டரும்...

 




நான் வழக்கம்போல் Bar-ல் தனியாக உட்கார்ந்து மூன்று கிளாஸ்களில் தனித் தனியாக மது ஊற்றி குடித்துக் கொண்டிருந்தேன்..

அடித்த சரக்கு பத்தாமல் மீண்டும் பிராந்தி ஒன்று வாங்கி, மூன்று கிளாஸ்களில் ஊற்றி குடித்துக் கொண்டிருந்தேன்.

வெயிட்டர் சற்று நேரம் பார்த்து விட்டு, "சார், நீங்க தப்பா நினைக்கலன்னா ஒன்னு கேட்கலாமா ?"

கேளு........

நீங்க மூணு  கிளாஸ்ல தனித்தனியா வாங்கி குடிக்கிறீங்களே.....ஏன்? புரியல...

இல்லப்பா, நாங்க நண்பர்கள் மூணு பேர். ஒருத்தன் ரஷ்யாவில் இருக்கான், மற்றொருவன் துபாயில் இருக்கான், நான் இங்க சென்னையில் இருக்கேன். நாங்க மூணு பேரும் எப்பவுமே ஒன்னாதான் சரக்கடிப்போம்.

நாங்க மூணு பேரும் ஆளுக்கு ஒரு மூலையா பிரிஞ்சு போனதால, சரக்கு சாப்பிடறதா இருந்தா மூணு கிளாஸ்ல வாங்கி,
மத்தவங்க ஞாபகார்த்தமா அந்த சரக்கை சாப்பிடனும்னு ஒரு சத்தியம் பண்ணியிருக்கோம்.

என் நண்பர்கள் ரெண்டு பேருமே இதை செஞ்சுட்டுதான் குடிப்பாங்க, அதனால தான் என்றார்.

ஆச்சர்யமாக பார்த்தான் அந்த Bar வெய்ட்டர்.

சில நாட்கள் கழித்து, இரண்டு கிளாஸ் மட்டும் தரச்சொல்லி மது வாங்கி குடித்தேன்.

இதைக்கண்ட Bar வெயிட்டர் என்னிடம்  "ரொம்ப ஸாரி சார்," என்று வருத்தப்பட்டான்.

"ஏம்ப்பா என்னாச்சு" என்றார். 

"இல்லை எப்போதும் நீங்க உங்க நண்பர்கள்  ஞாபகார்த்தமா மூணு கிளாஸ்ல வாங்கிக் குடிப்பீங்க. உங்க நண்பர்களில் யாரோ ஒருத்தர் இறந்துட்டாங்க  போலிருக்கு, அதான் இரண்டு கிளாஸ்ல மட்டும் ஊத்தி குடிக்கிறீங்க" என்றான்.

அந்த இரண்டு கிளாஸ் மதுவை, நிதானமாக சிப் பண்ணி குடித்துவிட்டு முழு போதையுடன்  நான் சொன்னேன்... 

"யாருக்கும் எதுவும் ஆகல, நேத்தோட நான் தான் குடியை நிறுத்திட்டேனப்பா அதான் என் நண்பர்களுக்காக இரண்டு கிளாஸ் மட்டும் குடிக்கிறேன்".....

இதை கேட்ட வெயிட்டருக்கு, மயக்கம் தெளிய ரெண்டு நாள் ஆனது....


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.