11/08/2021

சுவாரசியமான ஒரு பேய் திகில் படம் ஓடிக்கொண்டிருந்த்து...

 


மாஸ்க் அணிந்து பாதிபேரே நிறைந்திருந்த அந்த தியேட்டரில்... 

ஒருவர் பாதியில் எழுந்து வெளியில் வந்து அவசரமாக வீட்டுக்குப் புறப்படுகிறார் அவரை பார்த்து திரையங்கின் மேனேஜர் கேட்கிறார்.....

ஏன் சார், படம் பிடிக்கலையா ..? இல்லை பார்க்க ரொம்ப பயமா இருந்ததா சார்..? 

அப்படி எதுவும் இல்லை சார்.. படம் நல்லா தான் இருக்கு...

அப்ப... ஏன் சார் பாதிப்படத்துல எழுந்து போறிங்க... யாராவது பக்கத்து சீட்டு ஆட்கள் யாராவது பிரச்சினை பணணாங்களா..?

அப்படி எல்லாம் எதுவும் இல்லை சார், ஆனா சுவாரசியமா படத்த பார்த்துட்டு இருக்கும் போது.... எனக்குப் பின்னாடி இருந்து ஒரு குரல்..

யோவ்.... தள்ளி உக்காருய்யா உன் தல எனக்கு  மறைக்குதுன்னு... கோபமா அதட்டிச்சு. அதான்.....

அட.... என்ன சார் இதுக்கா கோபப்பட்டுப் போறீங்க... சரி நீங்களும் கொஞ்சம் சமாளிச்சு உக்காந்திருக்கலாமில்ல.

நம்ம பின்னாடி உக்காந்திருக்கிறவங்களுக்கு நம்ம தலை மறச்சுதுன்னா, நாம கொஞ்சம் தள்ளி உக்கார வேண்டியது நியாயம் தானே, சார்?

யோவ், நான் உக்காந்திருந்ததே கடைசி வரிசைல தான் யா...

😜😜😜😜😜

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.