16/08/2021

எதிர்காலத் தமிழகமும் - பாதுகாப்பு...

 


1. காவல் துறை, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு துறையாக மாற்றப்பட வேண்டும்.

குற்றங்களை விட குற்றங்களுக்கான சூழல், வாய்ப்புகள் களையப்பட வேண்டும்.

2. ரௌடிகள், அடியாட்கள், கட்டப்பஞ்சாயத்து அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்.

3. வன்முறையான செயலில் தொடர்ந்து செயல்படும் நபர்களின் உடலில் சிப் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.

4. மாணவர்கள் கல்லூரிப்படிப்பில் ஒரு வருடம் இந்தப் பாதுகாப்பு துறையில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

5. அனைத்து வாகனங்களும் செய்மதியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட வேண்டும்.

ஒழுங்கு மீறி செல்லும் வாகனங்கள், விபத்து ஏற்படுத்திய வாகனங்கள், உடனுக்குடன் கண்காணிக்கப்பட வேண்டும்.

தண்டனைத்தொகை அவர்களின் கணிணி முகவரிக்கு, அல்லது செல்லிட பேசிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

மீறுவோரின் உரிமம் பறிக்கப்பட வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.