04/08/2021

உன்னால் என்றால் மரணமும் பிடிக்கும்...

 



உறக்கம் பிடிக்கும்...
உள்ளே
கனவாக நீ இருந்தால்...

உணவு பிடிக்கும்...
நீ
உருட்டி ஊட்டி விட்டால்...

மயங்குவது பிடிக்கும்...
மயிலிறகாக
உன் மடி கிடைத்தால்...

வர்ணம் பூசுவது பிடிக்கும்...
உன் உதட்டின் மேல்...
என் உதட்டால் இடுவதாய்
இருந்தால்...

மரணம்கூட பிடிக்கும்...
கடைசி மூச்சு...
உன் தோளில் சாய்ந்து
விடுவதாய் இருந்தால்...

என்னுறவே என்றும்
உன் நினைவில் நான்.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.