10/08/2021

ப்ரொபசர் Vs மீ...

 


என் பக்கத்து வூட்டு ஒரு ப்ரொபசர் பரிசோதனைக்காக ஒரு ஆண் எலியை நடுவுல வச்சி ஒரு பக்கம் ஒரு பெண் எலி அடுத்த பக்கம் கொஞ்சம் கேக் வச்சு என்ன நடக்குதுன்னு பார்த்தார்.. 

அந்த எலி ஓடிப்போய் கேக் துண்டை சாப்பிட்டுட்டு பழைய இடத்துக்கே வந்திருச்சு... 

அடுத்து கேக்குக்கு பதிலா ப்ரெட் வச்சாரு.. அப்பவும் அதே போல வந்து ப்ரெட்டை மட்டும் சாப்பிட்டுட்டு போய்டிச்சு... அவரும் வித விதமான தின்பண்டங்களை வச்சுப்பாத்தாரு ... ஹூம்.. அந்த பெண் எலியை திரும்பிக்கூட பார்க்கல... எல்லாத்தையும் சாப்பிட்டுட்டு சமத்தா போய் உக்காந்திருச்சு...

உடனே ப்ரொபசர் பசங்ககிட்ட சொன்னார்... பார்த்தீங்களா.. இந்த எலிக்கு பெண்ணை விட உணவு தான் ரொம்ப முக்கியம்னு தெரிஞ்சிருக்கு...

வேடிக்கை பார்த்துட்டு இருந்த நான்  சொன்னேன்....

சார்.. நீங்க ஏன் அந்த பெண் எலியை மாத்தி பார்க்க கூடாது... ஒரு வேளை அது அந்த எலியோட மனைவியா கூட இருக்கலாம்....

அன்னைக்கி ராஜினாமா பண்ணிட்டு போனவரு தான் அந்த புரொபசர்..?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.