14/01/2022

இலுமினாட்டி - மெர்லின் மன்றோ கொலை...

 


மெர்லின் மன்றோ 1950 களில் பலரின் கணவு கண்ணியாக திகழ்ந்த பேரழகி. ஆலிவுட்டில் மிகப்பெரிய நடிகை...

கொலை : ஆகத்து  , 5 , 1962 (வயது:36).

இறப்புக்கு சொல்லப்படும் கதை : அதிக அளவு போதை பொருள்/ மாத்திரை,  தற்கொலை..

இந்த அழகி அமேரிக்க அதிபர் ஜான்.F. கென்னடி யின் ஆசை நாயகியாக இருந்துள்ளார். நம் மன்னர்களின் அந்தப்புர அழகி போல இவர் அதிபருக்கு இருந்திருக்கிறார். மேலும் ஜான் கென்னடியின்  சகோதரர் ராபர்ட் கென்னடிக்கும் மெர்லினுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. கென்னடி என்பது இலுமினாட்டி குடும்பங்களில் ஒன்று என்பதை நினைவுபடுத்தி கொள்கிறேன்.

மெர்லினின் வீட்டு சமையல் காரி சொன்ன சாட்சியம் உறுதி இல்லாமல் இருக்கிறது. அவரின் தொலைப்பேசி தகவல்கள் அழிக்கப்பட்டிருக்கிறது. படுக்கை கலைய வில்லை. மாத்திரையை சாப்பிட பயன்படுத்திய தண்ணீர் குவலை இல்லை. ஒரு தம்ளர் மட்டும் படுக்கை கீழ் எரியப்பட்டுள்ளது. மெர்லினின் நாள் குறிப்பேடு காணவில்லை. மெர்லினின் மருத்துவரை அழைத்ததாகவும் சன்னலை உடைத்து உள்ளே சென்றதாகவும் அதற்குள் மெர்லின் இறந்து விட்டதாகவும் வேலைக்காரி சொல்கிறார். ஆனால் சன்னல் வெளியே இருந்து அல்ல உள்ளே இருந்து உடைக்கப்பட்டுள்ளது.

இத்தனை சந்தேகம் இருந்தும் தற்கொலை என வழக்கு மூடப்படுகிறது.

கொலைக்கு காரணங்கள்...

ஜான் கென்னடியோடு இருந்த நெருக்கத்தில் மெர்லின் எதையோ கண்டு பிடித்திருக்கிறார். அதோடு அதை வெளியில் சொல்ல முயற்சித்திருக்கிறார்.

ஜான் கென்னடியும் மனம் மாறி இலுமினாட்டிகளை பற்றி பொது வெளியில் பேசி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.