13/01/2022

அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்...

 


லேசான சிவப்பு நிறத்தில், சற்று பளபளப்பாக இருக்கும் கைவிரல் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தைக் குறிக்கும்.

நகங்களில் சொத்தை விழுந்து கறுத்து காணப்பட்டால் உடலுக்கு போதிய ஊட்டச் சத்துகள் கிடைக்கவில்லை என்று பொருள்.

நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால், உடலின் ரத்த அளவு அதிகம் என்பதைக் காட்டுகிறது.

விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் இதயம் பலவீனமாக இருப்பதாக அர்த்தம்.

விரல் நகங்கள் சற்று மஞ்சள் நிறத்தில் இருந்தால் ரத்தத்தில் நிகோடின் விஷம் கலந்திருக்கிறது என்று பொருள்.

கைவிரல் நகங்கள் உப்பினாற்போல் இருந்தால் ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புண்டு.

கைவிரல் நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், உடல் நலம் குன்றியிருப்பதற்கு அடையாளம்.

கைவிரல் நகங்களில் வரிகள் அதிகமாக இருந்தால், வாயுத் தொல்லை இருப்பதற்கான அடையாளம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.