சாத்தான் வேதம் ஓதுகிறது...
சுபவீ என அன்போடு அழைக்கப்படும் வீரபாண்டிய கட்டபொம்மன் செட்டியார், தன்னை ஜெயலலிதா சிறைக்கு அனுப்பிய காழ்ப்பிலும், வெளியே எடுக்க கருணாநிதி உதவிய செஞ்சோற்றுக் கடனுக்காகவும், கருணாநிதிக்கு ஜால்ரா போட ஆரம்பித்தார்...
அப்போதைய ஜால்ரா சத்தம் எதுவரை போனது என்றால், தலைவர் பிரபாகரனின் அன்னை பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக தமிழகம் வந்தபோது, அவரை சிகிச்சை பெற விடாமல் இந்திய அரசும், கருணாநிதியும் திருப்பி அனுப்பினார்கள்... அப்போது, புலம் பெயர் தமிழர்கள் சிலர் இவரிடம் தொலைபேசியில் கருணாநிதியின் மூலம் பார்வதி அம்மாவுக்கு உதவி செய்யுங்கள் எனக் கேட்டபோது, இப்போது தான் என்னை கண் தெரிகிறதா எனக் காட்டமாகக் கேட்டாராம்..
இதே புலம்பெயர் தமிழர்கள், உன்னை ஈழ ஆதரவாளன் என்று நம்பி வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் அழைக்கவில்லையா? அவர்கள் வீட்டுச் சோற்றை நீ தின்றதில்லையா? அப்போது இனித்ததா? இப்போது மட்டும் கசக்கிறதா சுபவீ?
தனிப்பட்ட பிரச்சனைகளையும் இன நலனுக்கான பிரச்சனைகளையும் பிரித்தறிந்து பார்க்கத் தெரியாத சுயநலமி சுபவீ. இனநலன் குறித்தும் சாதி ஒழிப்பு குறித்தும் ஒயாமல் ஓதிக்கொண்டிருக்கிறது.
வேட்டியோடு என்ன விரோதம்?
நந்தன் வழி இதழில் இவர் ஆசிரியராக இருந்த போது. தான் ஏன் வேட்டி கட்டுவதில்லை? ஏன் மீசை வைத்துக் கொள்கிறேன்? என்பதற்கு விளக்கம் கொடுத்தார்.
அதாவது, வேட்டி கட்டிக் கொள்வதும், மீசை மழித்து இருப்பதும், இவர் சாதியான நாட்டுக்கோட்டை செட்டியாருக்கான அடையாளங்களாம்.
அதனால் சாதி ஒழிப்பு போராளியான இவர் அடங்க மறுத்து. மீசை வைத்துக் கொண்டும். பேண்ட் போட்டுக் கொண்டும் இவர் சாதி ஒழிப்பை காட்டுவாராம்.
சுபவீயின் சாதி ஒழிப்பு வீரம் மீசை மயிரோடு நின்று விட்டது.
ஒரு தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு தன் பெண்ணை கொடுத்தோ, பெண் எடுத்தோ காட்ட முடியாத சாதி ஒழிப்பு போராளி சுப.வீ..
அடுத்தவன் வீட்டுப் பெண்களை மட்டும் கொடுக்கச் சொல்லும் புரோக்கர் வேலைகளை இனி விட்டுவிட வேண்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.