11/02/2022

மல்லிகையும் மருத்துவ குணமும்...

 


மல்லிகை என்றாலே அதன் மணம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். மல்லிகைப் பூவை பெண்கள் தலையில் சூடிக்கொள்வார்கள்.  காரணம்  மல்லிகைப்பூவானது மணத்தைக் கொடுப்பதுடன் உடல் சூட்டையும் தணித்து மன ஆறுதலையும் அளிக்கிறது. மல்லிகைப் பூவிலிருந்து எடுக்கப்படும்  எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும்.   சரும எரிச்சல் நீங்கும். சரும பாதிப்புகளைப் போக்கும்.

கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.  கண் பார்வை நரம்புகளில் வறட்சித் தன்மையைப் போக்கி பார்வையை தெளிவாக்கும்.  கண் எரிச்சல்,  பார்வைக் கோளாறுகள் நீங்கும். பித்தத்தை தணித்து சீராக்கும். தலையில் நீர் கோர்த்தல், ஒற்றைத் தலைவலி போன்றவற்றிற்கு மல்லிகை எண்ணெய்  சிறந்தது. ஆறாத புண்களை ஆற்றும் தன்மை மல்லிகை எண்ணெய்க்கு உண்டு. மல்லிகைப் பூவை நன்கு கையில் வைத்து கசக்கி நெற்றியில்  தடவினால் தலைவலி நீங்கும்.

உடலில் வீக்கம் உள்ள பகுதிகளில் மல்லிகைப்பூவை அரைத்து பூசிவர வீக்கம் மறையும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பில் பால்  கட்டிக்கொண்டு அவதிப்படுவார்கள். இவர்கள் மல்லிகைப்பூவை அரைத்து மார்பின்மீது பூசிவந்தால் பால் கட்டுதல் நீங்கி சீராகும்.

தேங்காய் எண்ணெய்    - 100 மி.லி.

உலர்ந்த மல்லிகைப்பூ   - 5 கிராம்

கறிவேப்பிலை                  -10 இலை

எடுத்து காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.

மல்லிகை மணத்திற்கு மட்டுமல்ல, மருத்துவத்திற்கும் என்பதை புரிந்து அதனைப்  பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.