2012 இல் சென்னையில் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்த நிலையில், அப்போட்டியை நடத்தும் உரிமைக்கான ஏலத்தில் ரஷ்யா நாடு அதிக தொகைக்கு ஏலத்தில் எடுத்து அந்த நாட்டில் போட்டியை நடத்தியது..
ஆனால் விடாப்பிடியாக அடுத்த ஆண்டே (2013) உலக சதுரங்க கூட்டமைப்பு மூலம் போட்டியை சென்னையில் நடத்த அனுமதி பெற்றது தமிழக அரசு ..
தமிழக அரசும், தமிழ்நாடு செஸ் சங்கமும் சேர்ந்து நடத்திய இந்த போட்டிக்கு தமிழக அரசு ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்தது. அப்போதைய பிரதமரையோ, மத்திய அரசையோ கண்டு கொள்ளாது தமிழக அரசு மட்டுமே முன்னின்று நடத்தியது குறிப்பிடத்தக்கது..
இந்த உலக செஸ் போட்டியின் தொடக்க விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது..
இறுதி போட்டியில், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தி, நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.