5Gஅலைக்கற்றையின் துல்லியமான ஏல விவரங்கள்...
1.) மொத்தம் ஏலம் விடப்படவிருந்த 5 G அளவு = 72 Giga Hertz..
2.) இதன் அடிப்படை மதிப்பு = 4.30 லட்சம் கோடிகள்..
3.) ஏலம் போன அளவு = 51 Giga Hertz..
4.) ஒன்றிய அரசு நிர்ணயித்த அடிப்படை மதிப்பு படி கிடைத்திருக்க வேண்டிய தொகை = 3 லட்சம் கோடிகள்..
5.) ஆனால் ஏலம் மூலம் கிட்டிய தொகை = 1.50 லட்சம் கோடிகள்..
6.) அடிப்படை தொகையிலிருந்து அரசுக்கு நிகர இழப்பு 1.50 லட்சம் கோடிகள்..
7.) ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 24 Giga Hertz அதாவது மூன்றில் ஒரு பங்கு (72 ÷ 3 = 24) அள்ளியுள்ளது..
அடிப்படை விலையின் படி அது அரசுக்கு அளிக்க வேண்டிய தொகை 1.43 லட்சம் கோடி..
ஆனால் கொடுக்கப் போவது 88078 கோடிகள் மட்டும்..
எனவே அம்பானிக்கு மட்டுமே நிகர லாபம் 55000 கோடிகள்..
நமக்கு நட்டம் அதே 55000 கோடிகள்..
8.) அதானி இதில் பெரிய பங்கு வகிக்கவில்லையாம்..
400 Mega Hertz களை மட்டும் ஏலமெடுத்து அதை பொதுமக்களுக்கு பயன்படுத்தாமல் தனியார்களுக்கு மட்டும் பயன்படுத்தப் போகிறார்களாம்..
ஆனால் இந்தக் கணக்கு மட்டும் எனக்கு தலை சுற்றுகிறது..
72 GHZ க்கான Base Value Rs.4.3 Lakh Cr. எனில் 1 GHZ value Rs.5972 கோடிகள். கரெக்ட் தானே ?
ரிலையன்ஸ் ஜாக்பாட் அடிச்சான்..
அதாவது 24 GHZ க்கு அவன் கொடுக்கவிருக்கும் தொகை ரூ.88 ஆயிரம் கோடி..
அதாவது 1 GHZ க்கு = 3666 cr..
அப்படின்னா அதானி 400 Mhz க்கு, என் கணக்குப்படி 1466 கோடி தானே கொடுக்க வேண்டியிருக்கும் ?
எனக்கு ஜிகா ஹெர்ட்ஸ், மெஹா ஹெர்ட்ஸ், Base rate, Auction rate எதுவுமே தெரியாது..
கணிதம் எனக்கு எட்டிக்காய். எனவே இந்தத் தரவுகளை நீங்கள் இன்னும் துல்லியமாகச் சரிபார்த்து பின் கூறுங்கள்..
வினோத் ராய்களைப் போல நமக்கு வாந்தியெடுக்கும் பழக்கமில்லை..
அதானி ஏலம் எடுத்ததாகச் சொல்லப்பட்டிருக்கும் தொகை 212 கோடிகள் மட்டுமே..
என்ன ரீசன்?
இதை தனிப் பயன்பாட்டுக்காக வேறு பயன்படுத்தவிருக்கிறார்களாம்...
தொழில்நுட்ப காரணிகளை அலசி தெரிந்துக் கொண்டு சொல்லுங்கள்..
கோல்மால் ஓக்கே...
அதென்ன அதுக்குள்ள இன்னொரு மால்?
இப்படில்லாம் செஞ்சுட்டு எங்களுக்கும் ஊழலுக்கும் தொடர்பில்லைம்பா மாமி..
இப்படி ராவிக் கொடுத்தா பில்கேட்ஸ் இல்ல, எலன்மாஸ்க் இல்ல, யானைக்கவுனி குபேரன் செட்டியாரையே முந்திப் போவான் அதானி..
8.) இப்படி 50% நட்டத்தில் இந்த அலைக்கற்றை உரிமத்தை விற்க அரசுக்கு உரிமை உண்டா ?
அடிப்படைத் தொகையை யார் நிர்ணயிப்பது ?
அடிப்படை விலையை விட எவ்வளவு கூடக்குறைய விற்கலாம் என்கிற எந்த நெறிமுறைகளும் இல்லையா ?
சோகம் என்னன்னா அடிமாட்டு விலைக்கு விற்றும் கூட இன்னமும் 29% அளவு = 20.77 Ghz கொள்வாரின்றி தேவுடு காத்து கிடக்கிறதாம்...
தேவைப்படுபவர்கள் போய் எடுத்துக் கொள்ளவும்..
என்ன உங்களையெல்லாம் கேட்லயே சேர்க்க மாட்டாங்களா ?
எப்படி சேர்ப்பான் ?..
அவனுடைய ஆதிகாலக் கலாச்சாரமே இன்னார் இன்னார் மட்டுமே அலவ்ட் சிஸ்டம் தானே ?
அதெல்லாம் புரிஞ்சா நீ ஏன் வாட்ஸ்அப் ஃபார்வட் வேலைய பெருமையா நினைப்ப ?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.