யாதும் ஊரே யாவரும் கேளிர்.. என்ற பொதுஉடமை சிந்தனை மலர்ந்த இந்த மண்ணின் மைந்தர்கள் மறைக்கப்பட்டும், மறக்கப்பட்டும் வரலாற்றிலிருந்து தொலைகபட்டும் வருகின்றனர்...
உலகிற்கே வானியல் அறிவியலையும் , வள்ளுவத்தையும், நாகரிகத்தையும் தந்தவர்கள் இன பற்று நீங்கி சாதியால் மதத்தால் பிளவு பட்டு கிடப்பது யாரால்?
பிராமணியத்தை எதிர்ப்பதாக கோரிக் கொண்டு திராவிடத்தை திணித்து விட்டு தமிழினத்தின் உடமைகளையும் உரிமைகளையும் தமக்குள் பங்கு போட்டு கொண்டவர்கள் தமிழர் அல்லாதவர்களே..
சாதி தீண்டாமையை ஒழிக்க துவங்கப்பட்ட சீர்திருத்த இயக்கம் பிராமணர்.. பிராமணர் அல்லாதோர் என்ற வேறுபாட்டை மட்டும் சுட்டிகாட்டி தமிழர் தெலுங்கர் கன்னடர் மலையாளி ஆகியோரை ஒருங்கிணைப்பு செய்தது.
விளைவு தமிழர்நாடு தமிழர் அல்லாதோரின் வேட்டைக்காடாகி போனது. கலையும் பண்பாடும் சீர்குலைந்தது.
ஆரிய வைசிய மகாசன சங்கம், நாய்டு மகாசன சங்கம், தெலுங்கு மகாசன சங்கம், கேரளா மகாசன சபை, சௌராஷ்டிர அமைப்புகள், போன்றன முளைத்துவிட்டன..
ஆட்சி அதிகாரங்களை கைபற்றி கொண்டு தமிழனை ஒட்டு போட மட்டும் அழைக்கிறது இந்தியமும் - திராவிடமும்..
தமிழன் ஏமாந்து போனதுக்கு ஒரே காரணம் இந்திய தேசியம் தான்...
நாம் தமிழர்கள், நம் நாடு தமிழர்நாடு, திராவிடன் தமிழன் அல்ல என்பதை உணர வேண்டும்..
இன பற்று கொள்ளாதவரை எழ முடியாது. எழ மறுக்கும் இனம் பிணத்திற்கு சமம்..
சினம் கொள்ள மறுத்தால்..
நீயும் ஒரு பிணம்...
சாதி மதங்களை கடந்து தமிழர்களாய் ஒன்றிணைவோம்...
தமிழர் நாடு தமிழர்கே...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.