24/10/2022

தீபாவளி உண்மைகள்...

 


முன்பெல்லாம் தீபாவளியும் அமாவாசையும் ஒரே நாளில் வரும்...

எல்லார் வீட்டுலயும் அன்னைக்கு காலையிலேயே ஆட்டுக்கறி எடுத்துட்டு வந்து குழம்பு வச்சு இட்லி ஊத்தி வச்சுடுவாங்க. பிறவு என்ன? 

அன்னைக்கு முழுவதும் வெளுத்துக் கட்டுவது வாடிக்கையான ஒன்று. 

இப்போதெல்லாம் தீபாவளிக்கு அடுத்தநாள் அமாவாசை வருவது மாதிரி நாள்காட்டியில் செட் அப் பன்னிட்டானுங்க. 

பிரச்சனை என்னன்னா தமிழர்கள் எல்லோரும் அமாவாசையில் விரதம் இருந்தாங்கன்னா பின்ன எப்படி அன்னைக்கு மட்டும் கறி ஆக்கி சாப்பிடும் வழக்கம் வந்ததுன்னு எவனாவது சிந்திசுட்டான்னா சிக்கலாயிடும். சரி தீபாவளி பண்டிகை ஐப்பசி அமாவாசை அன்னைக்குத்தான் வந்தாகனுமான்னா நிச்சயம் வந்தே ஆகணும் அதுதாங்க விதி. 

எப்படின்னா ? ஐப்பசி என்னும் துலாம் மாதத்துல சூரியன் டல் அடிக்கும். அதாங்க நீச்சமாயிடும். 

அந்த மாசம் வர்ற அம்மாவாசையில நிலவும் அவுட்டாயிடும். ஒரு ஆண்டின் ஒட்டுமொத்த நாட்களிலும் ஐப்பசி அமாவாசை அன்னைக்குதான் ஒளி கிரகங்களான சூரியனும் சந்திரனும் முழுவதும் பலம் இழந்து காணப்படும். 

இது சூரிய வழிபாட்டைக் கடைபிடிக்கும் அரசனுக்கு ஆகாது. 

அதனால திருவிழாவ உருவாக்கி பரப்பிவிட்டு கொண்டாட்டம்ன்ற பேருல எல்லாரையும் விளக்கு கொளுத்தவச்சுட்டாங்க. மன்னனுக்கு பரிகாரமாவும் போயிடுச்சு. 

ஆனா ஐப்பசி அமாவாசை அன்னைக்கு நம் முன்னோர்களின் நினைவலைகள் மிகுந்த பசியோடு இருக்கும் அவைகளுக்கு ரத்த படையல் வச்சாகணும்ன்றதுதான் நிதர்சனமான உண்மை. 


ஆனா நாம கடுமையான ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடித்து அவைகளை விரட்டி விட்டுடறோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.