சுப.வீயை நேருக்கு நேர் எதிர் கொண்டு கருத்தியலால் வென்றார் ஐயா மணியரசன் தெரியுமா தோழர் திருமுருகன் காந்தி அவர்களே?
திராவிடம் என்கிற ஒற்றைக் கருத்தியலால்தான் நீண்ட பாரம்பரியமிக்க பல்வேறு தேசங்களை வென்று கொடி நாட்டி ஆண்ட தமிழர் என்கிற தேசிய இனம் குறைந்த பட்சம் அரசியல் அதிகாரமான ஒன்றியத்தின் மாநில முதல்வர் பதவிக்குக்கூட வரமுடியவில்லை தோழர் திருமுருகன் காந்தி அவர்களே...
வடமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான கும்பல் வந்துகொண்டே இருக்கிறது தடுக்க முடியலையே ஏன் திராவிடம் என்கிற போலித்தனமான கற்பிதம்தான்...
சர்வதேசியம் பேசுகிறவனும், இந்திய தேசியம் பேசுகிறவனும் மாநில அரசின் உரிமை என்கிற போது மண்ணின் மைந்தர்களாக நின்று தங்கள் நிலங்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்...
எத்தனையோ நிகழ்காலச் சான்றுகள் உள்ளன தோழர் திருமுருகன் காந்தி அவர்களே...
இந்தியை எதிர்த்து களம் கண்டது திராவிடர்கள் அல்ல தமிழர்களே...
சல்லிக்கட்டு புரட்சியாக நின்றதும் திராவிடர்களாக அல்ல தமிழர்களாகவே...
இத்துப்போன பெரியாரியத்தால் நமத்துப்போன இந்துத்துவா பரதேசிகளின் கருத்தியலுக்கான தளத்தை அமைத்துக் கொண்டு இருப்பது மட்டுமே திராவிடத்தின் புரட்சி...
திராவிடத்தால் வீழ்ந்தது தமிழர்கள் எழுந்தது சங் பரிவார் கூட்டங்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.