19/05/2023

எல்லாமே அதிர்வு தான்...

 


நாம் எல்லோரும் ஆற்றலால் அதிர்ந்து கொண்டே இருக்கிறோம்.

இந்த மொத்த பிரபஞ்சமும் ஆற்றலால் அதிர்ந்து கொண்டே இருக்கிறது.

நம் ஐம்புலன்களும் அதிர்வுகளாகவே அனைத்தையும் உணர்கிறது.

கண் காட்சிகளின் அதிர்வுகளையே கிரகிக்கிறது. காது சப்தத்தின் அதிர்வுகளையே கேட்கிறது.

மூக்கு வாசனைகளை அதிர்வுகளாகவே நுகர்கிறது. வாய் சுவைகளை அதிர்வுகளாகவே சுவைக்கிறது.

மெய் ஸ்பரிசத்தை அதிர்வுகளாகவே உணர்கிறது. ஆம் உண்மையில் நாம் யாரையும் தொடவே முடியாது.

அணுக்களின் விலக்கு விசை தான் நாம் தொடுவதாக நம்ப வைக்கிறது. எல்லாம் அடிமட்டத்தில் ஆற்றலின் வெவ்வேறு  வகையான அதிர்வுகள் தான்.

நாம் எல்லோரும் Frequency generator தான். சுபக்கிரகங்களின்  கதிர்கள் நம் உடலை ஊடுருவி செல்லும் போது உணர்வுகள் சுகமாகவும்.

அசுப கிரகங்களின் கதிர்கள் நம் உடலை ஊடுருவும் போது அசௌகிரயமாகவும் உணர்கிறோம்.

இப்படியான வெவ்வேறு வகையான உணர்வுகள் வெவ்வேறு விதமான எண்ணங்களை நம் மனதில் தோற்று விக்கிறது.

வலுவான உணர்வுகள் புறமனத்தில் ஆழமான எண்ணங்களை உருவாக்கி  புறமனத்தை நம்ப வைத்து ஆழ்மனத்திற்கு கட்டளைகளாக பிறப்பிக்கப்படுகின்றன.

பின் பகுத்தறிவில்லாத ஆழ்மனம் எஜமானனின் கட்டளைகளை அப்படியே நிறைவேற்றி கொடுக்கிறது.

ஆக நம் உணர்வுகள் தான் நம் வாழ்வை தீர்மானிக்கிறது என்பது புரியும். நாம் உணர்வுகளை கவனிக்க தொடங்கி..

எண்ணங்களின் வலிமையால் சுகமான உணர்வு நிலையிலேயே வைத்தோமானால் எந்த ஒரு எதிர்மறை விடயமும் உங்கள் வாழ்வில் அரங்கேறாது.

நாம் தேவையை நினைக்க தொடங்கிய அடுத்த கனமே விமானம் புறப்பட்டு விட்டதாக அர்த்தம். நம் சிந்தனை எல்லாம் சேர வேண்டிய இடத்திற்கு விமானம் சென்ற பிறகு என்னென்ன செய்ய போகிறோம் என்பதில் மட்டுமே இருக்க வேண்டும்.

அதை விடுத்து விமானம் போய் சேருமா? வழியிலே விபத்தாகி விடுமா என்பது போன்று சிந்திக்கவே கூடாது.

ஒரு இலக்கை நிர்ணயித்து அதை அடைந்து விட்டோம் என்று நம்பி அடைந்த பிறகு என்னன்ன செய்ய போகிறோம் என்பதை மட்டும் அடிக்கடி மனத்திரையில் ஓட விடுங்கள்.

அந்த இலக்கை நீங்கள் 100 சதவீதம் நிச்சயமாக அடைவீர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.