18/02/2024

எல்லாமே திட்டமிட்ட நாடகங்கள்...

 


அரசியல் ஆன்மீகம் சினிமா எதுவானாலும் பித்தலாட்ட முறை ஒன்றுதான்..

 பணம் கொடுத்து இவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட "தீவிர பற்றாளர்கள்" மற்றும் அவர்கள் செய்கிற கிறுக்குத்தனங்கள் இவர்களுக்கு விளம்பரம்..

 கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றித் தருவதே இவர்களுக்கு வருமானம்..

 வெளித் தோற்றமோ ஏதோ பெருவாரியான மக்கள் கண்மூடித் தனமாக இவர்களை பின்பற்றுவதாக காட்டப்படுகிறது..

உண்மையோ வேறு...

 பணம் கொடுக்கப்பட்டு "பேய் விரட்டும் பாதிரியார் வீடியோக்கள்" போன்ற திட்டமிட்ட நாடகங்கள் நடத்தப் படுகின்றன..

 இதில் பங்கேற்கும் ரசிகர்கள் / பக்தர்கள் / தொண்டர்கள் அனைவருமே போலிகள்...

 இதைப் பார்த்து உண்மையிலேயே அப்படி மாறுபவர்கள் மிகவும் குறைவு..

 சிலரைத் தவிர பெரும்பான்மையான மக்கள் இவர்களை வெறுக்கின்றனர்.

நம்மை சுற்றி இருப்பவர்களில் அப்படி எத்தனை பேர் என்று கணக்குப் போடுங்கள் உண்மை புரியும்...

 உங்களுக்குத் தெரிந்தவர்களில் எத்தனை பேர் தீவிர விஜய் ரசிகர்? 

தீவிர பங்காரு பக்தர்? 

தீவிர திமுக தொண்டர்? என்று யோசியுங்கள். 

மிகச் சிலரே இருப்பார்கள்.

 அத்தனை பெரிய மார்க்கெட் இல்லாத இவர்களால் இத்தனை பெரிய வருமானத்தை கொடுக்க முடியுமா.?

 ஒரு நடிகர் காட்டும் வசூல், அரசியல் கட்சிகள் காட்டும் தேர்தல் முடிவுகள் மற்றும் சாமியார்கள் காட்டும் அறக்கட்டளை சொத்து எல்லாமே மக்களின் மூலமாக வந்ததாக காட்டப்படுகிறது.

 உண்மை அது இல்லை..

எல்லாமே கருப்பு பணம்..

 நாமோ மக்களை குறைசொல்லிக் கொண்டு இருக்கிறோம்..

 மக்கள் நல்ல சினிமாவை மட்டுமே விரும்புகின்றனர்..

நல்ல அரசியல்வாதிக்கு தான் ஓட்டு போடுகின்றனர்..

சாமியார்களை நம்புவதும் இல்லை.

இங்கே கண்ணால் காண்பதெல்லாம் பொய்...

எல்லாமே திட்டமிட்ட நாடகங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.