01/07/2024

ஒரு ஊரில், கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது...

 


அந்த கடை வாசலில் கடையின் விதிமுறைகளின் பலகை இருந்தது. 

அதில் எழுதியிருந்தது.

கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.

கடையில் மொத்தம் 6 தளங்கள் இருக்கின்றன. 

ஒவ்வொரு தளத்திலும் இருக்கின்ற ஆண்களோட தகுதிகள் மேல போகப்போக அதிகமாகிக் கொண்டே போகும்.

ஒரு தளத்தில் இருந்து மேலே சென்று விட்டால் மறுபடியும் கீழே வர முடியாது.

அப்படியே வெளியே தான் போக வேண்டும்.

இது தான் அந்த விதிமுறைகள். 

இதையெல்லாம் படித்து பார்த்து விட்டு, ஒரு இளம்பெண் கணவர் வாங்க கடைக்கு வந்தார். 

கணவர் வாங்குவது என்பது காய்கறி வாங்குவது போன்ற காரியமல்லவே, என்று நினைத்துக்கொண்டு கடையின் உள்ளே நுழைந்தார். 

முதல் தளம் அறிக்கை பலகையில், இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் "வேலை உள்ளவர்கள்", "கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்". இது என்ன ஒரு அடிப்படை தகுதி என்று எண்ணிக்கொண்டு மேலே செல்கிறார்.

இரண்டாம் தளம் அறிக்கை பலகையில், இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் "வேலை உள்ளவர்கள்", "கடவுள் நம்பிக்கை உளளவர்கள்" மேலும் "குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்" இதுவும் என்ன ஒரு அடிப்படை தகுதி என்று எண்ணிக்கொண்டு மேலே செல்கிறார்.

மூன்றாம் தளம் அறிக்கை பலகையில் இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் "வேலை உள்ளவர்கள்", "கடவுள் நம்பிக்கை உளளவர்கள்" , "குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்" மற்றும் "வசீகரமானவர்கள்" அந்த இளம்பெண் "வசீகரமானவர்கள்" என்பதை பார்த்ததும், "ஆஹா.. மூன்றாவது தளத்திலேயே இவ்வளவு தகுதிகள் இருந்தால், மேலே போகப்போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ" என்று நினைத்துக்கொண்டு மேலே செல்ல முடிவெடுத்தார்.

நாலாவது தளம் அறிக்கை பலகையில், இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் "வேலை உள்ளவர்கள்", "கடவுள் நம்பிக்கை உளளவர்கள்", "குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்", "வசீகரமானவர்கள்" மற்றும் "வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்" இதை விட வேறு என்ன வேண்டும். 

நல்ல குடும்பம் அமைக்கலாமே? 

கடவுளே... மேல என்ன இருக்கு என்று தெரிந்தே ஆகணும் அப்படி என்று முடிவு செய்து விட்டு, அடுத்த தளத்திற்கு சென்றார். 

ஐந்தாவது தளம் அறிக்கை பலகையில்,*>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் "வேலை உள்ளவர்கள்", "கடவுள் நம்பிக்கை உளளவர்கள்", "குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்", "வசீகரமானவர்கள்", "வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்" மற்றும் மிகவும் "ரொமாண்டிக் ஆனவர்கள்" அவ்வளவு தான்.. 

அந்த பெண்ணால் தாங்க முடியவில்லை..

*சரி இங்கேயே யாரையாவது தேர்வு செய்யலாம் என்று நினைத்தாலும் இன்னொரு தளம் பாக்கி இருக்கின்றதே..

அங்கே என்ன எப்படிப்பட்ட கணவர்கள் இருப்பார்கள் என்பதை பார்க்காமல் எப்படி முடிவு செய்வது..??? 

சரி மேலே சென்று பார்த்து விடலாமே என்று முடிவு செய்து விட்டு ஆறாவது தளத்திற்கு செல்கிறார்.

ஆறாவது தளம் அறிக்கை பலகையில், 

"இந்த தளத்தில் கணவர்கள் யாரும் இல்லை.. 

வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது.. 

இந்த தளத்தை அமைத்ததற்கு காரணம், பெண்களை திருப்திப்படுத்தவே முடியாது  என்பதை நிரூபிக்கத்தான்".....

*"எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி"...!*" 

கீழே படிகளில் இறங்கவும்".என்று எழுதியிருந்தது.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.