13/04/2017

சித்தர் ஆவது எப்படி - 12...


ஒழுங்கு வடிவமே உண்மை.. உண்மையே இறைநிலை..

ஒழுங்கு என பேசினாலே ஓட தொடங்கும் மனித இனம், ஒழுங்கற்ற மனதோடு வாழும் காரணத்தினால், ஒழுங்கு என்ற ஒன்றை சொன்னாலே முகம் சுழிக்கும் நிலைக்கு வந்து விடுகின்றனர்..

ஒழுக்கத்தோடு தீவிரமாக வாழும் மனிதனை உலகம் பெரும்பாலும் ஒதுக்கி வைத்து விடும்.. இல்லாவிட்டால் அவனை பைத்தியம், அல்லது பிழைக்கத்தெரியாதவன் என்ற கணக்கில் சேர்த்து விடுவார்கள்..

மிகுந்த ஒழுக்க உடையனோடு உறவு கொள்ள பலர் தயங்குவார்கள்.. அப்படி உறவு ஏற்படுத்திக் கொண்டாலும். ஒழுக்கம் உள்ளவனை ஒரு வேடிக்கை மனிதனாகவே கருதி பழகி வருவார்கள்..

ஒழுக்கமற்றவனால் கேடுகள் வராமல் இருக்க மட்டும் போதுமான ஒழுக்கத்தை போதிப்பார்கள்.. ஆனால் உயர்வான ஒழுக்கத்தை யாரும் போதிப்பதில்லை..

ஒழுக்கமற்றவன், தன் ஒழுக்கமின்மையை மறைக்க ஒழுக்கத்தை மற்றவர்களுக்கு போதித்து தப்பித்து கொள்வார்களே தவிர, தன் அளவில் ஒழுக்கமின்மை அதிகம் உடையவர்களாக இருப்பார்கள்...

உலக மக்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் ஒழுக்கமின்மை ஓரிரு இடத்தில் இருந்தும் அதில் பலப்பட்டும் மரணத்தை தழுவி அழிந்து கொண்டு இருக்கிறார்கள்..

ஒழுக்கமின்மைக்கும் அழிவிற்கும் என்ன சம்பந்தம் ?

இருக்கிறது.. மிக மிக திடமாக இருக்கிறது.. பின்னி பிணைந்து இருக்கிறது.. பிரபஞ்சமே ஓர் ஒழுங்கு வடிவம்.. அதனால் அதன் ஆற்றலும் ஓர் மிக உயர்ந்த ஒழுங்கு வடிவமாக உள்ளது..

அதில் மிக சிறு ஒழுங்கின்மை வந்தாலும், மிக பெரிய பிரளயம் வந்து விடும்.. அதன் ஒழுங்கு தன்மையால் மட்டுமே உலகம் இன்று சுற்றிக் கொண்டு இருக்கிறது...

பிரபஞ்ச பேராற்றல் மிகவும் துல்லிதமான ஒழுங்கு தன்மையில் இருக்கிறது.. அந்த பேராற்றலில் மிக சிறு மாற்றம் ஏற்பட்டாலும். பல சூரிய மண்டலங்கள் எரிந்து சாம்பலாகி விடும்... அந்த பேராற்றலால் தான் அனைத்து உயிர் இனங்களும் உயிர் பெற்று வாழ்கின்றன...

ஒழுங்கு தன்மை வாய்ந்த பேராற்றலில் அனைத்து உயிர் இனங்களும் உயிர் பெற்றது என்னவோ உன்மை தான்..

ஆனால் அந்த உயிர் இனங்கள் ஒழுங்கு நிலையான பேராற்றலை அண்டி வாழாமல் ஒழுங்கு தன்மை அற்ற செயல் பாடு உடைய படைக்கப் பட்டவைகளை அண்டி வாழ தொடங்கியதே பெரும் தவறாய் போய் உயிர் நிலை சிதைந்து மரணத்தையும் அழிவையும் பெற்றது..

ஆம்.. உயிர்கள் படைத்ததின் ஒழுங்கு நிலை சாராமல் தன்னோடு படைக்கப் பட்டவைகளின் தொடர்பால் ஒழுக்கமின்மையை சார்ந்து சார்ந்து சீர் குழைந்து போய் கொண்டு இருக்கின்றன..

ஒழுங்கின்மையின் முடிவே மரணம்.. இதுவே முடிவான சத்தியம்...முடிவான முடிந்த உண்மை.. ஒழுங்கின் வடிவமாக உள்ள பேரண்ட பேராற்றலையும், பேரறிவையும் பெற வேண்டும் எனில் அதன் ஒழுங்கு தன்மைக்கு ஒரு உயிர் தன்னை மாற்றிக்கொள்ளும் பொழுது, அந்த உயிர் பேராற்றலையும் பேரறிவினையும் பெறும் பாக்கியத்தையும் பெற முடிகிறது..

ஆனால் உலகம் ஒழுங்கமின்மையிலிருந்து மீண்டும் மீண்டும் ஒழுக்க மின்மையை நோக்கியே நகர்ந்து கொண்டு இருக்கிறது.. ஆறறிவு படைத்த உயிர்கள் அறிவு குறைந்து குறைந்து கடைசியில் ஓரறிவினையும் இழந்து அறிவே அற்ற நிலையில் கல்லாகி மண்ணாகி போகிறான்..

ஒழுங்கற்ற தன்மையை பிடித்துக் கொள்ள மிக மிக எளிதாக உள்ள நிலையில் ஒழுங்கு நிலை நோக்கி நகருவதற்கு மனிதனுக்கு இயலாமல் உள்ளது..

எல்லா உண்மை உபதேசங்களையும் கற்று அதில் பொய்மையை புகுத்துவதே மனிதனுடைய வேலையாக உள்ளது..
இன்றைய நிலையில் உண்மை தனித்து விடப் பட்டு இருக்கிறது.. அதனை அடையாளம் கண்டு கொள்ள எவரும் இல்லை போல் தோன்றுகிறது..

அதனை ஆன்மீகமும், பக்தியோகம் போன்ற அனைத்து யோகங்களும், இன்று மனித இனத்தால் பொய்மை கலக்கப் பட்டு, பலனற்று போய் கொண்டு இருக்கிறது.. இதனை ஒரு மனிதன் தன்னை ஒழுங்கு நிலைக்கு திரும்பும் போது மட்டுமே அத்தனையும் பொய் என உணர தொடங்கும் பொழுது ஞானம் அடைய தொடங்குகிறான்..

அந்த ஞானத்தில் பொய்மையை அடையாளம் கண்டு உண்மையை நோக்கி நகரத் தொடங்குகிறான்... உண்மை ஒழுங்கு தன்மையின் முழு வடிவம் என உணர தொடங்கி ஒழுங்கினை கடை பிடிக்க தொடங்குகிறான்.. அவனே சித்தன்..

சித் என்றால் பொய்மையையும் உண்மையையும் அறிந்து கொண்ட உண்மை விளக்கம் பெறல் என்பதாகும்..

சத் சித் ஆனந்தம் என்பதை வள்ளலார், இயற்கை உண்மை, இயற்கை விளக்கம் இயற்கை அனுபவமாக சொல்லி இருக்கிறார்.. இதில் சித் என்பது விளக்கம் பெறல் என்பதாகும்.. பொய்மை உண்மையின் முழு விளக்கம் பெற்றவனே சித்தன்..

இப்படியான சித்தன் பொய்மையிலிருந்து விலகி இருக்க தொடங்குவதால், பொய்மை உலகம் அவனை அடையாளம் தெரிந்து கொள்ள முடிவதில்லை.. சித்தனை ஒரு நாளும் மனிதன் கண்டு பிடிக்க முடியாது..

சித்தர் தரிசனம் காண ஏதேதோ செய்கின்ற மனிதன், அத்தனையும் ஒழுங்கு தன்மை அற்றவை ஆதலால் ஒருநாளும் உண்மை சித்தனை காணவே முடியாது..

ஆனால் அவன் கண்டதாக அனுபவ பட்டதெல்லாம் என்ன வென்றால் பொய்மையிலே உழன்று மாண்ட மனிதனின் ஆவியே..

இன்று ஆவியுடன் பேசும் மனிதர்கள் உண்டு. ஆனால் உண்மை வடிவான இறைவனுடன் பேசி உண்மையான தீர்வு தருபவர்கள் எவரும் இல்லை.. அப்படியே தந்தாலும் அதனை கேட்பவர்கள் எவரும் இல்லை..

காரணம் பொய்மையாளர்களுக்கு பொய்மை தவிர வேறு ஒன்றும் புரிவதில்லை...

உண்மை விளக்கமான சித்தை பெற்றவர்களே சித்தர் என முடிவுடன் அந்த ஒழுங்கு தன்மை பெற உகந்த இடம் எது வென அடுத்த பகுதியில் பார்க்கலாம்...

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி ரத்தத்தில் கை ரேகை வைத்து விவசாயிகள், பெண்கள் இளைஞர்கள் கோவையில் போராட்டம்...







மே1ம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு...


பரிசோதனை அடிப்படையில் 5 நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கப்படும் - எண்ணெய் நிறுவனங்கள்.

புதுச்சேரி, சண்டிகர், ஜம்ஷெட்பூர், விசாகப்பட்டினம், உதய்பூர் ஆகிய நகரங்களில் மே 1 முதல் அமல்...

சைவமும் - அசைவமும்...


புலால் உண்பதில் ஏற்படும் நன்மைகள்...

உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் கிடைக்கும்.

30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து ஆதிகால மனித இனமான ஹோமோ சேப்பியன்ஸ் முதற்கொண்டு இதை உண்டே ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

மனித நாகரீகம் தோன்றியது முதல் அசைவமே பிரதான உணவாக இருந்து வந்தது.

நாள் முழுவதும் வேட்டையாட போதுமான சத்துக்களை அவர்களுக்கு அசைவமே கொடுத்தது. மானிறைச்சி தின்றதல்ல அன்றும் இன்றும் வேதியர், மானுரித்த தோலல்லோ மார்புநூல் அணிவது.....

புலால் உண்பதால் ஏற்படும் தீமைகள்...

மனிதாபிமான அடிப்படையிலும் கர்மாவின் படியும் பார்க்கும் போது இது ஓர் உயிர்கொலை.

அசைவ உணவை உண்டபின் அதன் சாராம்சம் இரத்தத்தில் கலந்து ஆக்ரோஷ எண்ணங்களையே தூண்டுகிறது.

மனதை கட்டுப்படுத்த நினைக்கும் எவருக்கும் அசைவ உணவு எதிரியே.

இனி முடிவு உங்கள் கையில்...

திருப்பூர் சாமளாபுரத்தில் காவல்துறையால் தாக்கப் பட்டவர்களுக்கு அரசு செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும் - தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவு...


திருப்பூர் மக்கள் போராட்டத்தை அடுத்து சாமளாபுரம் மதுக்கடையை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு...


கீழடியில் அகழாய்வு பணிகளை நடத்திய அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் அசாமுக்கு தூக்கியடிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்திருக்கிறது மத்திய நிர்வாக தீர்ப்பாயம்...


அத்தோடு அவர் மீண்டும் தனது ஆய்வுப்பணிகளை கீழடியிலேயே தொடர வேண்டும் என்றும் நெத்தியடியாய் சொல்லியிருக்கிறது.

கீழடியில் நடந்த உள்ளடிகளையெல்லாம் பார்க்கும்போது எம்.ஜி.சுரேஷ் எழுதிய யுரேகா என்றொரு நகரம் நாவல்தான் நினைவுக்கு வருகிறது.

அகழ்வாராய்ச்சியில் வெளிவரும் உண்மைகளைத் தடுக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள் வரலாறே அற்றவர்கள்… என்கிற நுட்பமான ரகசியங்களை சொல்லியிருப்பார் அந்த நாவலில்.

மதுரை  அருகேயுள்ள கீழடி கிராமத்தின் அகழ்வு ஆய்வுகளுக்கு முடிந்தவரை முட்டுக்கட்டை போடுவது ஒருபக்கம் என்றால் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுப் பணிகள் அம்போவெனக் கேட்பாரற்றுக் கிடக்கும் கொடுமையோ மறுபுறம்.

திருநெல்வேலியில் இருந்து இருபத்தி நாலு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுப் பணிகளை ஏறக்குறைய ஊத்தி மூடிவிட்டார்கள் என்றே சொல்லலாம்.

இந்த ஆதிச்சநல்லூருக்கு எட்டு ஆண்டுகள் முன்னரே எங்களை அழைத்துச் சென்று அதில் புதைந்து கிடக்கும் பல உண்மைகளை புட்டுப்புட்டு வைத்தவர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள்தான்.


கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும்...

அவர்கள் பயன்படுத்திய கருவிகள் இரும்பாலானவை என்பதும்....

அதனை உருக்கி செதுக்கி சீராக்க அன்றைக்கே உலைகளை வைத்திருந்தார்கள்….

என்பது போன்ற அதிர்ச்சிகர உண்மைகளை 1876 ஆம் ஆண்டே கண்டு பிடித்தவர் தான் டாக்டர் ஜாகர். ஜெர்மன் நாட்டுக்காரர்.

தொல் தமிழர்களது இந்த நாகரீகம் வெளிவந்து விடக் கூடாது என்பதில் அநேகருக்கும் அளப்பரிய அக்கறை.

அப்படித் தப்பித் தவறி வெளிவந்து விட்டால் வெள்ளையர்கள் கண்டு பிடித்ததும் வடக்கத்தியர்கள்  கண்டு பிடித்ததும் தமிழர்களுக்குப் பிந்திய நாகரீகங்கள் தான் என்பதை ஒத்துக் கொண்டதாகி விடும் என்கிற அரசியல்தான் இத்தனை உள்குத்துகளுக்கும் காரணம்.


மத்திய அரசின் தொல்லியல்துறை ஆதிச்சநல்லூரில் உள்ள 150 ஏக்கர் நிலத்தை சுற்றிவளைத்து கையகப்படுத்தி இருப்பதோடு வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடாது என்கிற உத்தரவையும் போட்டிருக்கிறது.

எல்லாவற்றைவிடவும்  2005 ஆம் ஆண்டே அத்துறை செய்த ஆய்வு முடிவுகளை இன்னமும் வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கிறது.

காரணம்?

தமிழர்களின் தொன்மையான வரலாறு வெளிவந்து விடக்கூடாது என்கிற நல்லெண்ணம் தான் வேறென்ன?

கீழடிக்குக் குரல் கொடுப்பது மட்டுமல்ல ஆதிச்சநல்லூரின் அதிர்ச்சிகர உண்மைகள் வெளிவருவதற்காகவும் நாம் குரல் கொடுத்தாக வேண்டும் என்பது தான் முன்தோன்றிய மூத்தகுடி யின் முன் உள்ள மற்றொரு சவால்.

டுபாக்கூர் பக்கங்கள் - குமுதம் வார இதழ்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவில், இன்னும் மொபைல் நெட்வொர்க் சேவையே கிடைக்காமல் 50,000 கிராமங்கள்...


ஆகாயத்தில் ஒரு ஒளி - 12...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தொடரில் இடம் பெறும் வருங்கால தீர்க்க தரிசனங்கள் யாவும் நடைபெறும் காலம் வந்துவிட்டதாக இன்றைய இறை கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

நமக்குள் உருவாகும் ஒரு எண்ணமே  நாளைய புதிய கண்டு பிடிப்புகளுக்கு மூலமான சக்தி என்பதை மனிதகுலம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

எண்ணங்களே மனிதனை ஆக்கபூர்வமான ஒரு படைப்பாக இந்த உலகத்திற்கு வெளிச்சமிட்டு காட்டுகின்றது ஆகையால் தான் சான்றோர்கள் எண்ணம் போல் வாழ்வு என்று கூறுகின்றனர்.

இந்த உலகில் புதிய, புதிய படைப்புகள் யாவும் மனித அறிவால் உருவாக்குப்பட்டுள்ளன. இந்த அற்புதமான படைப்பின் திறனை மனிதனுக்குள் வைத்தது யார்?

இதனை இன்றளவும் விஞ்ஞானத்தால் கண்டறிய முடியவில்லை, காரணம் இவ்வாறு ஒரு கேள்விக்கு விடை காண வேண்டும் என மனிதனுக்குள் அறிவுறுத்துவது அவனுடைய மனமே ஆகும்.

ஆனால் மனித மனதிற்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இவ்வுலகில் இருந்து வருகிறது.  அதுவே மனிதனையும், இவ்வுலகத்தையும் இயக்கி வருகிறது.

அந்த அற்புத சக்திக்கே கடவுள் என்று பெயர். அந்த கடவுளின் ஒரு சிறு சக்தியே நம்முடைய ஆழ்மனதில் உள்ள ஆழ்மனசக்தியாகும்.

அதாவது மனோசக்தியாகும் இந்த மனோசக்தியை மனிதன் தனது ஆறாம் அறிவின் வாயிலாகப் பயன்படுத்தும் போது மட்டுமே அவனால் இவ்வுலகில் புதுப்புது கண்டுபிடிப்புகளை உருவாக்கிடவோ (அ) கண்டறியவோ முடிகிறது. இதைத்தான் புதுமைகளை படைக்கும் புது மனிதன் என்று வரலாறு கூறுகிறது.


காலப்பயணம் என்று ஒன்று உண்டு அது நம்முடைய ஆத்மாவானது இவ்வுலகில் இருந்து தான் நினைக்கும்  இடத்திற்கு சென்று தனக்கு தேவையான அறிவுக்களஞ்சியத்தை (ஞானம்) இந்த பூமிக்கு கொண்டு வரமுடியும்.

அவ்வாறு நமது ஆத்மா இந்த பூமியைவிட்டு அயல் கிரகங்களுக்கு கூட தனது காலப்பயணத்தை மேற்க்கொள்ள முடியும், அப்படி ஒரு பயணத்திற்கு துணை நிற்பது காலச் சக்கரம் என்ற அற்புதமான படைப்பு ஒன்று கடவுளால் உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த காலச்சக்கரத்தை பயன்படுத்தியே ஆத்மா தனது தூர தேசங்களுக்கு சென்று வரும், இவ்வாறு சென்றுவரும் ஆத்மாவே இந்த உலகில் மனித உடலைக் கொண்டு மனித உலகிற்கு தேவையான புதிய படைப்புகளை உருவாக்குகிறது என்று இறைக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

இந்த உலகில் காலச்சக்கரத்தை கண்டவர் எவரும் இல்லை, ஆனால் அதன் சக்தியை ஒளிவடிவாக, பேரொளியாக இவ்வுலகில் கண்டவர்கள் ஏராளம்.

ஆகவே நாம் கண்களால் கண்ட ஒளி வடிவங்களைக் கூட சில நேரங்களில் இதுவென்று அனுமானம் செய்ய முடியாது. ஆகவே இன்றைய 12-ம் தீர்க்க தரிசனம் இதற்காண சில விளக்கங்களை இன்று தெரிவிக்கின்றது.

மனிதர்களைப் போன்றே அயல் கிரகத்தில் வசிப்பவர்கள் தனது முயற்சியால் காலப்பயணத்தை மேற்கொண்டு அடிக்கடி பூலோகத்திற்கு வந்து செல்கின்றனர் என்றும்,

அவ்வாறு வரும் அந்த ஆத்மாக்கள் பயணம் செய்யும் காலச்சக்கரங்களை இனி ஆகாயத்தில் பல ஒளிப்புள்ளிகளாக, வட்ட வடிவங்களாக மக்கள் கண்களால் காண முடியும் என்றும்,

இதுவே அதற்கான இக்காலம் என்றும், அதற்கு காரணம் ஆகாயத்தில் திடீரென்று ஏற்படும் ஒரு மாற்றமே இத்தகைய காட்சிகள் மனித சமூகம் காண்பதற்காண சாத்திய கூறுகளை ஏற்படுத்தும் என்று 12-ம் தீர்க்க தரிசனம் இங்கு எடுத்துக்கூறுகிறது.


12-ம் தீர்க்க தரிசனம் நடைபெறுவதற்கு முன்பாக இப்பூமியின் தென் துருவப் பகுதியில் பல ஆச்சர்யங்களும், அதிசயங்களும் நடக்கும் என்றும் தீர்க்க தரிசன குறிப்புகள் தெரிவிக்கின்றன.

12-ம் தீர்க்க தரிசனம் நடபெறும் சமயத்தில் வான் மண்டலத்தில் பல வினோத ஊர்திகளை விஞ்ஞானிகள் முதலில் கண்டறியும் சம்பவம் ஒன்று நடைபெறும் என்று இந்த 12-ம் தீர்க்க தரிசனம் சில உண்மைகளை எடுத்துக் கூறுகின்றது.

இந்திய தேசத்தின் இமயமலைப் பகுதிகளில் திடீரென்று சில அசம்பாவித சம்பவங்கள் நிகழக்கூடும் என்றும்,

அச்சமயத்தில் இனம்புரியாத பல வினோத சம்பவங்கள் அங்கு நடக்ககூடும் என்று தீர்க்க தரிசன கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

கயிலாயப் பாதையின் வடக்கே ஒரு அதிசயம் நிகழும் என்றும் அதனை விஞ்ஞானிகள் உறுதி செய்வார்கள் என்றும் தீர்க்கதரிசனம் எடுத்துக் கூறுகிறது.

இந்தியாவில் மறைந்த ஒரு ஆன்மீக குருவானவர் தனது ஆத்ம சொரூபங்களை பல மாநிலத்தில், பல இடங்களில் ஒரே சமயத்தில் வெளிப்படுத்துவார் என்றும்,

அச்சமயத்தில் மக்கள் ஆச்சர்யத்திலும், பீதியிலும் காணப்படும் பொழுது இறைவன் ஒரு சில அற்புதங்களை இந்திய மாநிலங்களில் வெளிப்படும்படி செய்வார் என்று ஒரு சில தீர்க்க தரிசனங்கள் தெரிவிக்கின்றன.

மற்றொரு உலகம் என்பது நாம் வாழும் பூமிக்கு அருகே உள்ளது என்றும், அதனை இதுவரை விஞ்ஞானிகளால் அறிய முடியவில்லை என்றும், தற்பொழுது அதனை கண்டறியும் வகையில் விஞ்ஞானிகளின் செயல்கள் இருக்கும் என்றும் மற்றொரு தீர்க்க தரிசனம் இதனை எடுத்துக் கூறுகிறது.

உலகில் உள்ள அனைத்து கலைகளுக்கும் முன்னோடியாக இந்திய தேசத்தின் ஒரு கலையே அடிப்படையாக இருந்தது என்றும் அதனை உலக நாடுகளே ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு வெகு விரைவில் நடக்கும் என்றும் தீர்க்க தரிசனக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் எற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அச்சப்படுவதற்க்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதைப்போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

விருதுநகரில் அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு...


கல்லூரியில் 100 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் அறிவிப்பு...