11/09/2018
புலிகள் ஆதரவு, தனித் தமிழ்நாடு, ராஜீவ் கொலைக்குப் பாராட்டு - 1992ல் பாமக இராமதாசு ஐயா முன்னெடுத்த தமிழ்தேசியம்...
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைப் பாராட்டியும்..
புலிகளுக்கான ஆதரவு தெரிவித்தும்..
தனித் தமிழ்நாடு பற்றியும்..
இனப்பற்றுடன் வெளிப்படையாகப் பேசிய போது அதைக் கண்டித்து எழுதப்பட்ட கட்டுரை..
ஏடு: செங்கோல்
நாள்: 20.09.1992
தலைப்பு:- ராஜீவைக் கொன்றவன் என் தோழன் தமிழகப் பிரிவினையும் கோருவோம் பா.ம.க தலைவரின் தேசத் துரோகம்..
நன்றி: சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் (முகநூல்)...
கடையை மூடுங்க... கோஷமிட்ட காங்கிரஸார்; அரிவாளைத் தூக்கிய கடைக்காரர்...
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் பகுதியில் வேலைநிறுத்தம், கடையடைப்புக்கு ஆதரவாக, கடைகளை அடைக்கக்கூறி காங்கிரஸ் கட்சியினர் கூறியபோது, அதில் ஒரு கடைக்காரர் அரிவாளைக் தூக்கிக்காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்பு நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் 90 சதவிகித கடைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டிருந்தது. பஸ், வேன், ஆட்டோக்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன. பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தீப்பெட்டித் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தன. கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் பகுதியில் சில கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
காங்கிரஸ் கட்சியினர் சிலர் கடைகளை அடைத்து, வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு கேட்டபோது, சில கடைக்காரர்களுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர் ஸ்டாலின் என்பவர் அரிவாளைத் தூக்கிக்காட்டி உள்ளார். இதனால் கடைக்காரருடன் காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போலீஸார் சமாதானப்படுத்தி, `புகார் அளித்தால் முறையாக வழக்கு பதிவு செய்யப்படும்' என்று கூறியதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் கலைந்து சென்றனர்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் பஸ் நிலையம் முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 19 பெண்கள் உட்பட 165 பேரை போலீஸார் கைது செய்தனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட ஊர்வலமாக சென்றபோது அவர்களை கைது செய்தனர். போராட்டம், சாலைமறியல் நடைபெற்றாலும், அரிவாளைத் தூக்கிக் காட்டிய சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது...
இடைக்காட்டு சித்தர் - அது என்ன எட்டிரண்டு....?
யோக ஞானம் பயில்வோர் ஒவ்வொருவரும் அறிந்து தெளிய வேண்டிய தத்துவம் தான் இந்த எட்டிரண்டு.
ஆதி முதல் அந்தம் வரை அனைத்துக்குமே ஆதாரம் இந்த எட்டிரண்டு தத்துவம் தான்.
அண்ட சராசரங்கள் முழுதும் நீக்கமற நிறைந்திருப்பது இது ஒன்றுதான்.
இதன் மகத்துவம் உணர்ந்து தெளிந்தவர்களுக்கே சித்த ரகசியம் சித்திக்கும்.
எட்டிரண்டின் பெருமையினை அநேகமாக எல்லா சித்தர்களும் உபதேசித்திருக்கின்றனர்.
"எட்டிரண்டு அறிந்தோர்க்கு இடர் இல்லை"
என்கிறார் இடைக்காட்டு சித்தர்...
Conspiracy Theory என்ற ஒன்றன் மூலம் இங்கு பல உண்மைகள் மறைக்கப்படுகின்றன...
நாமும் “ஆம், இந்த கொலை சதியை கண்டுபிடிக்க முடியாது, இதில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது கடினம் என கூறி” அதிலிருந்து வெளியே வந்து விடுகிறோம்..
ஆனால் உண்மையான குற்றவாளிகள் நம்முன், சொகுசான வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர்..
ராசிவ் காந்தி கொலை வழக்கும், ஜெயலலிதா மரணமும் இது போன்றே..
அந்த குற்றங்களை செய்தவர்கள் யாரும் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை, அவர்கள் யார் என்று இந்தியா அரசாங்கத்திற்கு நன்றாக தெரியும்..
அவர்கள் இந்த மக்களின் முன் சொகுசாக வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்..
இனி எளிதாக “This is Conspiracy Theory” என கூறிவிட்டு கடந்து செல்லாதீர்கள்..
நன்றாக ஆராயுங்கள், ஏனெனில் அதன்பின் உங்களின் அரசியல் அழிக்கப்பட்டு இருக்கலாம், அது தொடரவும் செய்யலாம்...
ஆழ்மனதின் சக்தி விசித்திரமானது...
ஆழ்மனதின் சக்தி அபாரமானது. விசித்திரமானது. நீங்கள் நினைவு மனதில் எதை திரும்ப திரும்ப எதை எண்ணுகிறீர்களோ, எதை குறித்தே நினைத்துக்கொண்டிருக்கிறீர்களோ, எந்த காட்சியை மனக்கண்ணில் அடிக்கடி விளம்பரம் போல் ஓட விட்டுக் கொண்டிருக்கிறீர்களோ அதை ஆழ்மனம் கிரகித்துக்கொண்டு நடைமுறையில் உங்கள் கண்ணெதிரே அதை நடத்திக்காட்டும் வல்லமை கொண்டது.
ஒரு காந்த சக்தி உள்ள இரும்புத்துண்டு தன் எடையை விட 12 மடங்கு எடையை ஈர்க்கும் சக்தி கொண்டது. ஆனால் அதிலிருக்கும் காந்த சக்தியை நீக்கி விட்டோமானால் அதனால் ஒரு பிளேடினை கூட ஈர்க்க முடியாது.
சமூகத்தில் ஒருவர் வெற்றி பெறுவதற்கும், ஆரோக்யமாக வாழ்வதற்கும், குடும்ப உறவுகளில் அன்னியோன்மாக இருப்பதற்கும், செல்வங்களில் கொழிப்பதற்கும், மற்றொருவர் தோல்வி அடையவும், விரக்தி நிலையிலும் எல்லாவற்றிலும் துன்பப்படவும் காரணம் இந்த காந்த வித்யாசம்தான்.
எல்லோரும் ஒரே மாதிரியான மனிதர்களாக படைக்கப்பட்டாலும், உள்ளுக்குள் தங்களுக்குள் மனிதர்கள் ஏற்றிக்கொள்ளும் எண்ணங்களை பொறுத்தே, கொண்டிருக்கும் நம்பிக்கையை பொறுத்தே அவர்களது வாழ்க்கை அமைகிறது.
இதெல்லாம் நிறைய படிச்சாச்சு.. ஆனால் எனக்கு வேலை செய்வதில்லை என நினைக்கிறீர்களா...? உங்களுக்கும் உண்மையில் அது வேலை செய்துகொண்டுதான் இருக்கிறது. இது நடந்துடுமோன்னு பயந்துகிட்டே இருந்தேன்.. அப்படியே நடந்துடுச்சு என நீங்கள் புலம்பும்படி எப்பொழுதாவது நடந்ததுண்டா... உண்மையில் அந்த நடக்க வாய்ப்பில்லாமல் இருந்திருந்தாலும் நீங்கள் திரும்ப திரும்ப அதையே நினைத்திருந்ததன் விளைவாக உங்கள் ஆழ்மனமே அதை நடைமுறைப்படுத்தி இருக்கும்.
பல கனவுகள், பல ஆசைகள் கண்டிருப்போம் ஆனால் அவை எதுவும் நடப்பதற்கான அறிகுறிகளே இதுநாள் வரையில் தெரியாத நிலை இருக்கலாம். அந்த கனவுகளில் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை விட இவை எல்லாம் நடக்குமா என்கிற சந்தேகத்தை அதிகம் மனதில் வைத்திருந்தோமானால் கண்டிப்பாக அந்த கனவுகள் பலிக்க வாய்ப்பில்லை.
ஒவ்வொருவரது ஆழ்மனமும் அலாவுதினின் அற்புத விளக்கை தேய்த்தால் "ஆணை இடுங்கள் எஜமான்" என வந்து நிற்கும் பூதம் போன்றது. அதற்கு சொந்தமாக அறிவு கிடையாது. சொந்தமாக முடிவுகளை எடுக்காது. ஆனால் எப்பொழுதும் அது உங்கள் ஆணையை நிறைவேற்ற காத்திருக்கும். நீங்கள் வெற்றியை விரும்பி கேட்டால் அதை கொடுக்கும். இது நடக்குமா என்கிற சந்தேகத்தையே கேட்டுக்கொண்டிருந்தால் அவ்வாறான சூழ்நிலைகளையே உங்களுக்கு பதிலாய் கொடுக்கும்.
என்ன கேட்பது, எப்படி கேட்பது என்பதை விட முதலில் ஏற்கனவே அந்த அற்புத பூதத்திடம் நம்மை அறியாமல் நாம் நிதமும் கேட்டுக்கொண்டிருக்கும் எதிர்மறை சாபங்களை எப்படி நிறுத்துவது என தெரிந்துக்கொள்வது மிக அவசியம்...
Subscribe to:
Posts (Atom)









