26/04/2017

திமுக வின் 2ஜி வழக்கின் தீர்ப்பு அடுத்த சில தினங்களில் வெளியாகும் என தகவல்...


2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் தொலை தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, தனது இறுதி வாதத்தை நிறைவு செய்தார்.

கடந்த எட்டு ஆண்டுகளாக நடந்து வரும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 2007-ல், மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா  'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் 2008-ம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கியதில், பெருமளவு முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திவிட்டதாக மத்திய கணக்காயம் தெரிவித்தது. 2009-ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்ததை தொடர்ந்து, ஆ.ராசா மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். இவ்வழக்கில், இருதரப்பு சாட்சியமும் முடிந்த நிலையில், இறுதி வாதம் சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

நீதிபதி ஓ.பி. சைனி முன்பு, இன்று தனது இறுதி வாதத்தை பதிவு செய்த ஆ.ராசா, தான் எடுத்த முடிவுகள் அனைத்தும் சட்டப்படி சரியானவையே என வாதிட்டார். இவ்வழக்கில், தற்போது இறுதி வாதம் நிறைவடைந்த நிலையில், வழக்கின் வழக்கின் தீர்ப்பு வெளியாகும் தேதி எப்போது என்பது குறித்து நாளையோ அல்லது மற்றொரு நாளோ தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.