28/04/2017

இலண்டனில் இருந்து இந்த செய்தி நேற்று வலைத்தளங்களில் பரவிய போது மொத்த தமிழ் இனமும் ஆனந்த கூத்தாடியது...


இறுதி போரில், வரமாட்டேன் என்று தான் தலைவர் கூறியிருக்கிறார். நான் என்மக்களோடு தான் இருப்பேன். வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் அது இந்த ஈழ மண்ணில் தான். என் பாதுகாப்பு மட்டும் எனக்கு முக்கியம் அல்ல. என் மக்கள் எல்லோரும் ,எந்தம்பிகள் எல்லோரும் கொத்துக்குண்டுகளுக்கு பலியாகின்றனர்.

என் தளபதிகள் ஈழம் காணாமல் இறந்து கொண்டிருக்கிறார்கள். நான் மட்டும் தப்பிச்செல்வது பெரும் சுயநலம் இப்படித்தான் பொட்டுஅம்மானிடம் கூறியிருக்கிறார் தலைவர். அவரை ஒரு குழுவாக நின்று பேசி சமாதானம் கூறி ஒருவழியாக அரைமனதோடு தலையாட்டினார் தலைவர். அந்த ஒரு நொடி எங்களுக்கு போதுமானதாக இருந்தது. மே பதினாறு சிங்களரின் 57வது பட்டாலியன் கோரத்தாண்டவம் ஆடியது.

பாஸ்பரஸ் குண்டுகள் விடாது பொழிந்தது. கொத்துக்குண்டுகள் வெடித்துச் சிதறியது. நாங்கள் களத்தில் இருந்தோம் கரும் புலிகள் பெரும் ஊடறுப்புத் தாக்குதலுக்கு தயாராகினர். புயல் போல் நாலாபுறம் இருந்தும் ஊடறுத்து சிங்களரின் படைக்குள் நுழைந்தனர்.அந்த நொடியில் எம் பொடியன்கள் நடத்திய சாகசம் உலக வரலாற்றில் எங்கும் நடந்ததில்லை .அப்படி ஒரு வீர சாகசம். சிங்கள பட்டாளியனுக்கு ஒன்றுமே புரியவில்லை. எங்கிருந்து இவன்கள் வருகிறார்கள், எந்த திசையில் இருந்து வருகிறார்கள் என்ன நிகழ்கிறது ஏன் எல்லோரும் தூக்கி வீசப்படுகிறோம் என்று திகைத்தனர்.

கொத்து கொத்தாக உடல் சிதறி பறந்தனர். தப்பித்து ஓட ஆரம்பித்தனர். இந்த நேரத்தில் தான் தலைவரை தூக்கினோம்., ஒரு தேவ தூதனை தூக்குவது போல தூக்கினோம்..இதோ உடல் நலம் தேறி வியூகம் வகுத்துக்க் கொண்டிருக்கிறார் தலைவர். கலங்காதீர்கள். சந்தர்ப்பம் எதிர் பார்த்து காத்திருக்கிறார்…

இப்படி ஒரு செய்தி நேற்று உலக தமிழர்களிடையே பெரும் ஆனந்த கண்ணீரை வரவைத்தது. ஒரே மகிழ்ச்சி வெள்ளம்...

எம் தேசியத்தலைவரே உம்மை வரவேற்க உலகத்தமிழ் இனமே தயாராக இருக்கிறது என்று வாழ்த்துச் செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.