ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பில்டப்புகளை விஸ்வ இந்து பரிஷத் ஏற்படுத்த ஆரம்பித்து விட்டது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள 100 வெளிநாடு வாழ் பெரும் இந்திய தொழிலதிபர்களை அது வரவழைத்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான ஆலோசனைகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பலரும் தொழிலதிபர்கள் ஆவர்.
அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவது தொடர்பாக மத்திய அரசுக்கு நெருக்கடி தருவதே இவர்களின் நோக்கமாகும். அதுதொடர்பான ஆலோசனைகளில் தான் தற்போது ஈடுபட்டுள்ளனராம்.
இந்தக் குரூப் ஏற்கனவே பாஜக தலைவர் அமீத் ஷாவைச் சந்தித்துப் பேசி விட்டனராம். அதேபோல உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாநாத்தையும் சந்தித்துப் பேசியுள்ளனராம்.
இந்த 100 பேர் கொண்ட குழுவில் ஜெர்மனி, இந்தோனேசியா, ஜப்பான், சீனா, மலேசியா, ஹாங்காங் ஆகியோ நாடுகளின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெருமளவில் இடம் பெற்றுள்ளனராம்.
இந்த குரூப் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தையும் நேரில் போய்ப் பார்த்து ஆய்வு செய்ததாம். மேலும் தற்போது அங்கு வைக்கப்பட்டுள்ள தற்காலிக வழிபாட்டுத் தலத்திலும் அவர்கள் வணங்கி வழிபட்டனராம்.
இதுகுறித்து குழுவில் இடம் பெற்றுள்ள ஒரு என்ஆர்ஐ கூறுகையில் எங்களது கருத்துக்களைத் தெரிவிக்க வந்துள்ளோம். எங்களுக்கு ராமர் கோவில் கட்டப்பட வேண்டும். அதற்கேற்ற சூழல் உருவாக்கப்ப வேண்டும் என்றார்.
இப்படி வெளிநாடு வாழ் இந்தியர்களை வரவழைத்து கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்து மத்திய அரசை நெருக்குகிறது விஎச்பி.
இது தவிர விரைவில் ஹரித்வாரில் 200க்கும் மேற்பட்ட சாமியார்களை வரவழைத்து ஒரு பெரிய மாநாடு நடத்தப் போகிறதாம் விஎச்பி...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.