நினைவேந்தலும் - இந்திய உளவு பிரிவும்...
2011 ஆம் ஆண்டு முதன் முதலில் மே மாதம் 18 ஆம் தேதி மெரினா கடற்கரையில் ஈழ இனப்படுகொலைக்கு நினைவஞ்சலி நடந்தது. அதனை ஒருங்கிணைத்தவர் ராஜ்குமார் பழனிச்சாமி. அதில் திருமுருகன் கலந்து கொண்டார். கடற்கரையில் ஒரு நிகழ்வு செய்யும் பொழுது அதில் பொது மக்கள் பெருமளவில் கலந்து கொண்டதை பார்த்து திருமுருகன் என்னிடம் கூறியது பார்ட்டி இத நம்ம பண்ணனும் என்றார் அங்கேயே அவர் அதனை வியாபாரமாக பார்க்க தொடங்கிவிட்டார்.
இதனை எவ்வாறு புரிந்து கொள்ளலாம் என்றால்...
2011 ஆம் ஆண்டே மிக தீர்க்கமாக கடற்கரை பொது வெளியில் நினைவேந்தல் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தார். அதன் தொடர்ச்சியாக ஜூன் 26 நினைவேந்தல் நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. அப்பொழுது எடுக்கப்பட்ட சில முடிவுகளில் முக்கியமானவை...
1. கட்சி, இயக்கம் அடையாளம் இன்றி இந்த நிகழ்வு ஒருங்கிணைக்க பட வேண்டும்.
2. பொது மக்கள் நிகழ்வாக இது இருக்க வேண்டும்.
3. நிகழ்வில் எந்த தலைவரும் மைக் புடித்து பேச கூடாது என்பதாகும்.
இது அனைத்தும் இன்று உடைக்கப்பட்டிருக்கிறது.
2011 இல் மிக குறைந்த நபர்களை கொண்டு திட்டமிடப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு, மிக நேர்த்தியாக தோழர் உமரின் திட்டமிடலுடன் கவனமாக நடத்தப்பட்டது.
பல்வேறு காட்சிகள், சிறு சிறு இயக்கங்கள் மற்றும் தனி நபர்களால் மிக பெரிய வெற்றியும் பெற்றது.
அதன் பிறகு திருமுருகன் கூறியது நம்ம மட்டும் தான் உழைப்பை செய்தோம், இந்த நிகழ்விற்கு யாரும் உதவவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்தார்.
அதனால் அடுத்த வருடம் நமது பெயரிலேயே நடத்துவோம் என்றார்.
மேலும் ஜூன் மாதம் நடத்திய நிகழ்வை அடுத்த வருடம் மே 17 ஆம் தேதி நடத்துவோம் என்றார்.
பொதுமக்கள் நிகழ்வாக இருக்க வேண்டியதை இன்று ஒரு குறிப்பிட்ட இயக்கம் சார்ந்த நிகழ்வாக தனது ஊடக பலம், தனது மார்க்கெட்டிங் திறன் மூலம் இன்று மாற்றியிருக்கிறார்.
அதனை கூட சகித்து கொண்டாலும், சர்வதேச தளத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக நுணுக்கமாக செயல்பட்டவர் இது போன்று செயல்படுவது தமிழர்களுக்கு பாதிப்பே.
2011 ஆண்டு தவிர அதன் பிறகு நடந்த அனைத்து நினைவேந்தல் நிகழ்விலும் திருமுருகன் மைக் பிடித்து உரை நிகழ்த்துவதை தவிர்க்கவில்லை.
எந்த அரசியல் காரணமின்றி அமைதியாக அஞ்சலி செலுத்தும் நிகழ்வாக நடத்த வேண்டும் என்று திட்டம் உடைக்கப்பட்டது. தான் மட்டும் பேசுவதன் மூலம் அதனை தனது இயக்கம் நிகழ்வாக மாற்றியிருக்கிறார்.
ஈழ இனப்படுகொலையை நடத்திய இந்திய அரசு அதன் பிறகு எழும் எழுச்சியை, இந்திய எதிர்ப்பை, சர்வதேச முன்னெடுப்பை எல்லாம் தமிழர்களுக்குள் ஊடுருவி தகர்க்க ஒரு சில்வர் புல்லட்டாக ஒரு நபர் தேவைப்பட்டார். அதில் சரியாக பொருந்தியவர் திருமுருகன் காந்தி..
மே 18 ஆம் தேதியை உலகம் முழுவது இனப்படுகொலை நாளாக தமிழர்கள் மனதில் ஏற்று கொண்டிருக்கையில் அதனை அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் நடத்தும் விடுமுறை போராட்டங்கள் போல தமிழகத்தில் தன்னுடைய சுய லாபத்திற்கு தோதுவாக விடுமுறை நாளில் நினைவேந்தல் நடத்துவது குழப்பத்தை தான் ஏற்படுத்தும்.
யூத இனப்படுகொலைக்கான இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி ஏப்ரல் 24 ஆம் தேதி வாரத்தில் எந்த நாளில் வந்தாலும் அனுசரிக்கப்படும். அது தான் நாம் இனப்படுகொலையை சரியான நினைவு கூறலாகும்.
2011 முதல் கடந்த வருடம் வரை நினைவேந்தல் நடத்த காவல் துறை அனுமதி அளித்ததில்லை. தடையை மீறி தான் நடத்தியிருந்தார்கள். காவல்துறையும் முழுவதும் தடுக்காமல் அனுமதித்து வந்தது.
ஆனால் இந்த வருடம் நடத்தவிடாமல் தடுத்திருக்கிறது. காவிகளின் பிடியின் தமிழகத்தில் அது அவர்களின் செயலாகவோ அல்லது முட்டாள் ஆளும் அரசாகவோ இருக்க கூடும்.
இன்று வரை உள்ளூரில் இந்தியத்தை திட்டிவிட்டு சர்வதேசத்தில் காப்பாற்றிய ஒரு நுணுக்க அரசியல் செய்த சில்வர் புல்லட் டை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டிய தேவை இருக்கிறது.
திருமுருகனின் வளர்ச்சிக்காகவே கைது நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
இனி வரும் காலங்களில் தமிழ் அமைப்புகள், காட்சிகள் எந்த சார்பு அடையாளமுமின்றி இனப்படுகொலைக்கான மவுன அஞ்சலியை ஒருங்கிணைக்க வேண்டும். இல்லையென்றால் அது செய்வது இந்திய ஒன்றிய அரசாக தான் இருக்கும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.