24/05/2017

பாரம்பர்யம் அழிப்பு நடவடிக்கை...


பாரம்பர்யம் இல்லாத திடீர் பணக்கார நாட்டில் இருந்து கொண்டு பெப்சி, kfc , மெக்டொனல்ஸ் போன்ற சத்துக்கள் இல்லாத உணவை தமிழகம் வரையில் விற்க முடிகிறது என்றால் அதன் அர்த்தம் என்ன ?

அரசியல் வாதிகள் மட்டும் இல்லை என்றால் இவர்களை போன்ற கார்ப்பரேட் கழிவுகளுக்கு இங்கு வேலையே இல்லை...

உலகிற்கே சத்தான உணவுகளை விளைவித்து வியாபாரம் பண்ணியது நாம் தான்..

நான் ஏற்கனவே கூறியது போன்று நெல்லு கம்பு கேழ்வரகு திப்பிலி கோதுமை பருப்புகள் மிளகு, போன்ற இயற்கை சத்தான உணவு பொருட்களை கடந்த பல ஆயிரம் வருடங்களுக்காக அண்டை நாடுகளுக்கும் அரபு நாடுகளுக்கும் நாம் கொடுத்து..

அவர்களிடம் சந்தனம், வாசனை திரவியம், பழங்கள் போன்றவைகளை பண்டமாற்று அடிப்படையில் வியாபாரம் செய்து தன் மக்களையும் தன் நாட்டையும் வளப்படுத்தி வந்தோம்..

இன்றும் கூட அதே பாரம்பர்ய முறை வியாபாரம் அனைவருக்குமே தெரியும்..

ஏன் நம்மவர்கள் கவனிக்கப்படாமல் கிடக்கிறார்கள் ?

இதற்க்கு பதில் அரசியல் வாதிகள் தான்.

கொடுக்க வேண்டியவனுக்கு கொடுத்தால் ஒரு பாரம்பர்ய வியாபாரத்தை கூட இல்லாமல் ஆக்க முடியும் என்பதற்கு மிகப்பெரிய உதாரண நாடு இந்தியா...

எங்கிருந்தோ வந்தவன் இங்கு கடை விரித்து வியாபாரம் செய்கிறான் [கோக் , பெப்சி, kfc ,] இங்கிருக்கிறவன் செத்து செத்து பிழைக்கிறான்...

எல்லாமும் இந்த கேடுகெட்ட இந்திய அரசியல் நாய்களால் தான்..

அவனுங்க வயிற்றையும் அவனுக குடும்பத்தார் சொகுசாக வளம் வரவும் நாம் நம் [எதிர்கால] பிள்ளைகளை
தியாகம் செய்து கொண்டு உள்ளோம்...

ஓட்டுப் போடும் போது இவனுங்க பல்லை இளித்துக் கொண்டு பணத்தை காட்டியவுடன் பையித்தியக்காரனுக்கு பாம்பு என்ற பயமா இருக்க போகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.