02/05/2017

ஈ.வெ. ராமசாமி நாயக்கர் க்கு பெண்கள் மாநாட்டில் பெரியார் என்ற பட்டம் கொடுக்கப்பட்டதா? - திருட்டு திராவிடம்...


13.11.1938 அன்று சென்னை, ஒற்றைவாடை நாடகக் கொட்டைகையில் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் நிறைவேறிய தீர்மானங்கள்..

குடியரசு தீர்மானங்கள் – 20-11-1938..

அத்தீர்மானங்களில் ஒன்று இவ்வாறு இருப்பதாக குடியரசு செய்தி வெளியிட்டது..

இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்யவியலாமற் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும்..

தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவரு மில்லாமை யாலும்..

அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும் போதெல்லாம் பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறது...

குடியரசு வெளியிட்ட செய்தி தான் இந்த மாநாட்டில் ராமசாமிக்கு ‘பெரியார்’ பட்டம் கொடுக்க தீர்மானம் நிறைவேறியது என்பது..

உண்மையில் மாநாட்டுப் பெண்கள் பெரியார் என்று பட்டம் கொடுக்கவில்லை..

குடியரசு – இன் கட்டுக்கதையே அது..

பாரதிதாசன் கவிதைகளிலேயே எங்கெங்கு ‘தமிழ்’, ‘தமிழர்’ என்று வருகிறதோ அங்கங்கு ‘திராவிட’, ‘திராவிடர்’ என்று திரித்து வெளியிட்ட திராவிடர்களும், திராவிடத் தலிவர்களும் கட்டுக் கதைகளால் இங்கு ஆள்பவர்கள்.

இப்போது அவர்களின் கட்டுக் கதைக் கோட்டை தகர்ந்து வருவதே இன்றைய அவர்களின் இது போன்ற பதிவுகளுக்கு காரணம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.