மத்திய பிரதேச மாநிலத்தில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் மாநிலத்தில் பாஜகவின் மாநில எஸ்சி பிரிவின் ஊடகப் பொறுப்பாளர் நீரஜ் சக்யா பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்த சைபர் பிரிவு போலீசார் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட நீரஜ் சக்யா உள்ளிட்ட ஒன்பது பேரை கைது செய்தனர்.
போபாலின் போஷ் அரெரா காலனியில் உள்ள ஒரு வீட்டில் மஹாராஷ்ட்ரா மற்றும் மேகாலயா மாநிலங்களை சேர்ந்த நான்கு பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டதை உறுதி செய்துள்ளனர்.
மேலும், பிடிபட்ட கும்பல் ஆன்லைன் மூலம் புக் செய்பவர்களுக்கு பாலியல் தேவைகளுக்காக பெண்களை சப்ளை செய்ததை சைபர் பிரிவு போலீசார் விசாரணையில் கண்டு பிடித்தனர்.
அதோடு காவல்துறையிடமிருந்து தப்பிப்பதற்காக மத்திய பிரதேசத்தின் முக்கியமான பகுதியான அரெரா காலனியில் உள்ள ப்ளாட் ஒன்றில் பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள், பல வேலை வாய்ப்பு வழங்கும் வெப்சைட்டுகளில் வேலைக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கும் பெண்களின் வேலை விண்ணப்பங்களை தேடியிருக்கின்றனர். பின்னர் பியூட்டிசியன், ரிசப்சனிஸ்ட் போன்ற வேலைகளுக்கான நேர்முகத் தேர்வு என்று கூறி பெண்களை வரவழைத்து அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும், இது போன்ற வேலைகளில் இந்த கும்பல் கடந்த மூன்று மாதங்களாக ஈடுபட்டு வந்ததாகவும் சைபர் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்ட வலைதளம் டெல்லியில் பதிவு செய்யப்பட்டிருப்பதையும், அந்த வலைதளத்தோடு பல மாநிலங்களில் இணைப்பு இருப்பதையும் சைபர் பிரிவு போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.
சோதனையின் போது தலைமறைவான கிங்பின் சுபாஷ் என்கிற வீர் திவேதி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாலியல் தொழிலில் ஈடுபட்டு பிடிபட்ட நீரஜ் சாக்யா சமீபத்தில் பாஜகவின் எஸ்சி பிரிவில் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.
நீரஜ் சாக்யா கைது செய்யப்பட்டதும் பாஜகவின் மாநில தலைவர் நந்தகுமார் சிங் நீரஜ் சாக்யாவை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அறிவித்துள்ளார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.