ஆதித்த கரிகாலனை கொன்ற உடையார் குடி அந்தணர்களுக்கு உடையார் ஸ்ரீ ஸ்ரீ ராஜ ராஜா தேவர் அளித்த தண்டனை பற்றிய கல்வெட்டு உடையார்குடியில் உள்ளது..
இது தற்போதைய காட்டு மன்னார் கோவில்.
அந்த கல்வெட்டில் கூறப்பட்டு உள்ள வாசன்கங்கள் இது தான்..
ஸ்வஸ்தி ஸ்ரீ கோராஜகேஸரிவர்ம்மர்க்கு யாண்டு 2வது வடகரை ப்ரமதேயம் ஸ்ரீ வீரநாரயணச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறிப் பெருமக்களுக்கு சக்ரவர்த்தி ஸ்ரீ முகம்
பாண்டியனைத் தலைகொண்ட கரிகாலச் சோழனைக் கொன்று த்ரோஹிகளான சோம(ன்)… (இவன்) றம்பி
ரவிதாஸன பஞ்சவன் பரஹ்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரனான இருமுடி சோழ ப்ரஹ்மதிராஜ்னும் இவகள் தம்பிமாரும் இவகள் மக்களிதும் இவர் ப்ராஹ்மணிமா(ர்) பேராலும் (இவகள் ப்ராஹ்மணிமா(ர்) பேராலும் (இவகள்…) றமத்தம்
பேரப்பன்மாரிதும் இவகள் மக்களிதும் இவகளுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிதும் தாயோடப் பிறந்த மாமன்மாரிதும் இவகள் உடப்பிறந்த பெண்களை வேட்டாரினவும் இவகள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முறி)யும் நம்மாணைக் குரியவாறு
கொட்டையூர் ப்ரஹ்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்ரசேகர பட்டனையும் பெரத் தந்தோம் தாங்களும் இவகள் கண்காணியோடும் இவகள் சொன்னவாறு நம்மாணைக்குரியவாறு குடியொடு குடிபேறும் விலைக்கு விற்றுத் தாலத்திடுக இவை குறு(காடி)கிழான் எழுத்தென்று இப்பரிசு வர.
உடையாற்குடிகு சக்கரவர்த்தி செல்லாமல் அவரின் ஸ்ரீமுகம் மட்டும் அனுப்பி தண்டனை நிறைவேற்ற சொல்கிறார்..
இதன் கருத்து வீர நாராயணன் சதுர்வேதி மங்கலத்து பெருமக்களுக்கு சகரவர்தியில் ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகாலச் சோழனைக் கொன்ற துரோகிகளான சோமன் இவன் தம்பி ரவிதாஸன, பஞ்சவன், பரஹ்மாதிராஜனும் இவன் தம்பி பரமேஸ்வரனான இருமுடி சோழ ப்ரஹ்மதிராஜ்னும் இவகள் தம்பிமாரும், பிள்ளைகளும் இவர்களுக்கு பெண் கொடுத்தவர்களும் பெண்களும் இவர்கள் சமப்தபட்ட அனைவரும் அவர்களின் உடைமைகள் சொத்து அனைத்தையும் விட்டு விட்டு உடனே இந்த ஊரை காலிசெய்து வெளியேற வேண்டும் என்று பொருளில் எழுதப்பட்ட கல்வெட்டு...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.