14/06/2017

தமிழ் மொழிக்கு தடை போடுவதற்கு எவனுக்கும் தகுதி இல்லை… துபாய் லைசென்சே தமிழில் அப்ளை செய்யலாம்…


ஹிந்தி தெரியாவிட்டால் வட மாநிலம் சென்று பிழைக்க முடியாது. இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்று சில கோஷ்டிகள் கூவி வருகின்றது.

இந்த நிலையில் தமிழர்கள் வாழும் நாடுகளில் ஒன்றான துபாயில் தமிழிலே தேர்வு எழுதி ஓட்டுனர் உரிமம் வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

துபாய் நாட்டில் டிரைவிங் லைசென்ஸ் பெற எழுத்துத் தேர்வும், வாய்மொழி தேர்வும் நடத்தப்படுகிறது.

வாகனங்களை இயக்கி ஓட்டி காட்டுவதற்கு முன்பு இந்த இரு தேர்வுகளிலும் வெற்றி பெற வேண்டும்.

தற்போது துபாய் நாட்டில் ஆங்கிலம், உருது, அரபு ஆகிய மூன்று மொழிகளில் எழுத்துத் தேர்வும், வாய்மொழி தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இருந்து துபாய்க்கு செல்பவர்கள் டிரைவிங் லைசென்ஸ் பெற மொழி பிரச்சினை மிகவும் இடையூறாக இருந்தது.

தங்கள் தாய் மொழியில் எழுத்துத் தேர்வு நடத்த வேண்டும் என்று இந்தியாவில் இருந்து செல்பவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை துபாய் நாடு ஏற்றுக்கொண்டது.

இதையடுத்து தமிழ் உட்பட  4 மொழிகள் டிரைவிங் லைசென்சு தேர்வுக்கு சேர்க்கப்பட்டு இருப்பதாக துபாய் நாட்டு அரசு அறிவித்துள்ளது.

எனவே துபாயில் டிரைவிங் லைசென்சு பெற விரும்பும் இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் தேர்வு எழுத முடியும்.

துபாய் அரசின் இந்த நடவடிக்கையால், மிக எளிதாக இந்தியர்கள் துபாய் டிரைவிங் லைெசன்சை பெற்று விடுவார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.