27/06/2017

இலுமினாட்டி - தமிழர்களின் எழுச்சியும் அமெரிக்க சனாதிபதியின் பதவி ஏற்பு விழாவும்...


ஒரு சேர நடைபெற்றதை ஏதோ ஏதேச்சையாக. நடைபெற்றதாக உணரமுடியவில்லை.

அதற்கு காரணம் உண்டு, இந்த இரண்டு நிகழ்வுகளும் உலகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ள வரலாற்று நிகழ்வுகளாக நடந்து கொண்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் சனாதிபதியாக பதவி ஏற்பது நாள் குறிக்கப்பட்ட ஒன்று ஆனால் தமிழர்களின் இந்த எழுச்சி நாள் குறிக்கப்படாதது, பதவி ஏற்பு நாள் விழாக்களும், எழுச்சியும் ஒரு சேர அமைந்திருக்கின்றது.

சரி அதற்கு என்ன என்பது புரிகின்றது, அதற்கு வியப்பை தரக்கூடிய விடயம் உள்ளது.

நோஸ்ராடாமஸ் இந்தப் பெயரை அறிந்திருக்கின்றீர்க­ளா? இல்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள்.

இவர் பிரான்சில் 1503ம் ஆண்டு பிறந்த 1566ம் ஆண்டு வரை வாழ்ந்தவர் எதிர்காலத்தை கணித்து சொல்வதிர் வல்லவர் இவர் கணித்த அனைத்தும் இதுவரை நடந்தே வந்துள்ளது.

அதிலும் குறிப்பாக டொனால்ட் டிரம்ப் அமெரிக்க சனாதிபதியாக வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதை விட வியப்பான விடயம் ஒன்றும் உள்ளது அதை பின்பு கூறுகின்றேன்.

மெரினா உட்பட தமிழகம் எங்கும் நடந்தது தமிழர்களின் உரிமையை காக்கும் போராட்டம். ஆனால் இந்தப் போராட்டம் தமிழக அரசு மற்றும் இந்தியாவை தாண்டி அமெரிக்காவுக்கு விடப்பட்ட சவால் என்றால் அதை நம்ப முடிகின்றதா?

இல்லை கண்டிப்பாக இல்லை என்றேதான் பதில் வரும், சிலர் ஆமோதிக்கலாம் ஆனால் அதுதான் உண்மை.

நோஸ்ராடாமஸ், டிரம்ப் சனாதிபதியாவார் என்று மட்டும் கூறவில்லை டிரம்ப் மூன்றாம் உலகப்போரை துவக்கி வைப்பதற்கு காரணமாக இருப்பார் என்றும் கூறியிருக்கின்றார் அதுவும் அணுகுண்டு போரை துவக்கி வைப்பார் என்று ஆரூடம் சொல்லியிருக்கின்றார்­.


அதிகபட்சமாக ஒரு அமெரிக்க சனாதிபதியின் ஆட்சி 10 வருடங்கள் மேல் இருக்க வாய்ப்பில்லை.

சர்வாதிகாரியாக மாறினால் நீடிக்கலாம்..

நோஸ்ராடாமஸ் அவர்களின் அனைத்து ஆரூடங்களும் மெய்ப்பித்த நிலையில் இதுவும் நடக்கும் என்றால் 10 வருடத்திற்குல் 3ம் உலகப் போர் வெடிக்க வேண்டும் அல்லது டிரம்ப் அதற்கான துவக்கத்தை ஆரம்பித்து வைத்திருப்பார் எனலாம்.

சரி அதற்கும் தமிழர்களின் எழுச்சிக்கும் என்ன தொடர்பு என எதிர்பார்ப்பது புரிகின்றது.

டிரம்ப் சனாதிபதியாவார் என்று ஆரூடம் கூறிய நோஸ்ராடாமஸ் அவர்கள் மேலும் ஒரு செய்தியையும் சொல்லியுள்ளார்.

அது உலகை ஆண்ட இனம் மீண்டும் உலகை ஆளும் என்பது..

ஆனால் பலர் ஆண்ட இனம் என்றால் இது பிரித்தானியர்களாக இருக்கக்கூடும் என்றார்கள் ஆனால் அது தவறு காரணம் நோஸ்ராடாமஸ் அவர்கள் இறந்தது 1566 ஆனால் ஈஸ்ட் இந்தியா கம்பனி என்ற பெயரில் பிரித்தானியா இந்தியாவுக்குள் நுழைந்ததே 1612ம் ஆண்டிற்கு பிறகுதான், அப்படியெனில் அப்பொழுது பிரிட்டன் உலகை ஆளவில்லை அதற்கு முன்பு உலகை ஆண்ட இனமாக கருதப்படுவது தமிழினம் மட்டும்தான்.

தமிழன் ஆண்ட குமரிக் கண்டம் ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா, அவுஸ்திரேலியா வரை பரந்து விரிந்து இருந்திருக்கின்றதற்கான சான்றுகள் இன்றுவரை உலகம் முழுவதும் உண்டு.

குமரிக் கண்டத்தை தலைமையகமாக கொண்டு ஆண்ட தமிழினத்தின் சாட்சிகளாக நாம் இருக்கும்பொழுது நூற்றாண்டுகளாக நம்மிடம் தோற்றுப்போன இனம் ஏன் இருக்கக்கூடாது?

நோஸ்ராடாமஸ் ஆண்ட இனம் என்றே குறிப்பிட்டுள்ளார் அப்படியெனில் அவர் வாழ்வதற்கு முன்பு ஆண்ட இனமாகத்தான் இருக்க முடியம் இது நிச்சயம் தமிழினமாகத்தான் இருக்கவும் முடியும்.

டிரம்பின் வருகைக்கு பின்பே ஆண்ட இனம் ஆளும் என்ற ஆரூடம் ஒருபுறம் இருக்க, டிரம்பின் வருகையின் போதே தமிழினம் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டத்தில் அதுவும் பல இலட்சம் மக்கள் சக்தியுடன் ஈடுபட்டுள்ளது பெரும் வியப்பை எனக்கு ஏற்படுத்தியுள்ளது.

அது எப்படி இது அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம் என கூறமுடியும் என நீங்கள் கேட்கலாம். அங்கும் உண்மை மறைந்துள்ளது.

வெறும் பார்வைக்கு இது மத்திய ஆளும் அரசு, காவி அரசு, தமிழக செயற்படாத அரசு, பீட்டாவுக்கு எதிரான போராட்டமாக தெரிந்தாலும் இதை மிக ஆழமாக கவணித்தால் இது அமெரிக்காவுக்கு எதிரான சவாலேதான்.

நிச்சயம் உண்மை தான், இந்த காளை பிரச்சனை பீட்டாவுக்கே மத்திய அரசுக்கு துளியும் சம்பந்தம் இல்லாத விடயமாகவும் இருக்கலாம், இவர்கள் அனைவரும் வெறும் அம்புகள் என்று கூட கூறிவிட முடியாது அதை விட கீழ், எய்தவனை ஏன் அம்பைக் கூட சில வேளை கண்டு பிடிக்க முடியாது, கண்கொண்டு காண இயலாது இது மாபெரும் இரகசிய அரசியல்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் சல்லிக்கட்டுக்கு போடப்பட்ட தடைக்கு 10 வருடங்களுக்கு முன் போடப்பட்ட திட்டம் என்றால் நம்ப முடியுமா?

அதைப்போல் மூன்று வருடங்களுக்கு முன்பு வாங்கிய தடையின் ஆதாயத்தை தடை போட்டவர்கள் அடைய 10 முதல் 25 வருடங்கள் அல்லது அதற்கு மேலும் தேவை என்பதை நீங்கள் அறிவீர்களா?

நீங்கள் நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை.

இவர்கள் லாபம் பார்ப்பவர்கள்தான் ஆனால் இன்றோ நாளையோ லாபம் பார்ப்பவர்கள் அல்ல இவர்கள், தன் பரம்பரை போனாலும் அடுத்த பரம்பரை லாபம் பார்க்க திட்டம் போட்டு செயற்படுத்துபவர்கள் இவர்கள்.

ஆதாயம், லாபம் என்றால் அது பணம் அல்லது பொருளாகத்ததான் இருக்கும் என்று நினைக்காதீர்கள்.

பல ஆண்டுகளில் இவர்களால் அழிவு வரும் என்ற நினைப்பு அவர்களுக்கு வந்திருந்தால் நம்மை இலகுவாக அழிக்க அவர்கள் இப்பொழுதே தீட்டப்படும் திட்டம்தான் இவைகள்.

ஆக நம்மை அழிப்பது மட்டும்தான் இவர்களின் ஆதாயமாக இருக்கலாம். அப்படி ஒரு வேளை நம்மை அழிக்க முற்பட்டால் எதிர்க்க நம்மிடம் எதுவுமே இருக்காது பஞ்சமும் பட்டினியும்தான் மிஞ்சியிருக்கும், இப்பொழுது புரிகின்றதா.

அப்படி நம்மை அழிக்க நினைப்பவர்களின் சொல்லுக்கு அமெரிக்கா ஆடும், அமெரிக்காவின் சொல்லுக்கு, இந்தியா போன்ற நாடுகள் ஆடும் இந்தியாவின் சொல்லுக்கு பீட்டா, உச்ச நீமன்றம் போன்றவை ஆடும்.

இந்த தடை பீட்டா போட்டதா, இந்தியா பேட்டதா, உச்ச நீதிமன்றம் போட்டதா என்று கேட்டு பதில் வருவதற்குள் எல்லாம் முடிந்துவிடும்.

எல்லாம் சரி தற்பொழுது நடைபெற்ற போராட்டத்திற்கும் டிரம்பிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள முடிச்சு எங்கே என்று கேட்கின்றீர்கள் கூறுகின்றேன்.

அமெரிக்காவை பொறுத்தவரை தீவிரவாதிகள் என்று யாரை வரையறுத்திருக்கின்றா­ர்கள் தெரியுமா?

தன்னுடைய நாட்டில் புகுந்து தாக்குதல் நடத்துபவர்களை கூட சில வேளை தீவிரவாதிகள் அல்ல என்று விட்டுவிடுவார்கள்...

ஆனால் தன்னுடைய வியாபார நிறுவனத்திற்கோ அல்லது அதைச் சார்ந்தவர்களுக்கோ எந்த நாட்டிலாவது எதிர்ப்போ தீங்கோ நேர்ந்தால் அதுதான் அமெரிக்காவை பொறுத்தவரை உண்மையான தீவிரவாதம்.

தமிழீழ விடுதலைப்புலிகளையம் ஆயுதம் தரித்தவர்கள் என்பதற்காக தடை செய்யவில்லை, அமெரிக்கா பிரஜைக்கு அதுவும் ஒரு வியாபாரிக்கு காயம் ஏற்படுத்தியவர்கள் அதுவும் அவர்களை அறியாமல் ஏற்படுத்திய காயத்திற்காக என்ற முதல் காரணத்திலேயே தடை செய்திருக்கின்றார்கள்.

தமிழகத்தில் இப்பொழுது நடந்து கொண்டிருப்பது காளைகளுக்கு ஆதரவான போராட்டம் ஆனால் அந்த காளைகளை அழித்தொழிக்க வேண்டிய இந்திய அரசு மற்றும் பீட்டாவுக்கு எதிராக வந்துள்ளவர்கள் தமிழர்களே..

காளைகளை அழிக்க முன்வந்தவர்களுக்கு எதிராக மட்டும் தமிழர்கள் வரவில்லை அமெரிக்க தயாரிப்புகளை முற்றிலும் தடை என்ற கோசத்துடன் வந்துள்ளார்கள்.

தமிழ்நாடு வியாபார சங்கம் 26ம் திகதி முதல் பெப்சி கோக் போன்றவற்றிக்கு தடை என அறிவித்துள்ளது, மேலும் கே.எப்.சி, மக்டொனால்ஸ் என அமெரிக்க நிறுவனங்களுக்கு மற்றும் பொருட்களுக்கு எதிரான போராட்டங்கள் முழுவீச்சு பெற்றுள்ளது, கோக் பெப்சி போன்றவற்றை வீதியில் கொட்டி அசரடிக்கின்றார்கள்.

அமெரிக்க நிறுவனங்களுக்கோ, பொருட்களுக்கோ அல்லது அமெரிக்கா டொலருக்கோ ( US-Doller ) தடை அல்லது இடைஞ்சல் என்றால் அமெரிக்கா நிச்சயம் வேடிக்கை பார்க்காது.

டொலருக்கு பதில் தங்கம் கேட்டதால்தான், லிபியா அழிக்கப்பட்டது, கடாபி சுட்டுக் கொல்லப்பட்டார், சதாம் உசைன் தூக்கிலிடப்பட்டார், அமெரிக்காவுக்கு இடம் கொடுக்காததால்தான் தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்க உதவியது.

அமெரிக்காவுடன் அணுசக்கி ஒப்பந்தம் போடாததால்தான் ஈரான் மிரட்டப்பட்டது இப்படி பல சான்றுகள் உண்டு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.