ஜூலை 16, 1945 ஆம் ஆண்டு (சரியாக 72 ஆண்டுகள் ) நியூ மெக்சிகோ பகுதியின் வைட் சாண்ட்ஸ் ப்ரூவிங் கிரவுண்ட் எனும் இடத்தில் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் சோதனை செய்யப்படுகின்றது.
இந்தச் சோதனை நிச்சயம் தோல்வியை தழுவும் என் சிலர் நினைத்தனர்.
இன்னும் சிலர் இந்த ஆயுதமானது நியூ மெக்சிகோ நகரையே அழிக்கப் போகின்றது என நினைத்தனர்.
சோதனை செய்யப்பட்டும் மைதானத்தை விட்டு சுமார் 10-20 மைல் தூரத்தில் சோதனையின் பார்வையிடும் பகுதி அமைக்கப்படுகின்றது.
சரியாக 5.29 மணி 45 விநாடிகளில் முதல் அணு ஆயுதம் வெடிக்கச் செய்யப்படுகின்றது.
இது தான் இன்று வரை உலகம் அறிந்த முதல் அணு ஆயுதம் என நினைக்கப்பட்டு வருகின்றது.
ஆனால் இதற்கு முன்னரே அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டது.
நியூ மெக்சிகோவில் வெடிக்கச் செய்யப்பட்ட ஆயுத வெடிப்பில் இருந்து நெருப்பு சுமார் 600 அடி அகலத்திற்குப் பரவுகின்றது.
இதன் பாதிப்பு சுமார் 20,000 டன் டிஎன்டி வெடிக்கும் போது ஏற்படுவதைப் போன்று இருந்தது.
இதன் வெடிப்பு துகள்கள் மேகத்தில் சுமார் 7 மைல் உயரத்திற்குப் பறந்து செல்கின்றது.
இதன் நடுக்கமானது சுமார் 100 மைல் தூரத்திலும் உணரப்படுகின்றது. அன்று உலகில் புதிய ஆயுதம் ஒன்று கிடைக்கின்றது.
இதனைக் கண்டறிந்த டாக்டர். ராபர்ட் ஓபென்ஹெய்மர் அதிர்ந்து போனார்.
இச்செய்தியைக் கேட்டு சிலர் சிரித்தனர், சிலர் அதிர்ச்சி அடைந்தனர், ஆனால் பெரும்பாலானோரும் அமைதியாய் இருந்தனர்.
முதல் முறையாக உலகம், மனிதன் கண்டறிந்த மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் மூலம் தாக்கப்படுகின்றது.
ஆனால் இது போன்ற ஆயுதம் முன்பே பயன்படுத்தப்பட்டிருந்தால் பூமியின் வரலாறு எப்படி இருந்திருக்கும்.
சில வரி ஆதாரங்களை கொண்டு அணு போர் மற்றும் அணு ஆயுதங்கள் பூமியில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருக்கலாம் இவை பல ஆண்டுகளுக்கு முன் அரங்கேறியிருக்கலாம் ?
அவற்றை பற்றி விரிவாக அடுத்த பகுதியில் காண்போம்.... தொடரும்....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.