31/07/2017

திருட்டு திராவிடர்ஸ்...


நான் : தமிழர் கழகம் என்று வைக்காமல் ஏன் திராவிடர் கழகம் என்று வைத்தார்?

திராவிடர் : தமிழர் கழகம் என்று வைத்தால் பார்ப்பான் உள்ளே வந்து விடுவான், அதனால் திராவிடர் கழகம் என்று வைத்தார்,

நான் : அப்ப கன்னடன், தெலுங்கன், மலையாளி உள்ளே வந்தால் பரவாயில்லையா என்றேன்,

திராவிடர் : நீ இனவெறிப் பிடித்து அலைகிறாய் என்றுவிட்டு கிளம்பிட்டார்,

இது போன மாதம்...

நான் : மேலே கேட்ட அதேக்கேள்வியை அப்படியே கேட்டேன்,

திராவிடர் : அன்றைய சென்னை மாகாணத்தில் கன்னடர், தெலுங்கர், மலையாளி, தமிழர்கள் என அனைவரும் ஒன்றாக இருந்தனர், அதனால் திராவிடர் கழகம் என்று வைத்தார்,

நான் : சரி அன்றைய சென்னை மாகாணத்தில் வசித்த மற்ற மொழியினருக்கு தமிழ் தெரியுமா என்று வினவினேன்,

திராவிடர் : மொழி பிரச்சனையில்லை, மொழி ஒரு கருத்து பரிமாற்றக் கருவியே தவிர வேறொன்றுக்கும் பயனில்லை என்றார்,

நான் : சரி மொழி கருத்து பரிமாற்றத்திர்க்கு மட்டுமே பயன்படுவதாக வைத்துக் கொள்வோம், மற்ற மொழியினருக்கு எவ்வாறு கருத்தை பரிமாற்றம் செய்தார் உங்க ஆசான்,

அவர்கள் மொழியில் கருத்தை பரிமாற்றம் செய்ய ஏதாவது ஏடுகள் வெளியிட்டாரா?

(உ.தா: விடுதலை, குடியரசு போன்று) என்றுக் கேட்டேன்..

திராவிடர் : நீ மொழிவெறிப் பிடித்து அலைகிறாய் என்றுவிட்டு கிளம்பிட்டார்,

இது இந்த மாதம்...

இந்த பிழைப்புக்கு மரத்தில் நாண்டுக்கிட்டு சாகுங்கடா...

மொழி சிலர் சொல்வதைப் போல கருத்துப் பரிமாற்றக் கருவி மற்றுமல்ல...


தாய்மொழி தன்னம்பிக்கையின் அடையாளம், நம் வரலாற்றுப் பெட்டகம்.

அதில் பண்பாடு, இன அடையாளம் என அனைத்தும் பொதிந்து கிடக்கின்றன..

எதிரி முதலில் கை வைப்பது மொழியில் மட்டுமே..

அதை அழித்தால் போதுமானது, ஓர் இனத்தை இல்லாதாக்க...

விழித்தெழு தமிழா...

கருப்பட்டியின் பயன்கள்...


பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

சீரகத்தை வறுத்து சுக்குக் கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்… சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது...

இம்பூட்டு தாங்க பிக் பாஸ் இரகசியம்...




அமெரிக்கர்களிடையே அதிகரித்து வரும் ஆவிகள் மீதான நம்பிக்கை...


அமெரிக்காவின் ப்யூ ஆராய்ச்சி மையத்தின் சமீபத்திய ஆய்வின்படி ஐந்தில் ஒரு அமெரிக்க குடிமக்கள் ஆவிகளை நேரில் பார்த்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

மொத்த அமெரிக்கர்களில் பதினெட்டு சதவிகிதம் பேர் தாம் நேரில் ஆவிகளை பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர் என இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு இதேபோல நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் பதிமூன்று சதவிகிதம் பேர் இறந்து போனவர்களைப் பார்த்ததாக குறிப்பிட்டிருந்தனர்.

இது கடந்த 1996-ம் ஆண்டு ஒன்பது சதவிகிதமாக இருந்தது. மொத்த மக்கள் தொகையில் இருபத்தாறு சதவிகித ஆண்களும், முப்பதுமூன்று சதவிகித பெண்களும் அமானுஷ்யமான அனுபவங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்...

மதுரை திருப்பரங்குன்றம் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலிசார் தடியடி...


ரத்தம் சொட்ட சொட்ட இழுத்து செல்லப்பட்டனர்...

NLC ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக வடலூரில் நடைபெற்ற போராட்டத்தில் போலிசார் தடியடி...



பாமக அன்புமணி வருகை அறிந்து லாரி ஓட்டுனர்கள் இறங்கி ஓட்டம்...


கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட வரிசை கட்டி நிற்ற 1000 லாரிகள்..

மக்கள் நலனுக்காகவும் மண் நலனுக்காவும் களத்தில் அன்புமணி அவர்கள்....

மணல் அள்ள அனுமதியளித்த தஞ்சை, நாகை & திருவாரூர் மாவட்ட ஆட்சியர்கள் மீது வழக்கு தொடர்வேன் - அன்புமணி...

திமுக வும் டூபாக்கூர் வேலையும்..


யோகா முத்திரைகள்...


முத்திரை யோகம் ஹதயோகத்தின் ஒரு அங்கம். எளிமையானது. சுலபமாக செய்யக் கூடியது. நம் விரல்களை பயன்படுத்தி செய்யக்கூடிய ஆசனங்களாகும். மற்ற விரல்களால் கட்டை விரலை தொடுவது இதன் முக்கிய அம்சம்.

ஆயுர்வேதம் மற்றும் யோகா இவற்றின் அடிப்படை தத்துவம் – உலகில் உள்ள அனைத்தும் ஐந்து மூலப் பொருட்களால் ஆனவை. இந்த பஞ்ச மஹாபூதங்கள்  ஆகாயம், வாயு, அக்னி, நீர், பூமி. ஆகாயம் ஈதர் என்று விஞ்ஞான ரீதியாக கூறப்படுகிறது.

உலகின் பொருட்களை சூழ்ந்து இருப்பது ஆகாயம். பூமி அடர்த்தி மிகுந்தது. நீருடன் சேர்ந்த பூமி கபதத்துவமாக சொல்லப்படுகிறது. வாயு உருவமில்லாத ஆகாயத்துடன் சேர்ந்து வாயு உடலில் வாதத்தத்துவத்தை ஏற்படுத்துகின்றன. அக்னி பித்தம். லகுவானது. வெளிச்சத்தை உண்டாக்கும். இந்த பஞ்சபூதங்கள் உடலில் சமச்சீராக இருந்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் இவைகளில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால் வியாதி உண்டாகும்.

நமது கைகளின் ஐந்து விரல்கள் பஞ்ச பூதங்களை குறிக்கின்றன..

1. கட்டைவிரல் – அக்னி
2. ஆள்காட்டி விரல் – வாயு
3. நடுவிரல் – ஆகாயம்
4. மோதிரவிரல் – பூமி
5. சுண்டுவிரல் – நீர்.

இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால்
உடல் நலம் கூடும்.

முத்திரைகளை பயிலும் முறை..

1. பத்மாசனம் போன்ற உட்காரும் ஆசனங்களில் அமர்ந்து யோக முத்திரைகளை செய்வது சிறந்தது. ஆனால் நீங்கள் பல நிலைகளில் முத்திரைகளை செய்யலாம். டி.வி. பார்க்கும் போது, நிற்கும் போது, பயணிக்கும் போதும் செய்யலாம்.

2. ஞான முத்திரைதவிர மற்றவைகளை ஒரேசமயத்தில் இரண்டு கைகளை உபயோகித்து செய்யலாம்.

3. எல்லா பருவத்தினரும், எப்போது வேண்டுமானால் முத்திரைகளை செய்யலாம். விலக்கு சூன்ய முத்திரை. இது மட்டும் காது கேட்காதவர்கள் மட்டும் செய்ய வேண்டிய பயிற்சி.

4. எல்லா முத்திரைகளையும், அக்னியை குறிப்பிடும் கட்டைவிரலை சேர்த்துத் தான் செய்ய வேண்டும்.

5. இவற்றை செய்யும் போது, விரலோடு விரலை மெதுவாக தொடவும். அழுத்த வேண்டாம்.

6. முதலில், ஆரம்பத்தில் 10-15 நிமிடம் இந்த யோகமுத்திரை பயிற்சிகளை செய்யவும். பிறகு தினமும் 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.

7. வலதுகை முத்திரைகள் உடலின் இடது பக்க அவயங்களுக்கு பலன் அளிக்கும். அதே போல் இடது கையினால் செய்யப்படும் பயிற்சிகள் வடபக்க உறுப்புகளுக்கு பலன் கொடுக்கும்.

முத்திரைகள் 100 வகைகள் உள்ளன. முக்கியமான சில..

1. பிராண முத்திரை – மோதிர மற்றும் ஆள்காட்டி விரல்களை சேர்த்து வளைத்து கட்டை விரலை தொடவும்.

பயன்கள் – களைத்தை உடலை புதுப்பிக்கும். நரம்புத்தளர்ச்சியை போக்கும் பார்வைத் திறன் அதிகரிக்கும். ஞானமுத்திரையுடன் சேர்த்து செய்தால், தூக்கமின்மை வியாதி குணமாகும். அபான முத்திரையுடன் சேர்த்து செய்தால் நீரிழிவு குணமாகும். உடலில் நோய் தடுப்புசக்தியை அதிகரிக்கும். பொதுவாக ஆரோக்கியம் மேம்படும்.

2. ஞான முத்திரை – இதில் வாயுவையும், அக்னியையும் சேர்ப்பது போல் ஆள்காட்டி விரலின் நுனியால் கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் நிமிர்ந்து நிற்கவும்.

பயன்கள் – மூளைக்கு அதிக ரத்தம் பாயும். மூளை செயல்பாடு, ஞாபகசக்தி அதிகரிக்கும். முன்பு சொன்னபடி ‘பிராண முத்திரையுடன் செய்தால்’ தூக்கமில்லா வியாதியை தீர்க்கும்.

3. அபான முத்திரை – நடு விரல் மற்றும் மோதிர விரல்களின் நுனிகளை சேர்த்து கட்ட விரலின் அடிப்பகுதியை தொடவும்.

பயன்கள் – நீரிழிவு நோயினால் ஏற்படும் சிறுநீர் பாதிப்புகளை குறைக்கும். அடைப்பட்ட மூக்கு சலியை குறைக்கும். மல ஜலங்கள் சீராக பிரிய உதவும். வியர்வையை அதிகரித்து உடலின் நச்சுப் பொருட்களை களையும்.

4. அபான வாயு முத்திரை (மிருத்த சஞ்சீவினி முத்திரை) – ஆள்காட்டி விரல் (வாயு) நுனியை கட்டைவிரலின் (அக்னி) கட்டை விரலின் அடியை தொடவும் பிறகு நடு விரல் மற்றும் மோதிர விரல்களால் கட்டை விரல் நுனியை தொடவும்.

பயன்கள் – இந்த முத்திரை இதயத்திற்கு நல்லது. அதனால் இதன் மற்றொரு பெயர் இதய முத்திரை. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். வாயு மற்றும் தலைவலியை குறைக்கும்.

5. வாயு முத்திரை – ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடி பகுதியை தொடுவது வாயு முத்திரை ஆகும். கட்டை விரல் வளைந்து மெதுவாக ஆள்காட்டி விரலின் கனுவை தொட வேண்டும்.

பயன்கள் – மூட்டு வலி – ஆர்த்தரைடீஸ், ரூமாடீஸம், ஸ்பாண்டிலோஸீஸ் இவற்றின் வலிகளை குறைக்கும். பிராண முத்திரையுடன் சேர்த்து செய்தால் முழு பயன் கிடைக்கும்.

6. பிருத்திவி முத்திரை- மோதிர விரல் நுனியால் கட்ட விரல் நுனியை தொடவும்.

பயன்கள் – உடலையும் உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. மன அமைதியை உண்டாக்கும். உடலை பருமனாக்கும்.

7. சூரிய முத்திரை – மோதிர விரலை வளைத்து அதன் நுனி கட்டை விரலை தொடவும். கட்டை விரல் வளைந்து மோதிர விரலை அழுத்த வேண்டும். இந்த முத்திரையை பத்மாசனத்தில் அமர்ந்து இரு கைகளால் செய்ய வேண்டும்.

பயன்கள் – டென்ஸன், அதிக உடல் பருமன் இவற்றை குறைக்கும். சோம்பலை போக்கும்.

8. வருன முத்திரை – சுண்டு விரல் நுனியை கட்டை விரல் நுனியால் தொடவும்.

பயன்கள் – சிறுநீரக கோளாறுகள் ரத்தத்தில் நச்சுப் பொருள்கள் நீர்மச் சத்து குறைவு சூளுக்கு இவற்றுக்கு எல்லாம் இந்த முத்திரை நல்ல சிகிச்சை.

9. லிங்க முத்திரை – இரண்டு உள்ளங்கைகளையும் சேர்க்கவும். இரண்டு கைகளின் விரல்களை ஒன்றுக்கொன்றுடன் பின்னிக் கொள்ளவும். இடது கட்டை விரலை மட்டும் விட்டுவிடவும். இந்த விரல் தனித்து நிமிர்ந்து நிற்கட்டும் வலது கையின் கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் லேசாக இடது கட்டை விரலை தொட்டுக் கொண்டு மற்ற விரல்களை பிடித்துக் கொள்ளவும்.

பயன்கள் – இந்த முத்திரையை குளிர்காலத்தில் செய்வது நல்லது. உடல் உஷ்ணம் அதிகரிக்கும். ஜீலதோஷம் இருமலுக்கு நல்லது. உடல் எடை குறைக்கும். இந்த பயிற்சியை செய்பவர்கள் பால், நெய், பழங்கள், மற்றும் தண்ணீர் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

10. சூன்ய முத்திரை – இந்த முத்திரையில் நடு விரல் கட்டை விரலின் அடி பகுதியை தொட வேண்டும். கட்டை விரல் வளைந்து நடு விரலின் கனுவை தொட வேண்டும்.

பயன்கள் – இந்த முத்திரை காது கோளாறுகளுக்கு சிறந்தது. வலது காதில் பாதிப்பு இருந்தால் இந்த முத்திரையை வலது கரத்தால் செய்ய வேண்டும். அதே போல் இடது காதில் கோளாறுகளுக்கு இடது கரத்தால் செய்ய வேண்டும். காது கோளாறு உள்ளவர்கள் இந்த முத்திரையை அடிக்கடி, 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.

எச்சரிக்கை...

1. காது கோளாறு இல்லாதவர்கள் இந்த முத்திரையை செய்யக் கூடாது. செய்தால் காதுகளில் அடைப்பு ஏற்படும்.

2. இந்த முத்திரையை செய்யும் பொழுது இரண்டு கைகளையும் உபயோகிக்க வேண்டாம்.

11. சங்க முத்திரை – இடது கை கட்டை விரலை வலது கை விரல்களால் பிடித்துக் கொள்ளவும். இடது ஆள்காட்டி விரல் வலது கை கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மீதமுள்ள இடது கை மூன்று விரல்களால் வலது கை விரல்களை லேசாக அழுத்தவும். இந்த பயிற்சியை கைகளை மாற்றி மாற்றி செய்யவும்.

பயன்கள் – தொண்டை பாதிப்புகள், தைராயீடு பிரச்சனைகள், ஜீரண கோளாறுகள் இவற்றை குறைக்கும். குரல் வளத்தை அதிகரிக்கும்.

12. ஆகாய முத்திரை – கட்டை விரலின் நுனியை நடு விரலால் தொடவும்.
பயன்கள் – இதயத்திற்கு நல்லது. தேவைப்பட்டால் மட்டும் இந்த முத்திரையை செய்யவும்.

நமது பழங்கால முனிவர்கள் விரல் நுனிகளில் ஒரு வித மின்சக்தி இருப்பதாக கருதினர். முத்திரைகளை பயிலும் போது, இந்த மின்சக்தி பல பலன்களை தரும் என்று நம்பினர்...

அருன் ஜெட்லி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க இருந்த சென்னை பல்கலை மாணவர்களை காவல்துறை சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ளே சிறை வைத்துள்ளது...


பாஜகவில் அமித்ஷா தலைமையில் இணையும் ஓபிஎஸ்?


பாஜக தனது கட்சியை இந்தியா முழுவதும் பெரும்பாலான இடங்களில் நிலை நிறுத்தியுள்ளது. வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி வலுவாக உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் பாஜக ஆட்சி அமைக்க போராடி வருகிறது. அதிமுக கட்சிகளில் இரு பிரிவுகளும் பாஜக கட்டுபாட்டில்தான் உள்ளது. ஓபிஎஸ் அணியை பாஜகவில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைப்பெற்றுவதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அடுத்த மாதம் 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தமிழகத்தில் முகாமிடுகிறார். அப்போது தமிழக பாஜகவில் நிறைய மாற்றங்கள் அதிரடியாக நடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

அமித்ஷாவின் இந்த பயணத்தின்போது ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் ஓபிஎஸ் அணியை பாஜகவில் இணைக்கும் பணி நடைப்பெறும் என்று கூறப்படுகிறது...

திராவிடத்தால் வீழ்ந்தோம்.... முன்னுரையில் இருந்து மேலும்..


இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் ஈ.வே இராமசாமிப் பெரியார் கட்டியமைத்த திராவிடர் கழகத்தின் தொடக்கக் கால உறுப்பினர் யாருமே இருக்க மாட்டார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவிய தலை மக்கள் யாருமே இருக்கப் போவதில்லை அவற்றின் வழி வந்த பிற கழகங்களோ பெயருக்குதாம் அவற்றின் கொள்கை வழி நிற்பன.

செத்த உடம்பை ஒரு பக்கத்தில் வைத்துக் கொண்டு சாகக் கிடக்கின்ற அதன் திராவிடக் கொள்கையை இந்நிலையில் ஆழமாக அலச வேண்டி உள்ளது.

வளர்ந்துவரும் தமிழ்த் தேசிய ஓர்மைக்கு நல்ல ஊட்டமும் தெளிவும் கிடைக்கும் என்பதைக்  கருதியே இந்த ஆய்வை நடத்த வேண்டி உள்ளது.

அதை திராவிடக் கொள்கை தமிழக அரசியல் வாழ்வியலின் மீது முக்கால் நூற்றாண்டுகளாக அழுந்தக் குந்திக் கிடந்ததனால் தமிழுக்கும் தமிழரினத்திற்கும் நன்மைகளை விடத் தீமைகளே மிகுந்தன வென்பதைத் தமிழரில் இளந்தலைமுறையினருக்கு  மிகத் தெளிவாக உணர்த்தியே ஆக வேண்டும்.

இதனால் எட்டிக் கசப்பான சில உண்மைகளையும் உள்ளடக்க நேர்ந்தது.

குறுநூலாக வடிவெடுத்துள்ள இந்தக் கட்டுரை நல்ல தூசியைக் கிளப்பும்  என்பதை நூலாசிரியன் என்னும் வகையில் நன்கறிவேன்.

தமிழரினத்தின் நலன் கருதி ஒரு வரலாற்றுப் பணியைச் செய்யாமலிருக்க இயலவில்லை. உண்மை விளங்கியும் அதைப் புலப்படுத்தாமை கயமையாகுமன்றோ ?

அதை மனத்தில் கொண்டே சில கருத்துக்களைக் கட்டுரையாக்கித் தமிழ் மக்களின் முன்னால்  படைத்திடத் துணிந்தேன் போற்றல்களாயினும்  தூற்றல்களாயினும்  அவற்றையெல்லாம் கட்டிச்  சுமக்கத் தானே வேண்டும் ?

அவையாவும் காலம் என்மேல் ஏற்றிட்ட பொதியே எனக் கருதி விளைவைப் பற்றிக் கவலை கொள்ளாமல் ஏடெடுத்தென் எழுதுவதற்கு.

அறிவர் குணா.. நன்றியும் நெகிழ்வும்...

பாஜக வானதி சீனிவாசன் வஞ்சனமீன வருத்து கொடுத்த போது சாஸ்திரம் சம்பரதாயம் எல்லாம் கடல் காத்துல பறந்துடிச்சிடோய்.....


மூன்றாவது நாளைக் கடந்து தொடர்கிறது உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்கக் கோரி காலவரையரையற்ற பட்டினிப் போராட்டம்...


இந்திய அரசே.. தமிழ்நாடு சட்டமன்றத்தின் 2006-ம் ஆண்டு தீர்மானத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற்றுக் கொடு என்று போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் தமிழ்-போராட்டக் குழுவின் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மே பதினேழு இயக்கமும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளது.

தமிழில் வழக்காடுவதென்பது நமது பிறப்புரிமை. இந்த 8 தோழர்களும் நமது உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

மதுரை காளவாசலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த போராட்டத்தில் பெருமளவில் திரண்டு ஆதரவினை அளிக்க வேண்டியது அனைவரின் கடமை.

உரிமைகளை மீட்க அனைவரும் திரண்டு தோழர்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் கேட்டுக் கொள்கிறது...

தெலுங்கானா முதல்வர் பேச்சால் பரபரப்பு...


போதை பொருள்களை உட்கொண்ட தெலுங்கு நடிகர், நடிகைகள் மீது கைது நடவடிக்கை எடுக்க மாட்டோம்..

போதை பொருள்களை உட்கொண்ட தெலுங்கு நடிகர், நடிகைகளை குற்றவாளிகளாக கருதக் கூடாது, அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

எனவே அவர்கள் மீது கைது நடவடிக்கை பாயாது என்று தெலுங்கானா முதல்வர் கூறியுள்ளார்...

பாஜக தலைவர் அமித்ஷாவின் சொத்து 5 ஆண்டில் 300% சதவிகிதம் உயர்வு. 8.54 கோடி ரூபாயாக இருந்தது 34.31 கோடியாக மாறியுள்ளது, வெளியிட்டவுடன் செய்தியை நீக்கிய தேசிய ஊடகங்கள்...


பாஜக தலைவர் அமித்ஷா மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு போட்டியிட்டுள்ளார். இதற்காக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் அவரின் மொத்த சொத்து மதிப்பு (மனைவியுடையதும் சேர்த்து)  ரூ 34.31 கோடியாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு அவரின் சொத்து மதிப்பு  ரூ 8.54 கோடியாக இருந்ததாக "Business Insider" குறிப்பிட்டுள்ளது, கிட்டதட்ட 5 ஆண்டுகளில் 300% சதவிகிதம் அமித்ஷாவின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கில் காட்டியதே இத்தனை மடங்கு என்றால் கணக்கில் வராதது எத்தனை மடங்காக இருக்கும் என எதிர்கட்சிகள் விமர்சனங்களை எழுப்பி வருகின்றது.

சேவை செய்ய வருகின்றோம் எனக் கூறும் அரசியல்வாதிகளின் சொத்து மதிப்பு இத்தனை மடங்கு உயர்கிறது என்றால் இவர்கள் யாருக்கு சேவை செய்கின்றார்கள் தங்களுக்காகவா அல்லது நாட்டு மக்களுக்காகவா அரசியல்வாதிகளிடையே ”கொடி மற்றும் கட்சி” பாகுபாடு மட்டும் தான் இருக்கின்றதே தவிற வேறு எந்த வித்தியாசமும் இல்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த செய்தியை வெளியிட்ட தேசிய ஊடகங்கள பாஜக விற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்ததும் சில மணி நேரங்களில் அந்த செய்தியை உடனடியாக நீக்கியுள்ளது குறிப்பிடதக்கது.

இது தான் ஊடக தர்மமா என கடும் விமர்சனங்களை நடுநிலையாளர்கள் எழுப்பி வருகின்றனர்...

கதிராமங்கலத்தில் 71ஆவது நாளாகத் தொடரும் அறப் போராட்டம்.. எப்ப விடிவு ?


கதிராமங்கலத்திலிருந்து ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து 71-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....

கம்யூனிசம் - திராவிடம் எல்லாமே தெலுங்கர்களின் கூடாரம் தான்...


பொதுவுடமை பொங்கச்சோறும் மாட்லாடு மனவாடுகளின் கூடாரம்தான்...

என்னடா இது திராவிடமும், பொதுவுடமையும் கூடிக் குழாவும் காரணமும் இதுவே...

ஏழு கொண்டல வாடா கோவிந்தா கோவிந்தா...

திமுக கருணாநிதி வரலாறு...


அன்னகாவடியாக அரசியலில் புகுந்தவர்..

அண்ணாவின் மரணத்தை ஆவலோடு எதிர்பார்த்து அதிகாரத்தை பிடிப்பதற்கு அழைந்தவர்..

எங்கள் தங்கம் எம்ஜிஆர் அவர்களை ஏணியாக்கி ஏற்றங்கள் கண்டவர் ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைத்தவர்..

பூச்சிமருந்து, உரபேரம், வீராணம் குழாய், பாமாயில் இறக்குமதி, மஷ்டர்ரோல், சர்க்கரை பேரம், BSNL, ஷ்பெக்ட்ரம், என ஊழல்களல் கோடி கணக்கில் பணத்தை குவித்தார்..

உலக பணக்காரர் பட்டியலில் ஒரு இடத்தை பிடித்தவர்..

போகும் இடம் எல்லாம் பொண்டாடி வைத்து கொண்டவர்..

இந்திராவை ஆள வைத்து இறக்கம் இன்றி அடித்தவர்..

ஊழல்-1977 தேசவிரோதம்-1991 குற்றத்துக்காக குடியரசு தலைவரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு குற்றவாளி ஆனவர்..

குங்குமம் விற்று கோடி கணக்கில் சேர்த்தவர்.

ஊழலுக்கும் லஞ்சம்த்துக்கும் உருவம் பெற்றவர்..

தமிழ் இன துரோகி - கருணாநிதி...

பாண்டியர் கால நீர்ப்பாசன முறைகள் குறித்த கல்வெட்டு...


பாண்டியர் கால நீர்ப்பாசன முறைகள் குறித்த கல்வெட்டு, குருவித்துறை பெருமாள் கோயிலில் இடம் பெற்றுள்ளதாக, தொல்லியல் ஆய்வாளர் தெரிவித்தார்.

தானம் அறக்கட்டளை சார்பில், குருவித்துறை சித்திரை ரத வல்லப பெருமாள் கோயில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பாரம்பரிய நடைபயணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தொல்லியல் அறிஞர் முனைவர் வெ. வேதாசலம் பேசியது...

பராக்கிரம பாண்டியன் காலத்தில் அரசாங்க அதிகாரியாக குருவித்துறை பகுதியில் பணியாற்றிய மாதவனான சோழ முத்தரையன் என்பவர், தனது நிலத்துக்காக வைகையிலிருந்து வெட்டப்பட்ட வாய்க்கால் மூலமாக பாசனம் செய்து வந்தார்.

அவ்வூரைச் சேர்ந்த மற்றொருவர், அக்கால்வாய்க்கு மேல் மற்றொரு கால்வாயை உருவாக்கி, தனது நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சினார்.

இதனால், ஊருக்குள் பெரும் சிக்கல் ஏற்பட்டது. ஊர் சபையாலும் தீர்த்து வைக்க இயலாமல், கடைசியாக பாண்டிய மன்னனிடம் அவ்வழக்குச் சென்றது. பராக்கிரம பாண்டியன் இதனை விசாரணை செய்து, இறுதியாக ஒரு கால்வாய்க்கு மேல் மற்றொரு கால்வாய் உருவாக்குவது சரியான நடைமுறையன்று எனத் தீர்ப்பளித்து, அத்தீர்ப்பினை குருவித்துறை கோயில் கல்வெட்டிலும் பொறித்தார்.

காலுக்கு மேல் கால் கல்லலாகாது என்பது தான் நீர்நிலை குறித்த புகழ்பெற்ற கல்வெட்டுச் செய்தி.

நீர்ப்பாசனத்தில் இந்த நடைமுறை இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது என்றார்.

வரலாற்று அறிஞர் முனைவர் இரா. வெங்கட்ராமன் பேசுகையில், குருவித்துறைக்கு அருகே ஓடும் வைகை வலமிருந்து இடமாகத் திரும்புகின்ற வலஞ்சுழியில் இப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

ஒரு காலத்தில் இவ்வூர் பாண்டியனின் பெயரால் ஸ்ரீவல்லபபுரம் என்றே அழைக்கப்பட்டது. அப்பெயராலேயே இங்குள்ள திருமாலும் அழைக்கப்படுகிறார் என்றார்.

குருவித்துறையின் வரலாற்றுப் பெருமைகளை விளக்கும் துண்டறிக்கையினை, முனைவர்கள் வெ. வேதாசலம், இரா. வெங்கட்ராமன் ஆகியோர் வெளியிட, குருவித்துறை ஊராட்சித் தலைவர் கர்ணன் பெற்றுக்கொண்டார்.

பாரம்பரிய ஒருங்கிணைப்பாளர் கே.பி. பாரதி மற்றும் நடைபயணக் குழுவினருடன் ஊர்ப் பொதுமக்களும், சோலை வட்டாரக் களஞ்சியத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், பணியாளர்கள் உள்பட பலர்பங்கேற்றனர்...

செய்தி - 2016...

20/2/1956 ல் தமிழகத்தில் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் தமிழர்களுக்குரியது என்று வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடந்துள்ளது...


அதில் பங்கேற்ற கட்சிகள்...

தமிழரசுக் கழகம்,
தமிழரசு பொதுவுடமைக் கட்சி,
தமிழரசு சோசலிசக் கட்சி,

நிராகரித்தவை எதுவென்று தெரியுமா?

திராவிடர் கழகமும்,
பேராயக்கட்சியும்,

பார்ப்பனீய கட்சியும், பார்ப்பனீய எதிர்ப்பு இயக்கமும் கலந்துக்கொள்ளாதது ஏன்?

சேட்டன் பணிக்கர் வந்தார், இவ்விரண்டு ஸ்தலங்களும் மலையாளிகளுக்கே ஃசொந்தம், தமிழர்கள் இவ்விட பணிக்காரானு என்று தீராவிடரிடம் பறஞ்சதும்..

குளமாவது மேடாவது எல்லாம் இந்தியாவிர்க்குள் தானே உள்ளது என தேசியவாதியும் சொன்னதா இருக்குமோ?

இன்று நீ தமிழன் என்று உன்னை அடையாளப்படுத்துவதர்க்கு காரணம் பொரியாரர் - திருட்டு திராவிடர்ஸ்...


இன்று நீ கணினியில் தமிழைப் பயன்படுத்துவதற்க்கு பொரியாரே காரணம் ,

இன்று அனைவருக்கும் கல்வி சென்றடைய பொரியாரேக் காரணம்,

புலவர்களிடம் மட்டும் புழங்கிக் கொண்டிருந்த திருக்குறளை மக்களிடம் கொண்டுச் சென்றவர் பொரியாரே ,

இப்படி நீ கோவணம் கட்டத் தொடங்கியது, பல் விளக்கத் தொடங்கியது, என அனைத்திர்க்கும் பொரியாரே காரணம் எனக்கூவும் தீராவிடவாதிகளே,

தமிழில் என்ன உள்ளது, அதை தூக்கியெறி, ஆங்கிலத்தை தூக்கிப்பிடி என்றது யார்?

முதன் முதலில் எழுத்துச் சீர்மையை பயன்படுத்தியது யார்?

அடுத்தடுத்து எழுத்துச் சீர்மையை கொண்டு வர, பாடுப்பட்ட பாரதி, வ.உ.சி, குமரப்பா இதழ் ஆசிரியர் முருகப்பா யார்?

திருவள்ளுவரை ஆரியக் கைக்கூலி என்றும், திருக்குறளில் மலம் நாற்றம் வீசுகிறது என்றுச் சொன்னது யார்?

தமிழகம் முழுவதும் 6000 பள்ளிகளைக் கொண்டு வந்து அனைவருக்கும் கல்வியைத் தந்தது யார்?

திருக்குறளை கண்டுப்பிடித்து, திருவள்ளுவரின் நினைவாக பொதுக்கிணறு வெட்டி குறளைப் பதித்த எல்லீசு யார்?

சரி அதுப்போகட்டும் இன்று இட ஒதுக்கீட்டில் தமிழரல்லாதவர் அதிகம் பலனை அடைய யார்க் காரணம்?

மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டு அந்தந்த மாநிலத்தவர் தன் தாய்மொழியை ஆட்சி மொழியாகவும், பாடமொழியாகவும் ஏற்றுக்கொண்டிருக்கும் போது,
தமிழகத்தில் மட்டும் வட்டார மொழியை முன்மொழிந்ததர்க்கு யார்காரணம்?

மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்ட போது தமிழர்ப் பகுதிகள் பறிப்போக யார் காரணம்?

பொரியார் மண் பொரியார் மண் என்கிறிர்களே? எது பொரியார் மண்?

நாடு முழுவதும் கோயில்களும், மதுக்கடைகளும், சிலைகளும் நிறைந்திருப்பது தானே, திராவிடத்தின் சாதனை?

இன்று தமிழர்கள் தன் இன உணர்வை மறந்து, மொழியுணர்வை இழந்து நிற்பதுதானே திராவிடத்தின் சாதனை?

வேண்டாம் திராவிடர்களே புரட்டு வரலாற்றை புரட்டி புரட்டி எஞ்சியவர்களையும் பாழாக்காதிர்கள்...

திராவிடத்தால் வீழ்ந்தோம்...


விவசாயிகள் பிரச்சனை குடிநீர் பிரச்சனை இப்படி மக்கள் பிரச்சனைகள் ஏராளமிருக்க ரஜினி கமல் குறித்து கேட்பதா - பாமக மருத்துவர் அன்புமணி விளாசல்...


30/07/2017

குழந்தைகளை கடத்தும் பாஜக கும்பல்...


பாஜக எம்.பி.க்கு போலிஸ் வலை.. பாஜக என்றாலே யோக்கியர்கள் தான்...

இதில் எது பொய், இல்ல மூணுமே பொய்யா ?


திறந்து வைக்க வர்றதுக்கே 47 (அ) 58 (அ) 52 கோடி செலவா இல்ல பாலம் கட்டுனது இவ்வளவு செலவுலயா ?

அந்த மேம்பாலம் அமைந்துள்ள இடம் மட்டும் மாட்டு மந்தை அல்ல திறந்து வைக்கிற முண்டங்களும் தான்,

இந்த அர லூசுகள வச்சுகிட்டு அந்தம்மா கட்சி நடத்துனது, உண்மையிலயே பார் போற்றும் பல்லாண்டு சாதனை தான்.....

பாஜக வின் புரோக்கர் கிருஷ்ணசாமி...


50 எம்எல்ஏக்களுடன் விரைவில் தினகரன் களம் இறங்க உள்ளதாக தகவல்...


இதுவரை 37 எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடதக்கது...

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ளது அய்வேலி கிராமத்தில் குடிநீர் குடித்த 50 பேர் வாந்தி மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி...


பெரும்பாலான இடங்களில் குடிநீர் என்ற பெயரில் துர்நாற்றம் வீசும் சாக்கடை நீர் , கலங்கலாக நிறம் மாறிய நீரே வநியோகம் செய்யப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தன்னீர் பஞ்சத்தால் வேறு வழியின்றி அவைகளை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு இது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றது.

அரசு இதை கவனிக்குமா ?

டென்மார்க் நாட்டிலிருந்து 60 ஜெர்ஸி வகை காளைகள் தனிவிமானம் மூலமாக சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் NDDB என்ற புராஜக்ட் நடந்துவருகிறது...


இதன் நோக்கம்:- டென்மார்க்கிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள காளைகளின் விந்தணுக்கள் நமது நாட்டு மாடுகளுக்கு செலுத்தப்பட்டு அதன் மூலம் A1 என்ற வகை பால் பெறப்படவுள்ளது.

இந்த பாலின் விபரீதம்:- இந்த A1 ரக பாலை தொடர்ந்து பருகிவந்தால் புற்றுநோய் விரைவில் தமிழகத்தில் பரவும் இதனால் என்ன பயன்?

தற்போது சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் பண்ணையை நிறுவிவரும் இதே நிறுவனம்தான் புற்றுநோய்க்கான மருந்தையும் தயாரிக்கிறது.

இந்த மருந்தை இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 350லட்சம் கோடிகளுக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஆரம்பகட்டப் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது.

சுமார் ஒருகோடி நம் நாட்டுமாடுகள் பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதுவே தற்போது ஜல்லிக்கட்டை இங்கு தடைசெய்வதற்கு முக்கியக்காரணம்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.

ரெட்ஹில்ஸ் பகுதியில் தற்போது பணிகள் நடைபெறும் NDDB புராஜக்ட் களத்தை கண்காணித்து முற்றுகைப் போராட்டத்தை தொடங்க வேண்டும்.

இளைஞர்களே.. கல்லூரி மாணவர்களே..

இப்போராட்டத்தை இத்துடன் முடிவுக்கு கொண்டு வராமல் அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லவேண்டியது நம் கைகளில் தான் உள்ளது.

மூன்றாவது உலகப் போருக்கு நாம் தயாராகவேண்டிய தருணமிது.

நம் அரசியல்வாதிகளை நம்பினால் நம் நாட்டை கூடிய விரைவில் சுடுகாடாக மாற்றி விடுவார்கள்.

சிந்திப்போம்.. செயல்படுவோம்...

நம்ப முடியாத உண்மைகள் கூகுள்..


எங்களைப் பொறுத்தவரை இந்தியர்கள் என்றால் அது தமிழர்கள்தான், இந்திய மொழி என்றால் அது தமிழ் மொழிதான்- சிங்கப்பூர் அரசு அதிரடி...


சிங்கப்பூரில் தமிழும் ஒரு ஆட்சி மொழியாக இருப்பது அனைவரும் அறிந்ததே. இது அங்கு வாழும் வட இந்தியர்களுக்கு வயித்தெரிச்சலையும், நமைச்சலையும் கொடுக்க..

சிங்கப்பூர் வாழ் வட இந்தியர்கள் அமைப்பு மூலம் சிங்கப்பூர் அரசிற்கு, இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி இந்திமொழி.

இந்திய அலுவல் மொழியும் இந்திதான், இங்கு இந்தி பேசும் மக்களும் நிறையபேர் வாழ்கிறார்கள்.

எனவே இங்கு ஆட்சி மொழியாக உள்ள தமிழை நீக்கிவிட்டு இந்தியா சார்பில் இந்தியை ஆட்சி மொழியாக ஆக்கவேண்டும்னு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதற்கு சிங்கப்பூர் அமைச்சகம் கொடுத்த மூக்குடைப்பு பதில்..

நாங்கள் சுதந்திரத்திற்காக போராடியபோது எங்களுடன் இணைந்து, எங்களுக்கு தோள் கொடுத்து, எங்களைப்போலவே ஆங்கிலேயர்களிடம் அடி வாங்கி, உயிர்த்தியாகங்கள் செய்தவர்கள் இங்கு வாழ்ந்த தமிழர்கள்.

அந்த சகோதர உணர்விற்காகத்தான் இங்கு தமிழையும் ஆட்சிமொழியாக வைத்துள்ளோம்.

எங்களைப் பொறுத்தவரை இந்தியர்கள் என்றால் அது தமிழர்கள் தான், இந்திய மொழி என்றால் அது தமிழ் மொழி தான்.

என்று கூறிய உடன், எந்த தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழவில்லை...

சென்னை மெரினாவில் போலிசார் தீவிர கண்காணிப்பு , கதிராமங்கலத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்படுவதாக வாட்சப் தகவல் எதிரொலி...


மெரினாவிற்கு செல்லும் இளைஞர்களிடம் தீவிர பரிசோதனை...

தியானம்...


மன அலைச் சுழலை Beta Frequency யிலிருந்து படிப்படியாகக் குறைக்கும் கலைக்கு தியானம் என்று பெயர்...

மனதின் அதிர்வெண்கள்..

14 - 40 Cycles / Sec Beta
8 - 13 Cycles / Sec Alpha
4- 7 Cycles / Sec Theta
1 - 3 Cycles / Sec Delta

அதிர்வெண்களை EEG (Electro Encephologram) மூலம் அறியலாம்.

நாம் பெரும்பாலும் பீட்டா நிலையிலேயே இருக்கின்றோம். இந்த நிலை உணர்ச்சிவயப்பட்ட நிலை.

ஆல்பா நிலை கொஞ்சம் அமைதியான நிலை. தியானம் செயதால் இது கிடைக்கும்.

தீட்டா நிலை ஆல்பாவிற்கு அடுத்த நிலை ஆழமான அமைதி.

டெல்டா நிலை இது மருத்துவ அறிவியலில் கோமா நிலை. இங்கே மனிதனுக்கு சுயநினைவு இருப்பதில்லை.

ஆனால் தவத்தில் பழகப் பழக மனம் இறைநிலையுடன் தொடர்பு கொள்ளும்
இதுதான் சமாதி...

அஷ்டாங்க யோகத்தின் கடைசிக் கட்டம் சமாதி....

யோகத்தின் வகைகள்..

யம, நியம, ஆசன, ப்ரத்தியாகாரா, ப்ராணாயாமா, தாரணா, தியானா, சமாதி
என எட்டு நிலைகள் கொண்டதே யோகம் .

இதில் தியானம் என்பது ஒரு படி
சக்கரங்கள்..

கண்ணுக்கு தெரியாமல் (சூட்சமத்தில் ) இருக்கக்கூடிய சக்தி மையங்கள் 7...

மூலாதாரம்,
ஸ்வாதிஸ்டானம் ,
மணிப்பூரகம் ,
அனாகதம்,
விசுத்தி ,
ஆக்ஞை ,
மற்றும் சஹஸ்ராரம் ( ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை )...

கீ.வீரமணியின் தற்சாதி (சுய சாதி) பற்று அல்லது வெறி...


தமிழர் தலைவர் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்டு பகுத்தறிவுவாதியாகவும் சாதி ஒழிப்பாளராகவும் தாலி ஒழிப்பாளராகவும் காட்டிக்கொண்டு இருக்கும் வீரமணியை என்ற போலியின் யாதவ சாதிப்பற்று...

சான்று கீழே..

இவர் தாக்கப்பட்ட போது இவரின் சாதியான யாதவ சாதி உணர்வை மைய இழையாக கொண்டு செயல்படும் யாதவ மகா சபை சமாஜ்வாடி (முலாயம் சிங் யாதவ்) ராஷ்ட்ரிய லோக் தல் (லல்லு பிரசாத் யாதவ் ) போன்றவை இவரை சந்தித்தது விடுதலையில் செய்தியாக வந்திருக்கிறது.

சாதியில் நம்பிக்கை அற்ற ஒருவர் அதிலும் "தமிழர் தலைவர்" ஒருவர் தனது சாதி சங்க ஆட்களுடன் சந்தித்து தனக்கு தனது சாதியினரின் ஆதரவு இருப்பதாக காட்டிக்கொள்வது என்ன வகையான சாதி ஒழிப்பு என்பது பகுத்தறிவுக்கே வெளிச்சம்...

நரேந்திர மோடி என்பவர் பிரதமரா அல்லது ஆள் கடத்தும் கூட்டத்தின் தலைவரா? லஞ்சம் கொடுத்து ஆட்களை கடத்து கட்சி எப்படி ஊழலுக்கு எதிராக போராடும்?


பாகிஸ்தானில் பிரமருக்கே தண்டனை அளித்து பதவி விலக வைத்தாக செய்தி...


தமிழக முன்னேற்றதிற்கான பாஜக மோடியின் மத்திய அரசின் திட்டங்கள் சில...


இம்பூட்டு தாங்க இந்திய ராணுவம்...


பொய் குற்றம் சுமத்தப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சகோதரி வளர்மதிக்கு ஜாமீன் பெற்றுத் தந்த வழக்கறிஞர் ஜாஹீர்அஹமது அவர்களுக்கு எங்களின் செஞ்சார்ந்த நன்றி...


3500 ஆயிரம் கோடி செலவில் இந்தியாவல் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணையை நம்பி போர் செய்ய மிகவும ஆபத்தானது - இந்திய சிஏஜி அதிர்ச்சி தகவல்...


நம்ம கட்டும் ABCD ஜிஎஸ்டி வரியெல்லாம் இப்படித் தான் வீணாகின்றது என புலம்புகின்றனர் பொதுமக்கள்..

சைனா ஏவுகணைகளை குறி வைத்து தாக்கும் ஆகாஷ் ஏவுகணைகள் சுமார் 3500 கோடி செலவில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. இந்த ஏவுகணைகள் ராணுவத்தால் சொதனை செய்யப்பட்டது.

இதில்  2 ஏவுகணைகள் புறப்படவே இல்லை எனவும் 6 ஏவுகணைகள் இலக்கை அடையவில்லை இது போருக்கு தகுதியானது அல்ல, இதை நம்பி போர் செய்வது மிகவும் ஆபத்தானது என இந்திய சிஏஜி தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

கன்னட பலிஜா ஈ.வே. ராமசாமி நாயக்கரும்.. சாதி ஒழிப்பும்...


தெலுங்கு நாயக்க சாதி கிளர்ந்தெழட்டும் - ஈ.வே.ரா அறைகூவல்...

ஓஜா பலகை மூலம் ஆவியுடன் பேசுவது எப்படி.?


ஓஜா பலகை பற்றி சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். எதிர்காலம் பற்றி அறியவும், இறந்தவர்களுடன் பேசவும் உதவும் ஊடகங்களில் பிரபலமானது இது தான்.

இதை தமிழில் ப்லாஞ்செட் பலகை எனவும் ஓஜா பலகை எனவும் இன்னும் பல விதமாகவும் சொல்கிறார்கள்.

இப்பதிவில் Ouija பலகை பற்றியும் அதை வீட்டில் செய்வது பற்றியும், பயன்படுத்தும் முறை பற்றியும் இதன் உண்மை தன்மை பற்றியும் சுருக்கமாக இப்பதிவு விளக்குகிறது.

ஆவியுடன் பேச ஒரு அறை வேண்டும். அங்கே விளக்கு, மின்விசிறியை அணைத்து விட வேண்டும். மேலும் குறைந்தது நான்கு பேர் தேவை. தரையில் கீழே உள்ள படத்தில் உள்ளவாறு சாக்பீஸால் வரைய வேண்டும். கூடவே ஒரு சிறு எவர்சில்வர் டம்ளரும், ஒரு சிறு மெழுகுவர்த்தியும் தேவை. அந்த மெழுகுவர்த்தி டம்ளரின் அளவிற்கு கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும். சாக்பீஸில் படத்தை வரைய வேண்டும்.

அனைவரும் சுற்றிலும் உட்கார வேண்டும் நடுவில் உள்ள வட்டத்தில் மெழுகுவர்த்தியை வைத்து கொளுத்தவும். பிறகு மெதுவாக எவர்சில்வர் டம்ளரை மெழுகுவர்த்தி மேல் கவிழ்க்க வேண்டும். எவர்சில்வர் டம்ளரின் மையத்தில் அனைவரும் தத்தம் கட்டை விரலை ஒன்றன் மேல் ஒன்றாக வைக்க வேண்டும். டம்ளரின் மையம் சூடாக இருக்கலாம்.

அனைவரும் சேர்ந்து ஆவி தோழரே வருக! ஆவி தோழரே வருக! வந்து எங்கள் எதிர்காலத்தை எங்களுக்கு சொல்லுங்கள்! ஆவி தோழரே வருக! ஆவி தோழரே வருக! என அழைக்க வேண்டும். பிறகு கட்டை விரலை எடுத்து விட்டு உங்கள் கேள்விகளை கேட்டால் ஆவி டம்ளரை நகர்த்தி பதில் சொல்லும்.

உதராணமாக எப்போது திருமணம் நடக்கும் என கேட்டால் அந்த வருடத்தை டம்ளரை குறிப்பிட்ட எண்களுக்கு நகர்த்தி பதில் சொல்லும்.

அதேபோல் பெயர், இடம் போன்றவைகளை சொல்ல எழுத்துக்களையும், ஆமாம், இல்லை என சொல்ல yes, no வையும் காண்பிக்கும்.

ஆவி உங்கள் கண்களுக்கு தெரியாது. அது குரலும் கேட்காது. ஆனால் டம்ளர் தானாக நகர்வது தெரியும்....

வந்தேறிகள் யார் ?


வந்தேறி என்பவன் மண், மொழி, மக்கள், உற்றார், உறவினர் என அனைத்தையும் உதறிவிட்டு மண்ணோ, பொன்னோ, பொருளோ தேடிப் பிரிதொரு நிலப்பரப்பிற்கு செல்பவன் ஆவான்.

இன்றும் வாழ வழியில்லாமல், வாழ்வின்மீது பற்றில்லாமல் ஊர் விட்டு ஊர் செல்பவர்களை பரதேசி - பரதேசம் செல்கிறார்கள் என்று கூறுவதுண்டு.

இவ்வாறு வந்தேறிகளாக வந்து தமிழ் நாட்டை ஆண்ட அரசர்கள் சாளுக்கியர்கள், ஹோசைலர்கள், மராட்டியர்கள், முகலாயர்கள், சாதவாகனர், சுல்தான்கள், களப்பிரர்கள், தெலுங்கு நாயக்கர்கள் ஆவார்கள்...

திருட்டு திராவிடம்...


திராவிடம் என்ற சொல்லை இந்தியாவில் புகுத்தியது வந்தேறி ராபர்ட் கால்டுவெல்ஸ் தான்..

கால்டுவெல் அவர்கள் ஆதாரமாக எடுத்துக் கொண்ட நூல் தந்திர வார்த்திகா என்னும் மீமாம்சத் தத்துவ உரை நூல்.

இதை எழுதியவர் கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குமாரில பட்டர் என்னும் வேதவித்வான். இவர் ஆதி சங்கரர் காலத்தில் வாழ்ந்தவர்.

திராவிடத்தின் எல்லைகள் என்று வடக்கே நர்மதை ஆறு குறிக்கபடுகிறது. நர்மதைக்கு கீழ் உள்ள மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடக, ஆந்திரா, கேரளா மட்டும் தமிழ் நாடு.

இந்த மாநிலங்கலில் தமிழ் நாட்டைத்தவிர திராவிடம் என்ற சொல்லும் திராவிட கட்சிகளும் இல்லை.

அப்படி என்றால் வந்தேறி காடுவேல்ஸ் புகுத்திய திராவிடம் ஏன் தமிழ்நாட்டில் மட்டும் எஞ்சி இருக்கிறது என்றால் தமிழ்நாட்டை தமிழன் அல்லாத திராவிடர்கள் என்று சொல்லி கொள்ளும் திராவிடத் தலைவர்கள் ஆள்வதற்காக செய்த சதி.

திராவிட கட்சிகளின் தமிழ் நாட்டை ஆண்ட முதலவர்கள் காமராஜர், பன்னீர் செல்வத்தையும் தவிர பச்சை தமிழன் எவரும் இல்லை. அவர்களும் சொற்ப காலமே ஆட்சி செய்தார்கள்.

மேலும் திராவிட எல்லைக்குல் என்று சொல்லி கொள்ளும் எந்த மாநிலத்திலும் தமிழனை முதல்வராக்க மாட்டர்கள். ஆனால் தமிழ்நாட்டில் திராவிடர்கள் என்று சொல்லி கொள்ளும் யாரை வேண்டுமானாலும் மக்கள் முதல்வராக ஆக்குவார்கள் இதுதான் சதி.

எடுத்துகாட்டாக 1921 ம் ஆண்டு திராவிடத்தை தொடங்கிய முதல் கட்சியான நீதி கட்சியின் சென்னை மாகாண அமைச்சரவை கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை எல்லாம் ஆதி திராவிடர் என்று அழைப்பது என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் கன்னடர்களும் தெலுங்கர்களும் அதை மாற்றி தங்கள் மொழி பேசுபவர்களை ஆதிகன்னடர், ஆதி தெலுங்கர் என்று தீர்மானத்தை மாற்றி விட்டார்கள் அப்போதே தமிழ் தலைவர்களை தவிர யாரும் திராவிடத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதில் என்ன சதி என்றால் நாம் இன்னும் ஆதி திராவிடர் என்ற பட்டியலில் தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளிகளுக்கு இடஒதுக்கீடு கொடுத்து கொண்டு இருக்கிறோம்...

வெந்தயத்தின் மருத்துவக்குணம்...


வெந்தயத்தை வறுத்து பொடி செய்து 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிச்சல் முதலியவைகள் போகும்.

வெந்தயம் 17 கி எடுத்து 340 கி பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட குருதி பெருகும்.

கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலை முழுகிவர முடி வளரும். அது முடி உதிர்ந்து போவதைத் தடுக்கும்.

வெந்தயத்தை உலர்த்தி பொடி செய்து மாவாக்கிக் களி கிண்டிக் கட்ட புண், பூச்சி நோய்களைப் போக்கும்.

வெந்தயத்தை வறுத்து இத்துடன் வறுத்த கோதுமையைச் சேர்த்து காப்பிக்குப் பதிலாக வழங்கலாம் இதனால் உடல் வெப்பம் நீங்கும்.

வெந்தய லேகியம்...

வெந்தயம், மிளகு, திப்பிலி, பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்துப் பொடி செய்து சர்க்கரைப் பாகில் போட்டு இலேகியமாகச் செய்து சாப்பிட சீதக்கழிச்சல், வெள்ளை, மேல் எரிச்சல், குருதியழல், தலைகனம், எலும்பைப் பற்றிய சுரம் தீரும்.

நீர் வேட்கை இளைப்பு நோய், கொடிய இருமல் இவைகளை விலக்கும். ஆண்மை தரும்.

வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் இவைகளை சமபாகம் எடுத்து நெய் விட்டு வறுத்து பொடி செய்து சோற்றுடன் கலந்துண்ண வயிற்றுவலி, பொருமல், வலப்பாடு இடப்பாட்டீரல் வீக்கங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வரும்.

மிளகாய், கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை இவைகளைத் தக்க அளவு எடுத்து நெய்விட்டு வறுத்து புளிக்குழம்பை இதில் கொட்டி உப்பு சேர்த்து சட்டியிலிட்டு அரைப்பாகம் சுண்டிய பின் இறக்கி சூட்டுடன் சாப்பிட வெப்பத்தால் நேரிடும் சிற்சிலப் பிணிகள் தணியும்.

இத்துடன் வாதுமை பருப்பு, கசகசா, கோதுமை நெய், பால், சர்க்கரை சேர்த்து கிண்டி உட்கொள்ள உடல் வலுக்கும். வன்மையுண்டாகும். இடுப்பு வலி தீரும்.

வெந்தயத்தை, சீமை அத்திப்பழம் சேர்த்தரைத்து கட்டிகளின் மீது பற்றுப்போட அவைகள் உடையும். படைகள் மீது பூச அவைகள் மாறும்.

வெந்தயத்தை, சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சை ஒரே எடையாகச் சேர்த்து குடிநீரிட்டு தேன் சிறிது கலந்து சாப்பிட இதயவலி, மூச்சடைப்பு இவை போகும்.

வெந்தயத்தை வேக வைத்து தேன் விட்டுக்கடைந்து உட்கொள்ள மலத்தை வெளியேற்றும். இது மார்புவலி, இருமல், மூலம், உட்புண் இவைகளைப் போக்கும்...

தொல்காப்பியர் காலத்தில்..


1-அரசன்,
2-அந்தணர் (பிராமணர் அல்ல)
3-வேளாளர்,
4-வணிகர்.

தமிழீழத்தில்..

1-அரசர்,
2-வேளாளர்,
3-அந்தணர்,
4-வணிகர் இப்படி இருந்தது.

தற்பொழுது..

பிராமணர்
ஷத்திரியர்,
வைசிரியர்,
சூத்திரர்

எனத் திரிக்கப்பட்டது யாரால்?

பார்ப்பார் அல்லது பார்ப்பனர் என்பது மறைநூல்களை பார்ப்பது என்று பொருள்...


இது தூயத்தமிழ்,  இதெப்படி ஆரியனுக்கு சூட்டப்பட்டது?

ஆரியர் வருகைக்கு முன் தமிழ் மறை நூல்களை பார்த்து, வழிபாடு, திருமணம் நடத்துவதை தமிழ் பார்ப்பனர் தொழிலாக கொண்டிருந்தனர்.

பின்னால் வந்த ஆரியர்கள் அத்தொழிலை தம்வயப்படுத்திக் கொண்டனர்.

தமிழ் பார்ப்பனர் தொழில் இழந்தனர்,
ஆரியர்கள் பார்ப்பன பட்டத்தை சுமந்தனர்.

தற்பொழுது தன் கைவிரலாலே தன் கண்ணை குத்தி குருடாக்கிக்கொள்வதை போல.

பார்ப்பான் பார்ப்பான் என்று இகழ்ந்துக் கொண்டிருக்கிறோம்...

29/07/2017

மொழியானது ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் போன்றது என்றார்- காந்தி...


யார் ஒருவர் மொழிகளின் சமத்துவத்தை அங்கீகரித்து அதற்காக போராடவில்லையோ, அவர் ஒரு குடிமகனே அல்ல என்றார் - புரட்சியாளர் லெனின்.

உழைப்பிலிருந்து தோன்றியதே மொழி என்றார் - புரட்சியாளர் ஏங்கல்சு.

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், அந்த மொழியை சிதைத்து விடு. அந்த இனம் தானாக அழிந்து விடும் என்றான் - இட்லர்.  

என் மொழி நாளை இறக்குமானால் நான் இன்றே இறந்து போவேன் என்று முழங்கினான் - அவாமொழி கவிஞன் ரசூல் கம்சத்.

இப்படி உலகத்தவர் அனைவரும் தத்தம்  தாய்மொழியை ‘உயிரென’ கருதி நின்றார்கள்.

ஆனால், நாமோ ‘மொழிதானே?’ என்று கருதி சாதியையும், மதத்தையும் தூக்கிப் பிடித்தோம். விளைவு.?

நம் மொழி, பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் சிதைந்தது..

தமிழர்கள் நாம் சாதியாய், மதமாய் பிளவுற்றோம்; சொந்த இன உறவுகளுக்குள்ளே சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் அடித்துக்கொண்டு செத்தோம்;

பின், ‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்பது போல வந்தேறிகள் (திராவிடர்கள்) நம் தாய்நிலத்தை ஆக்கிரமித்தார்கள்; தமிழர்கள் நம்மை திராவிடர்கள் என்றார்கள்; உரிமை பறி போனது; உடைமை பறிபோனது; கடைசியில், ஈழத்தில் ஒன்றே முக்கால் இலட்சம் தமிழ் உயிர்களும், தமிழகத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ் உயிர்களும் பறிபோனது.

இப்போது ‘தமிழர்’ என்ற உணர்வே செத்துப்போய் நம் அடையாளத்தையே இழந்து, மேடை போட்டு ‘நாம் அனைவரும் தமிழர். நாம் அனைவரும் தமிழர்.’ என்று முழங்கி நம்மை தட்டி எழுப்ப வேண்டிய இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இவ்வளவுக்கும் காரணம், ‘நம் தாய்மொழி தமிழ்தான் நம் அடையாளம்’ என்று உணராததே...