2006 இல் தடைசெய்யப்பட்ட கேடு விளைவிக்க கூடிய மைசூர் பருப்பை ரேசன் கடைகளில் விற்பனை செய்ய தற்போதை எடப்பாடி அரசு டெண்டர் வாங்கியிருக்கிறது.
இந்த பருப்பு மிகவும் ஆபத்தானது என 2006 கரூர் மாவட்ட நிர்வாகம் புகார் அளித்துள்ளது. அதையும் மீறி தற்போது டென்டர் வாங்கியுள்ளனர்.
தமிழகத்தை ஒட்டு மொத்தமாக அழிக்காமல் விடாது இந்த பாஜக பினாமி அரசு.
இப்போதைக்கு தமிழகத்தில் ரேசன் கடைகளில் பருப்பு தட்டுப்பாடு தலை விரித்து ஆடுகிறது.
ஒரு உருப்படியான திட்டமும் இல்லாத காரணத்தால் பருப்பு தட்டுப்பாடு நிலவி தற்போது மக்களுக்கு உலுந்தம் பருப்பு கிடைப்பதில்லை.
இதுநாள் வரையிலும் 1 கிலோ துவரம் பருப்பை ரூ.30க்கு வழங்கி வந்து கொண்டிருந்த நிலையில் பற்றாக்குயறையால் அதற்கு பதிலாக கனடா மஞ்சள் பருப்பை வழங்கி வந்தது.
அதிலும் என்ன செய்தார்களோ தெரியவில்லை அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பார்கள். அதைவிட சூரப்புலிகளாக இருக்கிறது நம்மை ஆளும் புலிகள். தட்டுபட்டால் தங்கள் மீசையில் மண் ஒட்டி விடுமோ என்று பயந்து தற்போது உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய மைசூர் பருப்பை வாங்க 30 ஆயிரம் டன்னுக்கு டென்டர் வாங்கி உள்ளது.
இந்த பருப்பு ஏற்கனவே அங்கன்வாடி, பள்ளி, ரேசன் கடைகளில், விற்பனை செய்யக்கூடாது என்று கூறி கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலையில்,
மைசூர் பருப்பை சாப்பிட்டால் கேடு என்றும் அப்போதைய கரூர் மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து அதை தடைசெய்தது.
பட்ட காலிலே படும் கெட்ட குடியிலே கெடும் என்பதை போல அதன் பிறகும் தற்போது மீண்டும் இந்த பருப்பை வாங்கி உள்ளனர்.
இதை பொது மக்களுக்கு வழங்க உள்ளனர். மக்கள் தெளிவுடன் இல்லாதால், தெளிவு பெற்ற அரசு இப்படி குழந்தைகளையும், மக்களையும், ஸ்லோ பாய்சன் மூலமாக கொல்ல முடிவு எடுத்துள்ளது எனலாம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.