உரிமை மீட்பு போராட்டங்களில் தமிழகம் தான் எப்போதும் முன்னிலையில் இருந்திருக்கிறது.
60 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஒலித்த குரல் இப்போது இந்தியா முழுவதும் ஒலிக்கப்போகிறது.
பெங்களூருவில் அண்மையில் 9 மாநிலங்களைச் சேர்ந்த மொழி அமைப்புகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மேற்குவங்கம், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 9 மாநிலங்களில் வலுவாக செயல்படும் மொழி அமைப்புகள் கலந்து கொண்டன.
இதில் இந்தி திணிப்பிற்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தி எதிர்ப்பு இயக்கத்தை நாடு முழுவதும் கொண்டு செல்வது என தீர்மானிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கன்னட ரக்ஷனா வேதிகா அமைப்பினர் பல்வேறு இந்தி எதிர்ப்பு போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில் ஆகஸ்ட் இறுதியில் டெல்லியில் பிரமாண்ட ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த கூட்டத்தில் ஏற்கனவே உள்ள 9 மாநில அமைப்புகளைத் தவிர, அஸாம் மற்றும் வடகிழக்கு மாநில அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
இந்த கூட்டத்தின் நோக்கம் நாடு முழுவதும் இந்தி திணிப்பை எதிர்த்து தீவிரமாக போராடுவது தான்.
எனவே எதிர்காலத்தில் இது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும் எனத் தெரிகிறது.
தமிழர்களை எதிரிகளாக பாவித்து வந்த கன்னட ரக்ஷன வேதிகா அமைப்பினர் அண்மையில் தமிழர்களை புகழ்ந்தனர்.
அந்த அமைப்பின் முக்கியத் தலைவரான நாராயண கவுடா, மொழியை பாதுகாப்பது எப்படி என்பதை தமிழர்களை பார்த்து கன்னடர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.