17/07/2017

தீர்க்க தரிசி எரிக்கும் நாஜி படையும்...


1930 எரிக் தனது அசாத்திய அமானுஷ்ய ஆற்றல் மூலம் கிடைத்த புகழையும் பொருளையும் மூலதனமாக கொண்டு இரண்டு இதழ்களை தொடங்குகிறார். ஹன்னுசின் மேகசின் எனும் மாதந்திர இதழும், மற்றுமொரு இருவாரங்களுக்கு ஒரு முறை வெளிவரும் இதழ், ஒன்றையும் துவங்கி நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரம் குறித்த தனது முன்னறிவிப்பு மற்றும் மறைபொருள் குறித்த செய்திகளை இந்த இதழ்களின் மூலம் எரிக் வெளிப்படுத்தினார்.

அதில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முன்னறிவிப்பினை வெளியிட்டார். ஜெர்மனியின் பெரும் கூட்டு பங்கு பணபரிவர்த்தனை செய்யும் வங்கிகள் சரிவினை சந்திக்கும் என்ற அவரது கணிப்பு அடுத்த மூன்று வாரங்களில் நிஜமானது. ஜெர்மனியின் மிக முக்கிய இரண்டு வங்கிகள் இழுத்து மூடப்பட்டது .

1932 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எரிக் தனது பத்திரிக்கையில் மேலும் ஒரு செய்தியை வெளியிடுகிறார் "ஹம்பர்க் நகரம் அருகே ரத்த ஆறு ஓடுவதை" தன்னால் காண முடிவாதாக வெளியிட்டார் .சில நாட்களில் ஹாம்பர்க் நகரின் அருகே உள்ள அட்லான நகரில் கம்யுனிஸ்ட் மற்றும் நாஜி படைக்கும் இடையே நடைபெற்ற ஐந்து மணிநேர கோரமான போரில், அட்லான நகரில் ரத்த ஆறு ஓடியது இந்த போர் அட்லானவின் கருப்பு ஞாயிறு என அழைக்கபடுகிறது .எரிக் இதனை தன் தீர்க்கதரிசனம் மூலம் அறிந்து கொண்டார ,அல்லது உயர் அதிகாரிகளின் மூலம் இந்த ரகசியங்களை அறிந்து வெளியிடுகிறாரா, என சந்தேகங்கள் இருந்த போதும் பெரும் பணம்படைத்தவர்கள் எரிக்கின் ஆலோசனையை நாடத்தொடங்கினார். தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள .

இந்த நிலையில் நாஜிக்களின் படையுடன் படையின் முக்கியஸ்தர்களுடன் எரிக் நட்ப்பினை வளர்த்து கொண்டார். மேலும் இவ்வாறு நாஜிக்களுடன் தனது நடப்பை வலுபடுத்தி கொண்டபோதும் . சாமானிய மக்களுடனும் எரிக் நெருங்கி பழகிவந்தார்
சில வரலாற்று அறிஞர்களின் கூற்று படி நாஜிக்களுக்கு ஸ்வஸ்திக் சின்னத்தினை தங்கள் சின்னமாக வைக்கும் படி கூறியது எரிக் தான், இந்துக்களின் இந்த சின்னம் நாஜிக்களுக்கு பெரும் வெற்றியை தேடி தரும் என்றும் அவர் கூறியதாகவும் கூறுகின்றனர் .மேலும் தனது இதழ்களில் எரிக் தேர்தலில் கோள்களின் நிலைப்படி ஹிட்லரே மகத்தான வெற்றியை அடைவார் எனவும் ,அவருக்கே காலநிலை சாதகமாக இருப்பதாகவும் எழுதி தனது பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார் .

மேலும் ஜேர்மனிய பத்திரிகையலர்களின் கூற்று ஹிட்லருக்கு மேடை பேச்சிற்கு எரிக்கே மூல காரணம், ஹிட்லருக்கு எரிக் மேடை பேச்சின் நெளிவு சுழிவுகளை பயிற்சி அளித்ததாகவும் கூறுகின்றனர். மேடை நிகழ்ச்சி நடத்தி புகழ் பெற்ற எரிக் ஹிட்லருக்கு வார்த்தையை உச்சர்க்கும் விதம் உடல்மொழி போன்றவற்றை பயிற்றுவித்ததாக கூறுகின்றனர். இந்த அசாத்திய பேச்சுத்திறன் மற்றும் தவறான நம்பிக்கையின் காரணமாக ஹிட்லர் தன் தேசத்தையும் இந்த உலகத்தையும் போரை நோக்கி கொண்டு சென்றார். எரிக்கும் செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தார்.

அடுத்த பகுதியில் காண்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.