17/07/2017

பாரிஸ் தாக்குதலும் இலுமினாட்டி பின்னனி சந்தேகங்களும்...


13.11.2015 ஃப்ரான்சின் தலை நகர் பாரிஸ் மற்றும் அதை அண்டிய பகுதிகளில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கும் இலுமினாட்டிக்கும் இடையில் தொடர்பிருக்கலாம் எனக்கு தோன்றியதால் அதுபற்றி நான் தேடியதையும் ஊகிப்பதையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய தேசம் என்ற பெயரின் கீழ் இயங்கும் அமைப்பு காரணமென ஊகிக்கப்பட்டு அதை அவ் அமைப்பும் உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. (ஃப்ரான்சில் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அதிக உயிர்களை பலிகொண்ட தாக்குதலாகும்.).

தாக்குதல் நடத்தப்பட்ட நாள்.

சரியாக 13.11.2015 இல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே இலுமினாட்டி தொடர்பாக நாம் பார்க்கையில் அவர்களின் விருப்ப இலக்கங்களாக 13 ,33, 11, (9) குறிப்பிட்டிருந்தேன்.

அதையே இத்தாக்குதலும் உறுதி செய்துள்ளது.

தாக்குதல் நேரம் கூட இரவு 9 மணியை அண்டிய நேரத்தில் நடைபெற்றுள்ளதோடு அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய‌ bataclan அரங்கத்தாக்குதல் பாரிஸ் 11 பகுதியில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


இது எதேர்ச்சையாக நடைபெற்றதா அல்லது திட்டமா என்ற கேள்வி சிந்தனையாளர் மனதில் நிற்கிறது.

பெரும்பாலும் இவ்வாறான தாக்குதல்கள் வார பிற்பகுதியில் நடைபெறுவதையும் அவதானிக்க முடிகிறது. (ஒரு வேளை சர்வதேச வியாபாரத்தை பாதிக்காதவாறு திட்டம் தீட்டி இருக்கலாம்.).

இலுமினாட்டி அட்டைகளில் இருந்து சில குறிப்புகளை பார்க்கலாம்.

இவ் இரண்டு அட்டைகளும் இவ் வருடத்தில் ஃப்ரான்சில் நடைபெற்ற தாக்குதல்களுடன் சற்று ஒத்துப்போவதாகவுள்ளது.

படம் 1: ஒரு அரங்கத்திற்கு விழும் அடியாக உள்ளது. அவ் அரங்கள் நேற்று தாக்குதலுக்குள்ளான bataclan அரங்கமாக இருக்கலாம்.

படம் 2: வருட ஆரம்பத்தில் நடைபெற்ற (7-9.2015) charlie hebdo attak உடன் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். குறித்த நபர் charlie hebdo வாக இருக்கலாம். (இத்தாக்குதலின் பின்னர் அப்பத்திரிகையின் வியாபாரம் பல மடங்கு அதிகரித்தது. அப் பத்திரிகையின் உரிமையாளர் ஒரு யூதர்).

அதே நேரம், தாக்குதல் பகுதிகளில் இருந்து தப்பிய சிலரின் வாக்குமூலங்கள்..

அல்லாஷ் அக்பர் என தீவிரவாதி கூச்சலிட்டார்.

சிரியாவில் நீங்கள் செய்ததற்கான பலன் என கூச்சலிட்டார். (சிரியா யுத்தத்தில் ஃப்ரான்சின் பங்கு அதிகம்.) உங்கள் ஜனாதிபதி விட்ட தவறு என கூச்சலிட்டார்.
– என வாக்கு மூலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இது தாக்குதல் நடத்தியவர்கள் இஸ்லாமியர்கள் என்பதை குறிப்பதாகவுள்ளது. இது இஸ்லாமியருக்கு எதிராக நடைபெறும் தாக்குதலுக்கு ஐரோப்பிய மக்களிடையே ஆதரவை தேடித்தரும் நோக்கு என ஒரு சாரார் கருத்து தெரிவித்துள்ளனர்.


இந்த இஸ்லாமிய அமைப்பை நீண்ட நாட்களாக முயன்றும் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் ஒடுக்க முடியாமல் இருப்பது ஒரு வேடிக்கை.

இத்தீவிரவாதிகளுக்கும் அவர்களே ஆயுத வினியோகம் செய்வதாக ஒரு கருத்துள்ளது. அது உண்மையாக இருப்பதற்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன. இது ஒரு வியாபாரம்.

அதில் ரஷ்யா குறுக்கிட்டு கடந்த சில மாதங்களாக மேற்கத்தைய சிந்தனைகளுக்குள் முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

அதற்காக சொந்த நாட்டு மக்களை ஒரு நாடு கொல்லுமா என்ற கேள்வியுள்ளது. அதற்கு ஆம் என்ற பதிலை தாராளமாக சொல்லலாம்.

Operation Gladio என்று இத்தாலியில் நடைபெற்ற ஒரு திட்டமிட்ட தொடரூந்து நிலைய தாக்குதலின் பின்னனியில் CIA மற்றும் இத்தாலிய உளவுத்துறை செயற்பட்டமை தனியார் உளவு நிறுவனங்கள் மூலம் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டது. பின்னர் அவ் நிறுவனங்கள் இல்லாமல் போனது..

அதேவேளை மேலும் ஒரு குறிப்பாக, நாஸ்ராடமஸின் எதிர்வு கூறல்களிலும் பரிஸில் இவ்வாறான ஒரு தாக்குதல் இடம்பெறும் என்ற குறிப்புக்கள் உள்ளன. அதுவும் இஸ்லாமிய தேசத்தாரால் என குறிக்கப்பட்டுள்ளது.

இது பற்றிய போதுமான அலசல் இணையத்தில் இடம்பெறவில்லை.
அலசலின் பின்னர் மேலதிக தகவல்கள் இணைக்கப்படும்.

Ref : sott , toolsforfreedom, beforeitsnews, veteranstoday (3592)...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.