தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் உள்ளதாகவும் அதன் மீது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். அதிமுகவின் ஓபிஎஸ் அணியின் பிரதான கோரிக்கையே அது தான்.
ஜெயலலிதாவின் மரணத்தில் சசிகலாவுக்கு பெரும் பங்கு இருப்பதாகவே பலரும் சந்தேகங்களை தெரிவிக்கின்றனர். இதனால் சசிகலா தான் ஜெயலலிதாவை கொன்றார் என்ற பிம்பம் மக்கள் மத்தியில் உருவாகி வந்தது.
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதும் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சர்ச்சைகள் அமைதியானது. இதனால் சசிகலா மீதான ஜெயலலிதா மரணம் தொடர்பான பிம்பமும் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது.
இந்நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் பழைய விஷயங்களை கிளறும் விதமாக ஊடகங்களில் பேசியது சசிகலாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஊடகத்தில் பேசிய நடராஜன், நாங்கள் ஜெயலலிதாவுக்கு மெல்ல கொல்லும் விஷ ஊசி போட்டோம் என்று முன்பு சொன்னார்கள்.
அதெல்லாம் பொய் என ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் நிரூபித்தன என்றார்.
நடராஜ் தேவையில்லாமல் விஷ ஊசி குற்றச்சாட்டுகளை பற்றி பேசி அதனை நினைவுப்படுத்துவதால் சசிகலா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் நடராஜன் மீது கோபத்தில் உள்ளதாக தகவல்கள் வருகின்றன...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.