புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து காரைக்காலில் நடைபெற்று வரும் முழுஅடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புதுவை மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு தெரியாமல் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, பாரதிய ஜனதா நிர்வாகிகளை MLA-க்களாக நியமனம் செய்ததை கண்டித்து இந்த முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மக்களாட்சிக்கு எதிராக செயல்படும் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என பல்வேறு கட்சிகள் கோரியுள்ளன.
காரைக்கால் மாவட்டத்திலுள்ள காரைக்கால், திருநள்ளாறு, கோட்டுச்சேரி உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடது சாரிகள் உட்பட பல்வேறு அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பெரும்பாலான இடங்களில் இயங்கவில்லை. தனியார் ஆட்டோக்களும், வாகனங்களும் இயங்கவில்லை.
இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் காரணமாக மாவட்டம் முழுவதும் மீன் விற்பனை நிறுத்தம் காரணமாக மீன் ஏற்றுமதி பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதே காரணத்திற்காக கடந்த 8-ம் தேதி புதுச்சேரி முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது காரைக்காலில் மாங்கனி திருவிழா நடைபெற்றதால் முழுஅடைப்பு இங்கு நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.