ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு வருமான வரி செலுத்த இன்று கடைசி நாள் என்பதால் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகம் சனி மற்றும் ஞாயிற்றுகிழமை திறந்திருக்கும் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
தீபெட்டியில் இருந்து திங்கிர முட்டாய் வரைக்கும் வரியை கொடுத்துவிட்டு அது போதாது என எல்லாவற்றிற்கும் வரியை கட்டிவிட்டு மீதம் இருக்கும் சம்பாத்தியத்திலும் வருமான வரி என கால் வாசியை கொடுத்து விட்டு குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் தெரு தெருவாய் அழைந்து கடையில் சாக்கடை தண்ணீர குடித்து ஆஸ்பத்திரியில் படுக்கும் மக்களின் பரிதாப நிலையை நினைத்தால் வேதனையாக உள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
நமக்கு அரசு இவ்வளவு செய்கின்றதே என மக்கள் மனமுவந்து வரியை கட்ட முன்வரும் படி அரசு நடந்து கொண்டால் இது போன்று சனி ஞாயிறுகளிலும் கடையை திறந்து வைத்து கூவி கூவி அழைக்க வேண்டிய அவசியம் இருக்காது.
மக்களிடம் வரி வசுல் செய்யும் அலுவலகத்தை சனி ஞாயிறுகளில் திறந்து வைக்கும் அரசு , மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் அந்த முன்னெடுப்பதை ஏன் செய்வில்லை ஏன் மெத்தனமாக உள்ளது என்பது பாதிக்கப்படும் மக்களின் கேள்வியாக உள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.