01/08/2017

சிலம்பு ரயிலில் ஃபேன் வேலை செய்யவில்லை, டிடிஆர் யை காணவில்லை, ரயில்வே துறைக்கு ட்வீட் செய்த ஒரு மணி நேரத்தில் அலறி அடித்து வந்த அதிகாரிகள், சென்னை பயணி மகிழ்ச்சி...


சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த விஜய் பரத் என்பவர் குற்றாலத்தில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். அவர் ஏறிய சிலம்பன் ரயியிலில் மின்சார விசிறி வேலை செய்யவில்லை.

TTR ஐ தேடி பார்த்துள்ளனார், நீண்ட நேரம் ஆகியும் அவர் வரவில்லை. உடனடியாக விஜய் பரத் மத்திய ரயில்வே துறைக்கு ட்வீட் செய்துள்ளார்.

அவர் எதிர்பார்க்காத வகையில் உடனடியாக அதற்கு பதில் வந்தது, ”எந்த ரயில் என்ன கோச் உங்க PNR நம்பர் என்ன என ரயில்வே துறையின் டிவிட்டர் பக்கம் விஜய் பரத்திடம் கேட்க அவரும் உரிய தகவல்களை கொடுத்ததுள்ளார். அவ்வளவு தான். அடுத்த ரயில்வே நிலையத்தில் மெக்கானிக்கு பழுதை சரி செய்ய தயாராக காத்திருந்துள்ளார்.

அடுத்த ரயில் நிலையம் வந்ததும் மெக்கானிக், விஜய் பரத் பயணித்த கோச்சில் ஏறி மின்விசிறியை சரி செய்து கொடுத்துள்ளார்.

உங்கள் பிரச்சனை சரி செய்யப்பட்டதும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் என ரயில்வே துறை கேட்டுக் கொண்டதற்கிணங்க விஜய் பரத்தும் ”தற்போது ஃபேன் வேலை செய்கின்றது” என நன்றி தெரிவித்து ரயில்வே துறைக்கு ட்வீட் செய்துள்ளார்.

புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் ஃபேன் சரி செய்யப்பட்ட மகிழ்ச்சியில் விஜய் பரத் சென்னை திரும்பினார்.

ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் உடனடியாக ரயில்வே துறைக்கு ட்வீட் செய்து தங்கள் குறைகளை சரி செய்து கொள்ளலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.